Saturday, July 6, 2013
பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மூன்று புதிய பூமிகள் கண்டுபிடிப்பு!
பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மூன்று புதிய பூமிகள் கண்டுபிடிப்பு!
சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் கிளைஸ் 667சி நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் இந்த மூன்று பூமிகளும் சுற்றி வருகின்றன. சூரியனைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுடைய இந்த நட்சத்திரத்தை இந்த பூமிகள் சுற்றிவருகிறபோது நிலவும் வெப்பநிலை காரணமாக அங்கு தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோள்கள் நமது பூமியில் உள்ள பாறையை போன்று நிலப்பரப்புடனும், ஆனால், பூமியை விட பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இதனை ‘சூப்பர் எர்த்ஸ்’ என்றும் அழைக்கின்றனர். மேலும் இங்கு கோள்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு துளி இரத்தத்தில் ஒரு எலி உருவாக்கம்: ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை!
ஒரு துளி இரத்தத்தில் ஒரு எலி உருவாக்கம்: ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை!
ஒரு துளி ரத்தத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் எலியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
முதன் முறையாக குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பன்றிகள் போன்ற விலங்கினங்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது அதி நவீன முறையில் ஒரு துளி ரத்தத்தில் பெண் எலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானின் கோபே நகரில் உள்ள ரிகென் மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த எலி மற்ற எலிகளை போன்று அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது.
இவற்றால் இயற்கை முறையில் ஆண் எலியுடன் சேர்ந்து கருத்தரித்து குட்டி போட முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தத்துவமும் சிறப்பும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்.
சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும்பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்றுஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம்பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.
வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக்கணக்கிட்டுள்ளனர்.
வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றிமருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.
உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்தமருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.
மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனதுகூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம்அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்பமுறை தொகை சரக்கு முறை (திரிகடுகு திரிபலா திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாததனிச் சிறப்பாகும்.
சித்த வைத்தியம்
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் தமிழ் மண்ணில் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் நாகரீகம், பண்பாடு, கலை,ஞானம் போன்றவற்றில் வேரூன்றி தமிழர்களின் உணர்வில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்ற மருத்துவம்சித்த மருத்துவம் ஆகும்.
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள், திருமந்திரம் போன்றநூல்களிலும் கி.மு 4500 லிருந்து 1600 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்களிலும்சரபேந்திரர் சித்த மருத்துவச்சுடர் என்னும் ஏட்டுச் சுவடிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் சங்ககால தமிழ்இலக்கியங்களிலும் சித்த மருத்துவம் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைகாண முடிகிறது. இவ்வாதாரங்களைஅறிஞர் பெருமக்கள் பலரும் பல் வேறு நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக மேலைநாட்டு நாகரீகம் தோன்றுவதற்கு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்அதாவது துலாபாரயுகம்இரணடாயிரத்து ஒன்பதுக்கு (நூந்று தொன்னூற்று ஐந்து கோடியே ஐம்பத்து நூறாயிரத்து ஏழுபத்து மூன்று)முன் தன்னிகரில்லா சித்த மருத்துவம் தோன்றியதாக வரையறுக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவமானதுதிராவிடர் மருத்துவம், தமிழர் மருத்துவம், செந்தமிழ் மருத்துவம் என பல்வேறு பெயர்களில்அழைக்கப்படுகிறது.
வரலாற்று வல்லுநர்களின் கூற்றுப்படி உலகிலுள்ள அனைத்து பிரிவினர்களிலும் முந்தியவர்களாகவிளங்குகின்ற திராவிடர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் திராவிடர் மருத்துவம் எனஅழைக்கப்படுகிறது.
மனித உயிரினம் முதன் முதலில் தோன்றிய இடமான குமரிக்கண்டம் தான் தமிழர்களின் தாயகம் என்பதுவரலாற்று உண்மை. இத்தொல்குடி மக்களாகிய தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் தமிழர்மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது .
