டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து போராட்டம் நடத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். நட்வர்சிங்.. தீவிர அரசியலில் இருந்த காலத்திலும் சர்ச்சைதான்.. இப்போதும் சர்ச்சைதான்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2005ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நட்வர்சிங், ஈராக்குக்கான மருந்துகள், உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால் ராஜினாமா செய்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைவிட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒரு சுயசரிதை (ஒன் லைப் இஸ் நாட் எனப்) எழுதி இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட சோனியா உள்ளிட்டோரின் தூக்கம் தொலைந்தது.