Friday, July 5, 2013

கற்றுக்கொள்

கற்றுக்கொள் 


ஏய் குழந்தாய?
என் அழுகிறாய் 
உன் விழிகளுள் 
சோகத்தைச் சிறைப்பிடித்து வைத்திருக்குறாயா? 

ஏன்?
முரசினைப் பிரித்து 
முளைத்த முத்துக்கள் 
வெளியே தெரியாது 
இறுகபூட்டிய  உன் 
இதழ்கலுக்கூடாக
துயரத்தை  எப்படி
தொண்டைக்குள் திணித்தார்கள்? 

உன் பட்டுக்  கன்னங்களில் 
ஒட்டிக் கொண்டிருக்கும் 
கண்ணீர் போருக்குகளுக்கு 
காரணம் என்ன? 
விளங்குகிறது 
"மனிதர்கள் வாழும்
 இந்த மண்ணில் 
உணர்வினைச்  சொல்ல
 உரிமை இல்லை "
என்கிறாயா?

பொய்யும் புரட்டும்
 போறாமையும் சேர்ந்து 
எரிகின்ற தழலுள்
 நீ வேந்துபோனாய் 
அப்படித்தானே?
விம்மலும் அழுகையும்
 இதற்க்கு விடைதரா
ஏனென்றால்!
 இந்த யுகத்தில் 
"பொய்யை மெய்யெனக் கொள்க 
வாழ்வின் அத்திவாரமாய்
 பொறாமையை எடுக்க "
என்பன
 வாழ்க்கை பற்றிய
 விஞ்ஞான விதிகளின் 
எடுகோல்கலாகும்.

எனவே கற்களும் முட்களும் 
குத்தியகால்கள் 
கடுமையை மட்டுமே
 உணர்ந்துகொள்ளட்டும் 

இறுகமூடிய
  உன் இதழ்கள் போலவே 
இதயம் இறுகட்டும் .