Thursday, January 24, 2013

இலக்கியம் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல



நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்தின் வெளிப்பாடாக பிரவாகமெடுக்கும் மொழி வரலாறாக, பதிவாக, உணர்வாக கருத்தியல்களை கட்டமைக்கும் ஆயுதமாக போராட்ட தளமாக எல்லாமாக மாறிப் போகக் கூடியது.
அந்த வகையில் பெண்களின் தொடர் வாழ்வியல் போராட்டத்தில் இலக்கியத்தில் பெண்ணின் இருப்பு என்ன ? அந்த இருப்பை தீர்மானிப்பது யார் ? எது ? என பதிவு செய்திருக்கும் இலக்கியம் எது ? பெண் உணருதல்கள் அதுவாகவே சொல்லப் பட்டிருக்கிறதா ? சொல்லப் பட்டது அதுவாகவே உணரப் பட்டிருக்கின்றதா இப்படியான பல கேள்விகைளை நம்முன் விரித்துச் செல்லும் வாழ்வியல் போராட்டத் தளத்தில் மிகச் சொற்பமான பதிவுகளே இலக்கியமாகி இருக்கின்றன
மொழி வழியாகவே வரலாறுகள் அறியக் கிடைக்கின்றன. தாயாண்மை சமுதாயத்தில், பெண்ணின் உயிர் பறிக்கா உதிரப் போக்கும், ஒரு உயிரைப் பிரசவிக்கும் கர்ப்பமும், பயத்தைத் தந்து சமுதாயம் அவளைப் போற்றக் கூடிய நிலையைத் தந்திருந்தது. ஆனால் இயற்கையின் இரகசியங்கள் மெல்ல உடைபட்ட பிறகு நிலவுடமைக் காலத்தில் அதே உடலைச் சொல்லியே அவள் அடிமைப் படத் தக்க உணர்வுகளையும் தந்து மெல்ல மெல்ல தன் ஆதிக்க கரங்களை அவள் கழுத்தில் வைத்து, பெண் என்பவள் ஆணுக்கான உடமைப் பொருளாகவும் பக்தி இலக்கியங்கள் தலை யெடுத்த காலத்தில் மண் பொன், என ஆண் ஆசை வைக்கக் கூடாத பொருட்களின் பட்டியலில் பெண் என்பதை சேர்த்ததன் மூலம் அவள் ஆணின் சுகத்துக்கானவளாகவும், வணிகமயமாக்கலின் போது நுகர்பொருளாகவும் மாற்றி விட்டது இந்த ஆதிக்க சமுதாயம். மாற்றப் பட்டதை உணர முடியாத அளவுக்கு அதுவே பெண்ணுக்கு சுகம் என்னும் போதிப்பை தொடர்ந்து சமயம், மதம் இலக்கியங்கள் எல்லாவற்றுன் வாயிலாகவும் நிகழ்த்திய படி இருந்திருக்கின்றது இந்த ஆதிக்க சமுதாயம்.
இந்த சமுதாயம் ஆதிக்க மனோபாவங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப் பட்டதை உணர முடியாத அளவுக்கு தாயாண்மை சமுதாயத்திலிருந்து நாகரீகம் வளர்ச்சியடைந்த கால கட்டங்களின் பின் காலம் காலமாக நாம் ஆணாதிக்க சிந்தனைக்குள் ஊறிப்போனவர்களாகவும் மீண்டு வர எத்தனிக்கும் போதும் அதன் அடிப்படை மூலக் கூறுகளை நாமே அறியாமல் நம்மோடு சுமந்து திரிபவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றோம். இலக்கியங்களும் புராண இதிகாசங்களும் அந்த அந்த கால கட்டங்களுக்குத் தேவையானவற்றை பேசியோ பதிவாகவோ செய்து வைத்திருக்கின்றன. அந்த பேச்சும் பதிவும் எல்லாமே பெரும்பாலான ஆண்களாலும் பெண்களால் எழுதப்பட்ட கொஞ்ச படைப்புகளும் அதே ஆணாதிக்க சிந்தனைக்குள் இருந்தவர்களாலுமே எழுதப்பட்டிருக்கின்றது. இது பழமையான இலக்கியங்களை குறை சொல்லும் “ மாற்றாந்தாய் மனப் பான்மை “அன்று..