உலக மொழிகளில் முதன் முதலில் செம்மையுள்ள மொழி தமிழ் மொழி ஆகும். சித்தர்கள் உடலுக்கும்,உள்ளத்திற்கும் நன்மை செய்கின்ற சித்தமருத்துவத்தை பாடல் உருவிலும் மக்கள் நன்கறிந்தசெந்தமிழிலும் வழங்கியதால் இம்மருத்துவம் செந்தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.
உலக உயிரினங்களின் இன்னல்களை நீக்க அயராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெளிந்து ஆயக்கலைகள்அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும், உள்ளநலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற ஒரு மருத்துவ முறையைத்தந்தவர்கள் சித்தர்கள் என்பதால் இது சித்த மருத்துவம் என்று கூறப்படுகின்றது.
உலக மருத்துவ முறைகளுக்கெல்லாம் மூல மருத்துவமாகவும், மரபு வழி மருத்துவத்திற்கு மணிமகுடமாகவும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன்தோன்றி ய மூத்த குடி மக்களாகியஆதிகாலத்தில் வாழ்ந்த திராவிடர்களின் சொந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் என்பதில் எவர்க்கும்ஐயமில்லை.
thank to:- santhan com
thank to:- santhan com
Friday, July 5, 2013
உடல் நலப்பரிசோதனை - எந்த அளவுக்கு நலமானது?
உடல் நலப்பரிசோதனை - எந்த
அளவுக்கு நலமானது?
உயர் தொழில்நுட்ப நவீன மருத்துவம் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிறையச் செய்திருக்கிற அதேவேளையில், அது ஆரோக்கியமாகத் தோன்றும் ஒருவருக்கு அளவுக்கு மிகுதியாக ஆய்வு மேற்கொள்வதன் மூலமும் அளவுக்கு மிகுதியாக சிகிச்சை அளிப்பதன் மூலமும் அநீதியை ஏற்படுத்திக் கொண்டிருகிறது என்று தெரிகிறது. விரிவான, தேவையற்ற உடல்நலப் பரிசோதனைகள் நல்ல உடல் நலமுள்ள பல நபர்களிடம் முக்கியத்துவமற்ற இயல்பு மீறிய மாற்றங்களை வெளிப்படுத்தலாம். ‘முழு உடல் நுண்ணோக்கி’யின் வருகை, பலவகை ஆய்வக சோதனைகளும் பரிசோதனை நடைமுறைகள் காரணமாக எந்தத் தலையீடும் தேவையில்லாத முக்கியத்துவமற்ற குறைபாடுகளை கண்டுபிடிப்பதன் மூலம் ஒவ்வொருவரையும் ‘நோயாளி’யாக ‘ஆக்கி’ விட முடியும். இந்தக் ‘குறைபாடுகளை’ கண்டுபிடிப்பது தொழில்நுட்பம், மருந்துத் தயாரிப்பு மற்றும் மருத்துவத் தொழில் துறைக்கு வியாபாரக் கண்ணோட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
‘மருத்துவத்தின் தந்தை’ ஹிப்போகிரேடஸ் மருந்து என்ற சொல்லை ‘தொழில்துறை’ என்ற சொல்லுடன் தொடர்புபடுத்துவதற்கு மன்னிப்பாராக, ஏனென்றால் அவர் கி.மு 377ல் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு மருத்துவத்திற்கு என்ன ஆயிற்று என்று அறியமாட்டார்! ‘உடல் நலப் பரிசோதனைகள்’ குறித்த தற்கால பீதியூட்டல் அதன் நியாயத்திற்குப் பொருந்தக்கூடியதாக இல்லை, ஏனென்றால் அதன் சந்தைப்படுத்தலும் பயன்படுத்தலும் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன- பெரும்பாலும் மோசமான வியாபார நோக்கங்கள் கொண்டவையாகவும் நோயாளிகளிடம் பணம் பறிப்பவையாகவும் இருக்கின்றன. ஆராய்ச்சியிலும் அறிக்கையளிப்பதிலும் சந்தைப்படுத்துதலிலும் அறிவியலை மனித நலத்திற்குப் பயன்படுத்துவதிலும் தரமும் நேர்மையும் குறைந்து கொண்டே வருவது சீரழிவைத் தடுத்துநிறுத்துவதற்கான திறனாய்வுக் கருத்துக்களைக் கோருகின்றன.
