Thursday, July 31, 2014

படுகொலை பயம்.. சோனியா பிரதமராவதை தடுக்க "கெடு" வைத்த ராகுல்..: நட்வர் சிங்கின் "குண்டுவீச்சு"

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து போராட்டம் நடத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். நட்வர்சிங்.. தீவிர அரசியலில் இருந்த காலத்திலும் சர்ச்சைதான்.. இப்போதும் சர்ச்சைதான்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2005ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நட்வர்சிங், ஈராக்குக்கான மருந்துகள், உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால் ராஜினாமா செய்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைவிட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒரு சுயசரிதை (ஒன் லைப் இஸ் நாட் எனப்) எழுதி இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட சோனியா உள்ளிட்டோரின் தூக்கம் தொலைந்தது.

கைதிகளின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எதிர்ப்பு... அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம்

வாஷிங்டன்: உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்காக சீனக் கைதிகள் மரண தண்டனை என்ற பெயரில் சீனக் கைதிகள் கொல்லப் படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மரணதண்டனை விதிக்கப்படும் கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தும் வழக்கம் உண்டு. இதற்கு நீண்ட காலமாக மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. 
அதனைத் தொடர்ந்து இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் இந்த வழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடுவதாக கடந்த 2012-ம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. விவாதம்.... இந்நிலையில், நேற்று அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழுவில் இது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீனாவில் இன்னமும் இத்தகைய உடல் உறுப்பு நீக்க செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான மற்றும் நிலையான அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறப்பட்டது. ஃபலுன் கோங் பிரிவு... குறிப்பாக கடந்த 1999-ம் ஆண்டு சீனாவில் தீய வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகத் தடை செய்யப்பட்ட ஃபலுன் கோங் பிரிவின் பெரும்பான்மையோரும், மற்ற சிறுபான்மை மதத்தினரும் இத்தகைய வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டு... மேலும், இவர்களை இலக்காகக் கொண்டு வன்முறைகளைப் பிரயோகிக்கும் அரசு, உடல் உறுப்புகளுக்காக இவர்களை மரண தண்டனை என்ற பெயரில் கொல்வதாக அமெரிக்க அரசின் தீர்மானத்திற்கான தலைமை ஆதரவாளரான இல்லியானா ரோஸ் லெஹ்டினென் குற்றம்சாட்டினார். தீர்மானம்.... இதனைத் தொடர்ந்து சீனா உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், சீன அரசுத்துறை இதுகுறித்து ஒரு விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிருப்தி... இந்தத் தீர்மானம் குறித்துக் கேள்விப்பட்ட அமெரிக்காவிற்கான சீனத் தூதரகத்தின் தகவல் தொடர்பாளரான கெங் ஷுவாங், இதற்கு சீன அரசின் வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம்... மேலும், சீன அரசின் கட்டுப்பாடுகளின்படி ஒவ்வொரு உறுப்புதானத்தின்போதும் கொடையாளரின் விருப்பம் எழுத்து மூலம் பெறப்படுகின்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

லிபியா: பெங்காஸி நகரை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

லிபியாவின் 2வது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கம் அறிவித்துள்ளது. லிபியா அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து கிளர்ச்சியாளர்கள் கை மேலோங்கி வருகிறது. இதனால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மூடியது. 
ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன. லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பான அன்சர் அல் ஷரியா கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை வன்முறைக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிர் பயத்தில் நாட்டை விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறும் மக்கள் அண்டை நாடான துனிசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அன்சர் அல் ஷரியா கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அறிவித்து தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய அன்சர் அல் ஷரியா என்ற இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது. பெங்காஸியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.


இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு பொலிவியா பிரகடனம்

காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பொலிவியா என்பது குறிப்பிடத்தக்கது.

லினோவா P780 மொபைல் ஒரு சிறப்பு பார்வை

இன்றுள்ள மொபைல் சந்தை போட்டியில் தினந்தோறும் பல மொபைல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன அதுவும் பல புதிய புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துகொண்டே இருக்கின்றது. அந்தவகையில் சென்ற மாதம் வெளிவந்து தற்போது சந்தையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது லினோவா P780 அப்படி என்னதான் இந்த மொபைலில் இருக்கிறது என்று இந்த மொபைலை கம்பெனியில் இருந்து வாங்கி 7 நாட்கள் பயன்படுத்தி பார்த்தோம். அதில் இந்த மொபைலில் பல வியக்கும் ஆப்ஷன்கள் இருப்பது நமக்கு தெரியவந்தது அப்படி மத்த மொபைல்ல இல்லாத ஆப்ஷன் அதுல மட்டும் அப்படி என்ன இருக்குதுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்க இதோ அந்த ஆப்ஷன்களை பார்போமா. இந்த மொபைலின் தனித்துவம் என்று சொன்னால் அதில் இருக்கும் பேட்டரி தான் முதலில் நமக்கு தெரிகிறது, மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரி திறன் 2000mAh தான் ஆனால் இதில் இருப்பதோ 4000mAh உள்ளது இது உங்களது பேட்டரி பேக் அப்பை இருமடங்கு தருகிறது. மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது மேலும் கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய சைட் கிரிப்புடன் கிரிப்புடன் இருக்கிறது இந்த மொபைல். இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் இந்த எடை சற்று அதிகம் தான் ஆனால் மற்ற மொபைகளை ஒப்பிடுகையில் இதன் எடை சற்று குறைவே என்று கூறலாம். இதில் பென்டிரைவ் போட்டு கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களை செக் மற்றும் காப்பி செய்தும் கொள்ளலாம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம் உண்மையிலேயே இது புதுமையான ஆப்ஷனாக நமக்கு இருந்தது. அத்தோடு இந்ச மொபைல் ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும் இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான படங்களை நாம் எடுக்கலாம்.

மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்

தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி பார்க்கலாமாங்க.



5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB க்கு ரேமும் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது. இதன் பேட்டரி திறன் 2350mAh ஆகும் மேலும் இந்த மொபைலின் விலை ரூ.10,499 ஆகும்.

ட்விட்டரில் சிரிப்பாய் சிரிக்கும் துருக்கி பெண்கள்








அங்காரா: பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று துருக்கியின் துணை பிரதமர் கூறியதை அடுத்து பெண்கள் ட்விட்டரில் சிரித்துத் தள்ளுகிறார்கள். துருக்கியின் துணை பிரதமரான புலென்ட் அரின்க் பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அரின்கின் அறிவுரையை கேட்ட துருக்கிப் பெண்கள் ட்விட்டரில் தாங்கள் சிரித்தவாறு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


காகஹா(#kahkaha) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்யவிடுகிறார்கள். காகஹா என்றால் துருக்கிய மொழியில் சிரிப்பு என்று பொருள்.


அரின்க் திங்கட்கிழமை அறிவுரை செய்ததில் இருந்து கடந்த 3 நாட்களில் ஆயிரக் கணக்கான பெண்கள் தாங்கள் சிரித்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அரின்க் சீரியஸாக கூறிய விஷயத்தை துருக்கிய பெண்கள் காமெடியாக்கிவிட்டனர்.