அந்த அந்த கால கட்டங்களில் உருவாகிய இலக்கியங்கள் நமக்குள் விட்டுச் சென்றிருக்கின்ற மரபுகள் , கட்டுப் பாடுகள் விழுமியங்கள் எல்லாமே ஆண் வழிச் சிந்தனை உடையதாகவும் சமுதாயம் ஆட்சி, கலாசாரம், காலம் என மாறிய கால கட்டங்களிலும் அந்த இலக்கியங்களை இன்றைய காலகட்டங்களூடன் ஒப்பீடு செய்து சிந்திக்க துவங்கியிருக்கிறோமா. அல்லது நமது இன்றைய இலக்கியங்கள் ஆணாதிக்க சிந்தனை மரபிலிருந்து விடுபட்டு நின்று பெண்ணை பார்க்கத் துவங்கியிருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விசயமாகும்
அப்படியான சமூகவியலையும் கணக்கில் கொண்டு தான் இலக்கியங்களையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது
பெண் விடுதலையை துவங்கி வைத்த பாரதி காலம் தொட்டு இன்று எவ்வளவோ பெண்கள் வெளிவந்து விட்டதாயும் உலகை சுற்றி வந்ததாயும் பெருமை பேசிய போதும், பெண்ணை நுகர் பொருளாகவும் உடைமைப் பொருளாகவும் சொத்தாய் பார்க்கும் மனோபாவமும் ஆணுக்குள் மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் மாறாமல் இருந்து கொண்டே இருக்கின்றது என்பதே உண்மை. பெண்ணின் வாழ்க்கை ஆணை சார்ந்து இருப்பதாகவும் , ஆணை சார்ந்திலாத வாழ்வு பெண் இழந்து விட்ட வாழ்வாகவும் தீர்மானிக்கப்பட்டே இன்றைய நமது மனோபாவங்கள் தொடர்கின்றன. பெண் உடல்ரீதியாக மட்டுமன்றி உணர்வு ரீதியாகவும் சிதைக்கப் பட்டுக் கொண்டே இருக்க வாழ்வியலில் இவ்வளவு சிக்கலுக்கிடையில் இருக்கும் பெண்ணின் இலக்கிய இருப்பு என்ன ? என்று பார்க்கப் போனோமானால் அதை இரு வகையாக பிரித்து பார்ப்பது நமக்கு எளிதாகிறது
பெண் பங்களிப்பு என்று பார்க்கப் போனோமானால் அண்றிலிருந்து இன்று வரை மிகக் மிக குறைவானதே
பெண் சித்தரிப்பு என்று சொல்லப் போனால்
பெண்ணைப் பேசும் படைப்புகள்
பெண் உணர்வைப் பேசும் படைப்புகள்
எனப் பார்க்க முடிகின்றது
பெண்ணைப் பேசும் படைப்புகள்
சங்க கவிதைகள் வாசிப்பில் நான் உணர்ந்த இடமிருந்து எழும்பிய சில கேள்விகளை இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன்
சங்க இலக்கியங்களில் நிறைய பெண் பாற்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று பெருமை கொள்கின்றாம். அதே நேரத்தில் பாடப் பட்ட பாடல்களில் எழுதியவர்கள் ஆண்களாக இருந்த போதும் பெண்களாக இருந்த போதும், தலைவனை அதாவது ஒரு ஆணை (மறந்தும் கூட பெண் தலைமை இடத்தில் இல்லை,) சார்ந்து , அவன் மன்னனாக இருந்தாலும் சரி.,கடைசி போர் வீரனாக இருந்தாலும் ‘சரி அவனுக்காக காத்திருப்பது அவனில்லாது போனால் வாழ்க்கை தொலைந்து போனதாய் விரக்தியில் தவிப்பதுமாய் தான் பெண் நிலை சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
காமத்தை , பெண் உணர்வை பேசுவதாய் இருந்த ஒளவையின் சில பாடல்களும் அந்த ரகங்களே. பெண் உணர்வுகளாக அந்த பாடல்கள் வெளிபடுத்தியிருக்கும் உணர்வுகள் பெரும்பாலும் இயல்பை பேசுவது போலவே இருப்பினும், அதற்குள் இயல்பு போலவே ஆதிக்க சிந்தனை திணிக்கப் பட்டிருக்கின்றது
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்று சொல்லி அது மட்டும் அவள் செய்தால் போதுமானது என்று வீட்டிச் சுவருக்குள் நிறுத்தியதன் எதிரொலி இன்றும் பெண் வேலைக்குப் போகத் தொடங்கிய பின்னரும், களைத்து திரும்பும்பெண் முன்னால் வீட்டை சரியாக பராமரிக்கத் தெரியாதவள் அல்லது முடியாதவள் எனும் குற்ற உணர்வை முன் வைப்பதற்கு நமை அறியாமல் நமக்குள் இருக்கின்ற , திணிக்கப் பட்ட இந்த விழுமியங்கலும் காரணம்
ஈன்று புறந்த தருதல் என் தலைப் கடனே என்று அன்று பாடிய வரிகள் இன்னமும் அதற்கான கட்டமைப்பை செய்து கொண்டிருகின்றன
வினையே ஆடவர்க்கு உயிரே
மனை புற மகளிர்க்கு அவ்வாடவர் உயிரே
அப்பொ பெண்கள் செய்வதெல்லாம் வினை இல்லையா ?