“ஒரு ‘இசிவு’ (ஸ்ட்ரோக்) நோவைத் தடுப்பதற்கு நாம் 850 இயல்பான நிலையில் உள்ள நபர்களுக்கு தேவையற்ற வகையில் இரத்த அழுத்த எதிர்ப்பு மருத்துகளை (அவை பக்கவிளைவுகள் இல்லாதவையல்ல) ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது.” பெருவணிக முதலாளிகள் ‘இயல்பான உடல்நிலைகளை’ (ரத்த அழுத்தத்தின் குறைந்த நிலை அளவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் இன்ன பிறவற்றின் இயல்பான நிலைகளை) ‘பணம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளச் செய்தல்’ மூலம் தொடர்ந்து குறைவாக வைத்திருக்க முயற்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் பல லட்சக்கணக்கான இயல்பான உடல் நலம் உள்ளவர்களை நோயாளிகளாக முத்திரை குத்தித் தங்கள் பணப்பெட்டியை நிறைத்துக் கொள்கிறார்கள்! மேலும் எளிதில் நம்பிவிடும் மருத்துவர்களாகிய நாம் அவர்களின் உயர்ந்த சக்திவாய்ந்த சந்தை உத்திகளின் மூலம் கொண்டுவந்து கொட்டப்படும் அந்த ‘அறிவியல்’ அறிக்கைகளை வேதவாக்குகளாக எடுத்துக்கொள்கிறோம்.
அவர்கள் மருத்துவத் தொழில்முறையாளர்களை மூளைச் சலவை செய்கின்றனர், அவர்களுடைய மூளைகளை பிற நேர்மையற்ற வழிகளில் தங்களுக்கேற்ப ஒழுங்குபடுத்துகின்றனர். இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் பலவற்றின் அளவுகளின் இயல்பான வரம்புகளை மாற்றுவதற்கு அறிவியல் அடிப்படையை ‘உருவாக்குவதன்’ மூலம் உடல் நலத்துடன் இருக்கும் மக்கள் தொகையை புதிய நோயாளிகளாக ‘ஆக்கி’ தங்கள் சுயநலத்துக்காக நோய்களின் வலைகளில் வீழச் செய்ய இந்தத் தொழில்துறையினர் முடிவற்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் மேலும் மேலும் பணம் சேர்ப்பதற்காகத் காகிதத்தாள்களில் கூடப் புதிய நோய்களை உருவாக்குகிறார்கள். இந்தக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வும் தப்பிக்க முடியாத ‘கூடுதல் ஆய்வு’களும் மகிழ்ச்சியைப் பறித்து, பீதி காரணமாக உடல் நலத்தைச் சீர்குலைத்து, மன அழுத்தத்தையும் மனநோயையும் கூட உருவாக்குகின்றன.
பார்ப்பதற்கு நல்ல உடல்நிலையுடன் இருக்கும் தனிநபர்கள் பலருக்கும், குறிப்பிடத்தக்க பிரச்சனைகளையும் பொதுவான நோய்களையும் கண்டறிவதற்கு அல்லது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஒரு உளவியல் ரீதியான திருப்தியை பெறுவதற்கும் ஒரு சில அடிப்படை ஆய்வுகளும் முழுமையான மருத்துவமனை பரிசோதனைகளும் மட்டுமே போதுமானவையாகும்.
