Tuesday, August 20, 2013

நாம் காணும் கனவுகளும் உளவியல் உண்மையும்



        நாம் காணும் கனவுகளும் 

                  உளவியல்  உண்மையும் 



கனவுகள் சில சமயம் நடக்கப் போவதைக் கூறும். இது மூடநம்பிக்கைக் கிடையாது. யூங் கண்ட உளவியல் உண்மை இது. தொடக்கத்தில் மறுத்த ஃப்ராய்ட் கடைசியில் ஏற்றுக் கொண்டார். இதைக் கொண்டு கண்ட கனவு நடந்துவிடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. எந்தக் கனவு கடக்கும் என்று யாருக்கும் தெரியாது. பிரம்ம முகூர்த்ததில் வரும் கனவு பலிக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. அதற்கும் உத்திரவாதம் இல்லை.

ESP ஆற்றல் உடையோருக்கே இது சாத்தியம். பிரெஞ்சு அறிஞர் நாஸ்ட்ரடாமஸ் 600 ஆண்டுகளுக்கு முன்பு வருவது உரைத்தார். அவை ESP வாயிலாக அவர் கண்ட கனவுகள். மிக அரிதாக ஒருசிலருக்கே இந்த ஆற்றல் இயற்கையாக அமைந்திருக்கும். குறிப்பாக 'ஓ நெகடிவ்' இரத்த வகையினருக்கு வாய்ப்புகள் அதிகம். நிலத்தடி நீர் மட்டம் பார்ப்போர் பெரும்பாலும் இவ்வகையினராக இருப்பர். ஏனையோருக்கு ஏதோ ஒரு கனவு என்றாவது நடக்கும். யோகத்தில் இருப்போருக்கு இவ்வாற்றல் கைக்கூடும். பல யோகிகள் தமது மரணத்தை முன்பே அறிந்து தெரிவித்துள்ளனர். சாதாரண மனிதனுக்கு ESP இல்லாமல் இருப்பதே நல்லது. பிறகு நிம்மதியாக வாழ முடியாது.