பாடப் பட்டவர்கள் பட்டியலில் ஏறக்குறைய 110 பேர்கள் வரை பாடல் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அந்த பட்டியலில் ஏன் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. பெண்கள் செயல்படவே இடம் இல்லாது போனதாலா ? அல்லது அவர்கள் செயல் பட்ட போதும் அதை வெற்றியாக கண்டவர்கள் இல்லாததா ? காரணம் .
இத்தனை பெண் பாற் புலவர்கள் இருந்தும் அரசனையே இடித்துக் கூறும் தகுதி பெற்றிருந்தும் ஆதிக்க சிந்தனையால் தன் மேல் நிழலாய் வீழ்ந்த இருள் மனோபாவங்களை தவிர்க்க முடியாமல் தவிக்கத்தான் செய்திருக்கிறார்கள் .
“யாழொடும் கொள்ளா;பொழுதோடும் புணரா
பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் .,புதல்வர் தம் மழலை
என் வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே
“ என் வாய்ச் சொல்லும் அன்ன”
எனும் இந்த கவிதை வரிகள் ,
இன்று பெண்களின் பேச்சு நிராகரிக்கப் படுவது போலவே ஒளவையின் சொற்களும் மதிக்கப் படாமல் போயிருக்கக் கூடுமென நம்மை நினைக்க வைக்கிறது. அப்படியிருந்த போதும் அங்கீகாரங்களை எதிர்பார்க்காது . யாழிசை போன்று என்று மயங்கவும் வேண்டாம், காலத்தோடு ஒத்து வாராது போல தோன்றவும் செய்யலாம், புரியவில்லை என்றும் உரைக்கலாம்.
ஆனாலும் அதையெல்லாம் மீறி தந்தைக்கு குழந்தை சொல் எவ்வளவு மதிப்பானதோ என் வாய்ச் சொல்லும் அத்தகையவையே என்று சொல்லும் சொற்களில் தெரியும் தன்னம்பிக்கையே அந்த கவிதையின் வாழ்தலுக்கு காரணமென்று நான் நினைக்கிறேன்.
அன்று இருந்த அதே நிலை இன்றும் மாறவில்லை.
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”
என்ற வரியிலும் அந்த கர்வம், தன்னமிக்கை கலந்த கர்வம் இருப்பது முக்கியம் என்று எனக்கு படுகின்றது. ஆதிக்க சிந்தனையின் அடிமை மனோபாவம் பெண்ணுக்குள்ளும் புரையோடிப் போய் இருந்து கொண்டிருக்க அதை தவிர்க்க முடியாமல் தவிப்பது தொடர் முயற்சியாகவே இருந்து வந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முயலுதல் என்பதுவே இயக்கமாய் இருக்க இன்று எழுத வந்த பெண்ணெழுத்துக்களிலும் அந்த முயற்சிகளில் வென்று விட்டோமா என்றால் அப்பவும் பெண்ணை பெண் உணர்வுகளை ஆணுக்கானதாய் படைத்துத் தரும் மனோபாவமும் அல்லது காத்து தவிப்பதுமாகவே முன் வைப்பது வருத்தம் தருவதாகவே இருக்கின்றது.
காத்திருப்பதும், மகிழ்விப்பதுவும், மன்னிப்பதுவுமே தான் பெண்ணுக்கான இயல்புகளாக அடையாளப் படுத்தப் படுவதை அந்த காலம் முதல் இன்று வரை பாலியல் சுதந்திரக் கவிதைகளிலும் கூட ஏன் விட்டு வெளியேற முடியவில்லை என்று நாம் யோசிக்க வேண்டும். உடைத்துக் கொண்டு வெளியேறுவதாய் பிரகடனப் படுத்தப் படும் கவிதைகளும் ., உடைத்துக் கொண்டு எங்கு போய் விழுகின்றன என்றால் தொடங்கிய இடமே போய் விழுவதாக இருக்கின்றது
பெண் என்று இருந்தால் அவள் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆணுக்கானவளாய் வழங்குவதற்கான ஒன்றாக நிகழ்ந்து விட வேண்டிய நுண்ணிய வழிமுறைகளில், சாதுரியமான முறைகளில் ஆணாதிக்கம் செயல்படுகின்றது
அதை உடைத்து போடுவதாய் பெண் எழுத்துக்களோ பெண்ணுக்காக எழுதப் பட்ட எழுத்துக்களோ இருக்கின்றாதா என்றால் இன்னும் அந்த விழிப்புணர்வு பெண்களிடையே இல்லாமல் இருப்பதைத்தான் இதுவரை எழுதப்பட்டிருக்கின்ற இலக்கியங்கள் காண்பிக்கின்றன.