ஒவ்வொரு அற்பமான அறிகுறிக்கும் (குடும்ப மருத்துவர்களை- ஏறத்தாழ அழிந்துவிட்ட ஒரு இனம் – அணுகாமல்) சிறப்பு மருத்துவமனைகளுக்கு விரைவதும் தேவையற்ற பரிசோதனைகளுக்கு உள்ளாவதும் நீண்ட மருந்துகளின் பட்டியலைப் பெறுவதும் உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்துடையவர்களிடையே ஒரு நாகரீகம் ஆகிவிட்டது. எனது நோயாளிகளில் சிலர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளின் தடித்த கோப்புக்களை மிகவும் பெருமிதத்துடனும் திருப்தியுடனும் என்னிடம் காட்டி, அவை அவர்கள் வாழும் அனைத்து மோசமான வாழ்க்கைப் பாணிக்கும் பரிகாரமாக எண்ணிக்கொண்டு தாம் தொடர்ச்சியாக உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொள்வதையும் ஆஸ்பிரின், அடோர்வாஸ்டேட்டின், அல்ப்ரஜோலம் (இதய நோய்ப் பிரச்சனைக்கானவையாகக் கருதப்படும் மூன்று ‘அ’ மருந்துகள்)மற்றும் பல மருந்துகளையும் வழக்கமாக எடுத்துக்கொள்வதையும் கூறுவார்கள். அவர்களில் பலர் முன்னதாகவே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொள்வார்கள்.
மீரா- இது அப்பெண்ணின் மாற்றுப் பெயர்- ஒரு வாரமாக சளியாலும் தலைவலியாலும் துன்புற்று நேராக ஒரு நரம்பியல் நிபுணரிடம் சென்றார். அவர் மிகச் சரியாக ஒரு மூளை நுண்நோக்கு ஆய்வுக்கு உத்தரவிட்டார், அது சில வயது தொடர்பான மாற்றங்களைக் காட்டியது. அந்த நுண்ணோக்கி அறிக்கையில் இருந்த ‘இயல்புக்கு மாறான குறைபாடுகளை’ படித்த பிறகு கவலையடைந்த மீரா தனது பசியை இழந்து எடையிழக்கத் தொடங்கினார். பின்னர், அவர் காது மூக்கு தொண்டை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். அந்த அறிக்கை மூக்கில் ஒரு சிறிய (அற்பமான) சதை வளர்ச்சியை காட்டியது. உள்நோக்கி அறிக்கையைப் பார்த்த அப்பெண்மணி கொஞ்சநஞ்சம் இருந்த பசியையும் இழந்து மன அழுத்தத்திற்குள்ளானார். எடையிழப்பு ஒரு நுரையீரல் தொடர்பான சோதனைக்கு வழிவகுத்தது. மேலும் நுரையீரல் தொடர்பான நுண்ணோக்கி ஆய்விலிருந்து நுரையீரல் செயல்பாடு குறித்த ஆய்வுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.
மிகக்கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்பட்ட மீரா ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அனைத்து சிறப்பு மருத்துவர்களும் வந்து பார்த்து கழுகுகளைப் போல அவரவர் பங்குக்கான தொகைகளை கொத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒரு உளவியல் மருத்துவரும் இருந்தார். மருத்துவர்களாகிய நாங்கள் வழக்கமாக கைகழுவி விடுவதற்கு அவரிடம் தான் அனுப்புவோம். இறுதியாக, மனஅழுத்தம் (மருத்துவர்கள் தூண்டிய உளவியல் மற்றும் நிதி அழுத்தம்) தூண்டிவிட்ட பசியிழப்பு மற்றும் எடையிழப்பு தவிர எந்த குறிப்பிடத்தக்க குறைபாடும் கண்டறியப்பட முடியவில்லை. முதலில் வந்த சளி மற்றும் தலைவலிப் பிரச்சனை ஒருவேளை தானாகவே சரியாகிவிட்டிருக்கலாம். ஏனென்றால் இயற்கையாகவே, “சளிக்கு மருந்து எடுத்துக் கொண்டால் ஒருவாரத்தில் சரியாகும், மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் ஏழுநாட்களில் சரியாகும்.” கலைப்பட்டதாரியான மீரா ‘சான்று அடிப்படையிலான’ மருத்துவத்தின் பெயரால் வயிற்றையோ மண்டையோட்டையோ கிழிக்காமல் போனதற்காக அதிர்ஷ்டம் அடித்ததாக கருதிக் கொள்ளவேண்டும்.
