Thursday, July 31, 2014

ட்விட்டரில் சிரிப்பாய் சிரிக்கும் துருக்கி பெண்கள்








அங்காரா: பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று துருக்கியின் துணை பிரதமர் கூறியதை அடுத்து பெண்கள் ட்விட்டரில் சிரித்துத் தள்ளுகிறார்கள். துருக்கியின் துணை பிரதமரான புலென்ட் அரின்க் பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அரின்கின் அறிவுரையை கேட்ட துருக்கிப் பெண்கள் ட்விட்டரில் தாங்கள் சிரித்தவாறு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


காகஹா(#kahkaha) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்யவிடுகிறார்கள். காகஹா என்றால் துருக்கிய மொழியில் சிரிப்பு என்று பொருள்.


அரின்க் திங்கட்கிழமை அறிவுரை செய்ததில் இருந்து கடந்த 3 நாட்களில் ஆயிரக் கணக்கான பெண்கள் தாங்கள் சிரித்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அரின்க் சீரியஸாக கூறிய விஷயத்தை துருக்கிய பெண்கள் காமெடியாக்கிவிட்டனர்.