ஒரு கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் பேசினார். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள் என்று அதற்கு உதாரணாமாக அவர் சொல்லிய பெண்கள் ஒளவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார். அந்த மேடையிலேயே எனது கேள்வியும் இருந்தது . அப்போ எதை வாழ்க்கையாய் நினைகின்றீர்கள். ஒரு பெண் கணவனோடு குழந்தைகளோடு வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்றா ? அப்பொழுதுதான் அவன் வாழ்வில் வெற்றி கண்டவள் என்றா ? .என்னைப் பெறுத்தவரை இவர்கள் எல்லாரும் தாங்கள் எதை வெற்றியாக கருதினார்களோ அதை திறப்பட செய்து வென்றவர்கள் தான்
இந்த எண்ணங்கலிருந்து மீண்டு வந்தவர்களாய் எனக்கு சித்தர்களும் அவர்களது பாடல்களும் தெரிகின்றன. பொதுவாக எல்லாரும் சொல்வதுண்டு சித்தர்கள் பெண்களை வெறுத்தவர்கள் என்று
ஆனால்
மைவிழியாரை சாராதே-துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே
எனும் கடுவெளிச் சித்தர்(பாடல் 24)
பாம்பினை பற்றியாட்டாதே-உன்றன்
பத்தினி மார்களை பழித்து காட்டாதே
என்று முரணாகவும் சொல்லும் போது யோசிக்க வேண்டியிருக்கின்றது அந்த காலத்தில் தாசிக் குலப் பெண் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டியின் கடுமையான போராட்டத்திற்கு பின் தான் அது சட்ட விரோதமாக்கப் பட்டுள்ளது.
ஆனால் இவ்வளவுக்குப் பிறகு இன்று பத்திரிக்கையாளர் ஞானி பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும். அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மீதுள்ல குற்ரப் பார்வையை சமுதாயம் நீக்க வேண்டும் என்கின்றார். பபலியல் தொழிலாளிகலுக்காக குரல் கொடுகும் தொனியில் உள்ல அவரது கருத்தாக்கங்கள் உண்மையில் பெண்ணுக்கு நல்லது செய்யுமா அல்லது அத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்காவது என்று பார்க்கப் போனோமானால் நிச்சயமாக இல்லை.மேலும் மேலும் பெண்ணை உடல் சார்ந்தும், பொகப் பொருளாகவும் நிறுவவே முயலும்
தாசி குல வழக்கங்களை , பெண்ைணை போகப் பொருளாய் பார்ப்பதை இந்த சித்தர் கண்டிக்கின்றார். பெண்ணை தாயாய் பார்க்கும் மனோபாவங்களை நெடுகச் சொல்லிச் செல்கின்றனர்.
கக்தி பெரிதோ உறை பெரிதோ இவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சக்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே
எனும்கொங்கனச் சித்தர்
பண்டு முளைப்பது தரிசியேயானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டு கொண்டு முன்னே அவ்வை சொன்னாலது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே
பெண்ணுமில்லாமல்லே யாணுமில்லையிது
பேணிப்பாரடிவாலைபெண்ணே
சமதர்மத்தையும், பெண் பார்க்கப்பட வேண்டிய கோணத்தையும் சரியாக சொல்லிப் போகிறவர்களாக சித்தர்களை அடையாளம் காண்கின்றேன்.
பட்டினத்தார் பாடல்கள் மிக மோசமாக சித்தரிக்கும் பெண்களை. கச்சித் திரு அகவல்-4 பாடலில்முழுக்க பெண் உடலை நிந்தித்து பாடியிருப்பார். பெண்ணை நிந்திப்பதாக சொல்லுகின்ற அப்பாடலிலும் உற்று நோக்கினால் பெண்ணை உடல் சார்ந்து பார்ப்பதைதான் வெறுத்திருக்கின்றார்.