பெண்டாகாஸ்ட் இதழின் தலைமை ஆசிரியரும் மற்றும் வோர்ட்ஸ்மித் கம்யூனிகேசனில் வோர்ட்ஸ்மித்தின் நிறுவனரும் தலைவருமாகிய பிரிதம் பட்டாசார்ஜி இந்தப்பொருள் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றி விவரித்துக்கொண்டிருந்த போது எனக்கு பின்வருமாறு எழுதினார்: “எடின்பர்க்கில், தேசிய உடல்நல சேவை நிறுவனத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்து கொள்ள நான் சென்றேன். எழுத்துப் பூர்வமான சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, அடுத்தவாரம் ஒரு உடல்நலப் பரிசோதனைக்கு வருமாறு கூறினார்கள். நான் உளப்பூர்வமாக அந்தப் பெண்ணிடம், “அதற்குப் பிறகு நான் மீண்டும் வரவேண்டிய தேவை இருக்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறினேன். அந்தப் பெண்ணின் புருவங்கள் சுருங்கின, பின்னர் நான் கூறினேன்: 'என்னுடைய பிரார்த்தனை உளப்பூர்வமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?' அந்தப் பெண் அதைப் புரிந்து கொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.”
மருத்துவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ள இடங்களில் நோய்க்குறிகள் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நன்றி: தி இந்து நாளிதழ் 15.01.2012
குழந்தைகளை அடிக்கலாமா?
குழந்தைகளை அடிக்கலாமா?
குழந்தைகளை அடிக்கலாமா? படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் மீதான வன்முறை
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை“ சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?
கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்பு களை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.
நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.
சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவலின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?
திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.
உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.
அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.
பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.
ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?
கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.
என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?
சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.
பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில்நடந்து வருவது இது ஒரு வன்முறையில்லையா?
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?
குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?
ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.
ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை...
எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.
“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?... என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.
அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.
மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, எங்கும் சுதந்திரமாக போய்வர... இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க.... (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)
உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
தந்தை பெரியார் சொன்ன சில வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘சேர சோழ பாண்டியர் நாயக்கர் ஆகிய மன்னர்களும் அவர்களது படையெடுப்புகள், நாட்டு எல்லைகள், ஆண்டவிதம், செய்தசீர்திருத்தம் ஆகியவை சரித்திரம் படித்த மாணவர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, தசரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பலிச்சக்கரவர்த்திக்கும் எத்தனை மனைவிகள், எத்தனை குழந்தைகள் என்று தெரியும்.
பூகோளம் படித்தவனுக்கு உலகப்பரப்பு அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால் இல்லாததும், இருக்க முடியாததுமான மேல் உலகம், கீழ்உலகம், சொர்க்கம், நரகம் அதன் வர்ணனை பலன்கள். ஆகியவை முழுவதுமாக தெரியும்.
வானவியலைப் பற்றிப் படித்த மாணவனுக்கு சூரிய சந்திரனின் உண்மைத்தன்மை, அதன் தாக்கம், இயக்கம், சீதோஷ்ண நிலைக்கு காரணம் ஆகியவை சரிவரத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரன், வளரவும் தேயவும் சாபம் தான் காரணம் என்றும் இராகு, கேது விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்றும், அதற்கான பரிகாரம் இன்னின்னது என்றும் தெரியும்.
விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன’ என்றார். தந்தை பெரியார் சொன்னவற்றில் ஒரு சிறு அளவு கூட மாற்றம் இல்லை.
கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.
அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.
கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் அவர்கள் சொன்னபடியே கேட்பதில்லை. இவரகளை என்ன செய்யலாம்?
அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்... குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம். நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.
குழந்தைகளுக்கு நம்முடைய அணுகுமுறை புரியுமா?
குழந்தைகள் எவ்வளவு அறிவுத்திறன் பெற்றவர்கள் என்பதை இந்த ஒரு கவிதை வெளிப்படுத்தும்.
“எட்டாத
உயரத்தில்
எல்லாவற்றையும்
வைத்தாயிற்று
கவின் கையில்
இப்போது
ஒட்டடைக்கொம்பு”
- கவின்குறுநூறு
இது குழந்தைகளின் அறிவுத்திறனை படம்பிடித்துக்காட்டுகிறது. பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும். குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.
கற்றுக்கொள்
கற்றுக்கொள்
ஏய் குழந்தாய?
என் அழுகிறாய்
உன் விழிகளுள்
சோகத்தைச் சிறைப்பிடித்து வைத்திருக்குறாயா?
ஏன்?
முரசினைப் பிரித்து
முளைத்த முத்துக்கள்
வெளியே தெரியாது
இறுகபூட்டிய உன்
இதழ்கலுக்கூடாக
துயரத்தை எப்படி
தொண்டைக்குள் திணித்தார்கள்?
உன் பட்டுக் கன்னங்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
கண்ணீர் போருக்குகளுக்கு
காரணம் என்ன?
விளங்குகிறது
"மனிதர்கள் வாழும்
இந்த மண்ணில்
உணர்வினைச் சொல்ல
உரிமை இல்லை "
என்கிறாயா?
பொய்யும் புரட்டும்
போறாமையும் சேர்ந்து
எரிகின்ற தழலுள்
நீ வேந்துபோனாய்
அப்படித்தானே?
விம்மலும் அழுகையும்
இதற்க்கு விடைதரா
ஏனென்றால்!
இந்த யுகத்தில்
"பொய்யை மெய்யெனக் கொள்க
வாழ்வின் அத்திவாரமாய்
பொறாமையை எடுக்க "
என்பன
வாழ்க்கை பற்றிய
விஞ்ஞான விதிகளின்
எடுகோல்கலாகும்.
எனவே கற்களும் முட்களும்
குத்தியகால்கள்
கடுமையை மட்டுமே
உணர்ந்துகொள்ளட்டும்
இறுகமூடிய
உன் இதழ்கள் போலவே
இதயம் இறுகட்டும் .
Tuesday, March 19, 2013
சிறுத்தை
சிறுத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:(இராச்சியம்) விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு :பாலூட்டிகள்
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைப் பேரினம்
துணைக்குடும்பம்: Felinae
பேரினம்: Acinonyx
சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.
உடல் அமைப்பு:
சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிவிங்கிப்புலியின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ் வயிற்றுப் பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு சிவிங்கிப்புலியைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.
வசிப்பிடம்:
சிவிங்கிப்புலி மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.
உணவுப்பழக்கம்:
சிவிங்கிப்புலி வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.
வாழ்க்கைமுறை:
பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.
சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
திணை:(இராச்சியம்) விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு :பாலூட்டிகள்
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைப் பேரினம்
துணைக்குடும்பம்: Felinae
பேரினம்: Acinonyx
சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.
உடல் அமைப்பு:
சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிவிங்கிப்புலியின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ் வயிற்றுப் பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு சிவிங்கிப்புலியைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.
வசிப்பிடம்:
சிவிங்கிப்புலி மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.
உணவுப்பழக்கம்:
சிவிங்கிப்புலி வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.
வாழ்க்கைமுறை:
பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.
சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


.jpg)
.jpg)