காமுகரை சேரும் சிறு குழி என்றும், போக மாதரை போற்றுதல் ஒழிந்தே என்றும் அவர் சொல்ல சொல்ல பெண் ஆண் என்றில்லாது உடலை மையப் படுத்தி வாழும் வாழ்க்கையை வெறுத்து அவர் பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரஞ் செய்வார், சாத்திரங்கள் ஆயார் , பிறர்க்கு உபகாரஞ்செய்யார் இவெரெல்லாம் இருந்தென்ன போயென்ன என்றும் கேட்கின்றா கேள்விதனில் நாம் புரியலாம் பெண்ணை உடல் சார்ந்து பார்ப்பதை தவிர்க்க சொல்லி வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதே நேரத்தில் உடலை ஆரோக்கியம் சார்ந்த விசயங்களுக்கு எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் உண்ர்ந்திருந்ததானால் தான் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர்
ஆனால் சித்தர்களை பெண்களுக்கு விரோதியாகச் சொல்லி, உண்மைகளை அதுவாகவே உணரவிடாததுதான் நிகழ்ந்திருக்கின்றது
இன்றைக்கு பின்னவீனத்துவம் என்று போலிகளை உடைக்காது புனிதங்களை கட்டுடைக்கும் போக்குள்ளவர்கள் உடலை எங்கு கொண்டாட வேண்டும் எங்கு அற்றுப் போகச் செய்ய வேண்டும் முற்போக்கு பின்நவீனம் என்பதையெல்லாம் சித்தர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்
ஆதி காலம் தொட்டு பெரும்பாலான இலக்கியங்கள் மலையை, பூவை இயற்கையை தென்றலைப் பாடியதைப் போலவே பெண்ணையும் பாடி வந்திருக்கின்றன. தனை சந்தோசப் படுத்தும், பொருளை பாடுவதாகவும், பெண்ணின் எவ்வகையான இருப்பு தனை சந்தோசப் படுத்துகிறது என்பதாகவுமே பெரும்பாலும் படைப்புகள் இருந்து வந்திருகின்றன
பெண் நுகர் பொருளாக, இரண்டாம் தரப் பிரஜையாக ஆணுக்காக வடிவமைக்கப் பட்ட பொருளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்
முற்போக்கு சிந்தனைகளை முன்னிறுத்திய பாரதி தாசன் கவிதை வரிகள் சில
வேண்டுமா மகளே வேண்டுமா ?
மகிழ்ச்சி வேண்டுமா இன்பம் வேண்டுமா
தூண்டாமணி விளக்கே சொல்லுவேன் கேள் உனக்கே
துணைவனோடு நீதான் இணை பிரியாதிருக்க வேண்டும்
கறி சமைத்து சோறாக்கியுன்
கணவனுக்கிடு முன்பு-நிகழ்
கருத்தினிலே மகிழ்ச்சி தோன்றும்
அதுதானடிஅன்பு
வெறுக்காமல் உன் அத்தான் உண்டு மகிழ்ந்த பின்பு
மெல்லியே உன் வாழ்க்கை இனிக்கும் செல்ல குட்டி
கண்ணாளன் வெளியிற் சென்று
திரும்புவதும் உண்டு தன்
காரியம் கை கூடாமையால்
வருந்துவதும் உண்டு
பண்ணொன்று பாடடி இன்பக் கற்கண்டு
பரிமாறு துயர் தீர்க்கும் அது நல் தொண்டு
இக்கவிதை பெண்ணின் பசியும் இசையும் யாருக்காகவோ என்று பேசுகிறது. அடுத்தவருக்காக வாழும் வாழ்வு மட்டுமே சந்தோசமானது என பெண்ணுக்கு போதிக்கிறது. வாழ்ந்து கொண்டிருக்கின்ற படைப்பாளிகளை பற்றி மட்டுமே பேசுவோம் என்று வரையறுத்து வைத்த போதும் இன்றும் வழக்கத்தில் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டிருக்கின்ற இந்த பழக்க வழக்கங்கள் நல்ல பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என இந்த இலக்கியங்கள் தீட்டி வைத்திருக்கின்ற உருவகங்கள் உடைபட்டு இயல்பாக சிறகு விரிக்க எத்தனை காலம் தான் ஆகுமோ என்று நமை கேள்வி கேட்க வைக்கின்றன.
சரி முடிந்து போனவர்கள் காலத்தை புரிதலுக்கான சான்றாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய விமரிசித்து ஆவதொன்றுமில்லை
வாழும் கவிஞர்கள் மனோபாவங்களாவது இந்த ஆதிக்க நிலையிலிருந்து மாறியிருக்கின்றதா ? முற்போக்கு எனும் வார்த்தைகள் நிஜமாகவே முற்போக்காக இருக்கின்றதா ?
அடுத்து ஞானக்கூத்தனின் கவிதை வரிகள். பெரும்பாலான படைப்புகளில் கவிஞர்கள் சொல்லிச் செல்கிற பெண் தன் உணர்வுதனை பேசுபவளாக இருந்திருக்கவில்லை.
அந்த படைப்பாளி , சுகிப்பதற்கான ஒரு பொருளாகவே பெண்ணையும் பார்க்கும் பார்வை தொடர்ந்து இருந்து வருவதை நாம் காணலாம்
காய்ச்சல் நீங்கி கண்விழிக்கும் ஒரு
கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய்
பட்டிப் பூவின் கருநீலம்
பெண்னை அழகு என்று மட்டுமே பார்க்கும் மனோபாவம் இந்த கவிதை வரிகளில் காண முடிகிறது
முலைகள் அசையத்தான் செய்யும் ஒரு
புடவைத் தலைப்பை ந்ினைவூட்டி.
இந்த கவிதை வரிகள் சொல்ல வந்த செய்தி தான் என்ன ?பூக்களின் அழகை உணர்த்த உயிருள்ள பெண்மையிடம் வேறு விசயங்களே கவிஞரின் கண்களுக்கு புலப்படாமல் போனது வருத்தம் தான்
கவிஞர் நீல பத்ம நாபனின் கவிதைகள்
அபஸ்வரம்
கனவு தொனிக்கும்
விழிகள்
சவாலுக்கு அழைக்கும்
ஸ்தனங்கள் துவளும் இடைகள்
யானைக் கால்கள்
செய்தி
அன்றிலிருந்து
இன்றுவரை
அன்பு கற்பு
எனக்
கதைத்துக் கற்புக் கரசியாம்
கண்னகிகளை
பெண் தெய்வமாய்
கோயில் அமைத்து
குடியிருத்தி
வழிபட்டதெல்லாம்
எதற்கென
இந்தியாவின்
முதல்
எய்ட்ஸ் நோயாளியை
நம் நகரில்
கண்டு பிடித்த
செய்தியை
வாசித்த இக்கணத்தில்
புரியத் துவங்கியது
செய்தி கவிதை சொல்லிச் செல்வது என்ன ?
எல்லாரும் கண்ணகியாய் இருந்து விட்டால் எய்ட்ஸ் குறைந்து விடும் என்றா ? சரிதான் கண்ணகியாக இருப்பது என்பது. ஆனால் கோவலன்கள் இராமர்களாக இருந்திருந்தால் குறைந்திருக்கும் என்று சிந்தனை ஏன் தோன்றவில்லை. அப்போ நமக்குள் இருக்கின்ற பார்வைகள் இன்னமும் ஆணாதிக்க வழி சிந்தனைக்குள் இருப்பதை அறிய முடிகிறதே.
ஆனால் இந்த சிந்தனைகள் ஆணுக்குள் மட்டுமல்ல. புதிதாக எழுதத் துவங்கியிருக்கும் இளைஞர்கள், பெண்கள் என்று ஒரு குழுவினரிடம் இருப்பது வருத்ததிற்குரியதாய் இருக்கின்றது
சில கவிதை வரிகள்
சமையலறை தேடி
நீரருந்தி விட்டு திரும்பும் அவருக்கு
எதை சொல்லி
என் வயதை
ஞாபகப்படுத்த ? சுகிர்தராணி
என்ன சொல்ல வருகிறார் ?இரண்டு விசயங்கள்
ஒன்று திருமண வயதை நினைவு படுத்துவதன் மூலம் திருமணம் தான் தன் வாழ்வு என்றும்
இரண்டு தன் வாழ்வுக்கு யாரையோ சார்ந்திருக்க வேண்டிய நிலையும்,
ஆணாதிக்க சிந்தனையின் மரபுக் கூறுகள் இவருள்ளும்
தன் உறக்கத்தில் அவை வேட்டை
நாய்களைக்
கனவு காண்கின்றன
சில பொமரேனியன்கள்
ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ளன சங்கர ராம சுப்ரமணியன்
குனிந்து வளைந்து
கூட்டிப் போனாள்
வீடு சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு
அவள் அழகாயில்லாததால் எனக்கு தங்கையாகி விட்டல்
எனும் கவிதைக்கு கவிஞர் இடும் தலைப்பு “சலுகை” பெண்ணுக்கு தங்கையாகும் சலுமை அளிக்கின்றாறாம்
தன் ஆடுதன் செட்டுக்கு
ஜோக்கர் கிடைக்காதவரை
அவள் எனக்கு பத்தினியாயிருப்பாள்
இந்த கவிதை வரிகள் ஒரு கிராமத்து ஆணாதிக்கவாதியின் உச்சகட்ட சிந்தனை. நவீன கவிஞரின் முன்னோடியாக இலக்கிய உலகில் நிறுவப் பட்டிருக்கும் கலாப் பிரியாவினாலும் கூட ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட முடியவில்லை
ஆண்கள் மட்டும் எழுதலாமா என்ற கேள்வியுடன் இப்போது பெண்களும் அதே ஆணாதிக்க சிந்தனை வழியில் பெண்ணை உடல் சார்ந்து தன்னை தானே அடையாளப் படுத்துவது இன்று நிகழ்ந்து வருகின்றது
பெண் உறுப்புகளை பற்றி பேசுவதாலேயே ஒரு கவிதை பெண் உணர்வுகளை பேசுவதாய் ஆகிவிடாது. பெண்ணுக்கான வலியை சொல்ல வந்த போதும் , பெண் என்றாலே நினைவுக்கு வருவது பாலுறுப்புகள் என்கின்ற தளத்தில் கவிதை இருப்பதால் அதுவே அறியாது ஆதிக்க சமுதயம் கொண்டிருந்த குரலை கையிலெடுத்து விட்டது என்பது என் கருத்து.
நாங்கள் குறிப்பிட்டது பெண்ணுறுப்புக்களை அல்ல. அது ஒரு உருவகமே என்கிறார்கள். உருவகத்திற்கு வேறு பொருட்களே இல்லாது போக இந்த கவிஞர்களிடத்தில் மொழிப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா என்ன ?
பெண்ணுக்கான வரையறைகள் என்று ஆண் தீர்மானித்து வைத்தவைகளை மாற்ற நேரும் போதும் , மனிதனுக்கான வரையறைகள் மீறப்படாமல் பாதுகாப்பதும் அவசியமாகும்..புனிதங்களை கட்டுடைக்க தேவையில்லை.புனிதங்களுகிடையில் புனிதங்களின் போர்வையில் இருக்கின்ற போலிகள் கட்டுடைக்கப் படவேண்டுமதை விட சில நேரங்களில் மிக முக்கியமானது எங்களுக்கான புதியவற்றை கட்டமைப்பதும் ஆகும்
பெண் உணர்வு பற்றி நாம் சிலாகிக்க கூடிய படைப்புகளும் நிகழ்ந்த படிதானிருக்கின்றது. அதுவே நமது நம்பிக்கைகளின் பிடிமானம்
பிச்சமூர்த்தியின் கவிதை வரிகள்
கெளதமனை இராமன் நிந்திப்பதாய் வரும் கவிதை வரிகள்
“உயிரை ஓர் உடைமையாகக்
கருதியே குற்றம் செய்தான்
என்றும்
பெண் இனம் நெஞ்சை இன்னும்
மானிடர் அறியவில்லை
கற்பெனும் நெறியைப் பெண்கள்
கொள்ளவோர் சட்டமிட்டால்
மீறுதல் ஆண்களன்றி
இயலுமா வேத ரிஷியே
பெண் உடைமைப் பொருளாய் கருதப் படுவதற்கு எதிரான குரல் . பிச்சமூர்த்தியின் கவிதை வரிகளில்.
சூரியனை பற்ற வைக்க
நிச்சயமாய்
எனது சந்தோசங்கள்
உன்னைக் காயப்படுத்தும்
என்று தான்
கண்ணீர்க் கூட்டுக்குள்
ஒரு துயரமாகவே
என்னை வாழவிட்டாய்
வலிமை மிகு நம்பிக்கைகள்
உதிர்ந்து போகும்படி
தோல்வியை நோக்கியே
துரத்துகிறாய்
மேலும்
உனக்குப் பொழுது போக்கவும்
எனக்குப் போராட்டமாகவும்
போஇ விட்டது
என் வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக
என் கண்களைப் பறித்தாய்
நீ உலாவி மகிழ்வதர்காக
என் கால்களைத் தடுத்தாய்
தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சண்யமின்றி
தண்டித்தன
அன்பும் இரக்கமும்
வசீகரமும் பொருந்திய
என் இறகுகளைப் பிடுங்கி பிடுங்கி
உன் கறை படிந்த பற்களை
(இன்னும்)
எத்தனை காலத்திற்கு
தேய்த்துக் கொண்டிருப்பாய்
நிச்சயமாய்
எத்தனை தீப்பந்தங்களை
எறிந்தாலும்
சூரியனைப் பற்ற வைக்க
உன்னால் முடியாது
இதுவரை நமக்குள் படிமங்க:ள் உவமைகள் சொற்கள் மொழி என்று எல்லாவற்றிலும் ஆணுக்கானது பெண்ணுக்கானது என்று ஒரு பிரித்தல் நாமே அறியாமல் இருந்து கொண்டே இருக்கின்றது. நிலா நதி பூ என்று பெண்ணுக்கான உவமைகள் படிமங்கள் என்று இருந்து வந்திருந்த உவமைகள் மாற்றி சூரியனை பெண்ணுக்கான படிமமாய் யோசித்திருப்பது பெண்களுக்குள் தன்னை உணர்தல் நிகழ்ந்திருப்பதை காட்டுகின்றது உரிமைகளை யாரிடமும் கேட்டுப் பெறாமல் அதே நேரத்தில் தனக்குள் இருப்பதை உணரத் துவங்கியிருப்பதற்கான அடையாளமிது அதே போல் இன்னுமொரு கவிதையில் ஓவியமாக நானில்லை என்னும் உரத்த குரலும்
சட்டங்களால்
சிலுவையறையப் பட்டிருக்கும்
படிம மாற்றங்களை சிந்தனை மாற்றங்களாய் அடையாளப் படுத்துகிறது.
யுத்த கால
இரவொன்றின் நெருக்குதல்கள்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்த வர்கள் ஆக்கிவிடும்- சிவரமணி
எனக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்றும் சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ கால்களோ இல்லை
அவ்வப்போது நீ இரவல்
தருவதைத் தவிர கனிமொழி
என் ஆதித் தாயின்
முதுகில் பட்ட திருகைச்சவுக்கடி
னான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது ஆழியாள்
பார் பார் போராட்டத்தில்
ஆண் வதை பட்டால்
தியாகம் என்பதும்
பெண் வதை பட்டால்
கற்பிழப் பெண்பது,ம்
ஆண்தலைப்பட்ட சமூக நியாயம் ஜெயபாலன்
பெண்ணுக்கான குரலை பெண்தான் கொடுக்க முடியும் என்றில்லை என நிரூபணம் செய்யும் கவிதை வரிகள்.
ஆதிக்க மனோ பாவங்களுக்குள் சிக்கக் கூடாது என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பெண் உணர்வு என்றில்லாது மனித உணர்வாக பார்க்கும் சிந்தனை சாத்தியமாகும்.
ஆனால் அதே கவிஞரின் அந்த கவிதையின் இடையிலேயே அவரே அறியாமல் ஆணாதிக்க சிந்தனை பயணப்பட்ட இடமும் உண்டு ஈழத்து மண்ணும் எங்கள் முகமும் எனும் காவியத்தில் போராட்டத்தில் ஈடு பட்டிருக்கின்ற ஆண் காயப் பட்டு உயிருக்கு போராடும் நிலையிலும் பெண் தன்னை தந்து அவனை மீட்டெடுப்பதாகவும் கதை வரும்.
போராட்டத்திற்குள் ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுபடும் போது பெண்ணை மட்டும் ஆணின் சுகதுக்கத்துக்கானவளாய் நினைத்துப் பார்க்கும் மனோனிலை எப்படி கவிஞருக்கு சாத்தியமாகியது
ஒரு படைப்பாளி வெறுமனே நிகழின் சாட்சியாக மட்டுஅல்லாது, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான மூலக் கூறுகளையும் அவன் கலை பேச வேண்டும்.
இன்னுமொன்று பெண் அரசியல் எழுதவில்லை எனும் குற்றச் சாட்டு எப்பவும் உண்டு
ஆண் எழுதுகின்ற படைப்பில் பெண் இல்லாமல் இருந்து விட்ட போதும் பெண் எழுதுகின்ற படைப்புகளில் வெறும் குடும்பமாக தெரிகின்ற கவிதைகளில் கூட அரசியல் ஆண் சமூகம் போர் எல்லாமே இருந்து கொண்டே தானிருக்கின்றன. பல விடயங்களை நாமதுவாகவே காணுவதில்லை
ஈழக் கவிஞர் ஒளவையின் கவிதை ஒன்று
எதையும் நினைத்தழுவது
இப்பொழுது சாத்தியமில்லை
கட்கோளத்தின் ஆறு தசைகளும்
செயலற்றுப் போய்
கண்ணீர்பைகள் வரண்டு பிளந்து
நெருப்பை யாரிடம் கக்குவதென்று
வெறிக்கொண்டு திரிந்த
எங்கள் காலமும் போயிற்று
இன்றைய வாழ்வை நியாயப் படுத்த
நேற்றைய வாழ்வைக் கொச்சைப்படுத்தும்
பொய்மைகள் எமக்குள் இனி வேண்டாம்
நமது பிழையா எனது பிழையா
வரலாற்றுச் சாபமா-போகட்டும்
கருத்துக்களுக்கு
விமரிசனமெழுதி எழுதி
முட்டுகள் செயலிழந்து போனதால்
இலக்கியக் குழுவிலும்
அரசியல் குழுவிலும்
தனி நபர் தாக்குதல் தொடங்கியுள்ளது
ஏகே தூக்கும் பலத்தை இழந்ததால்
பேனாவும் வாயும்
அதன் பணி தொடர்கின்றன
குந்தியிருந்து நிலமிழந்து
கூடியிருந்த வாழ்விழந்து
முகமிழ்ந்து போனது யார்
மார்க்சியவாதி மறுபிறப்பு பற்றி விவாதிக்கிறார்.
பிரமச்சாரி குழந்தைகள் வாழ்வின் தொடர்ச்சி என்கிறார்
அரசியல்வாதி தியானம் பற்றிக் கற்றுக் கொடுக்கிறார்.
உனது பிழையா
எனது பிழையா
வரலாற்று சாபமா ?
போராட வந்தவள் மனைவியாய்
சமையலறையில் அடைபட்டிருக்கின்றாள்
புலம் பெயர்வதை துரோகமென்றவர்
பெயர்ந்த நிலத்தில் வீடு கட்டுகிறார்
சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்தவன்
குழந்தை பெறும் மனைவிக்காக அழுகின்றான்
நீயுமல்ல
நானுமல்ல
இரவல் கருத்தில்சவாரி செய்தவர்
முகமிழந்து போனார்கள்
காலம் பதில் சொன்னபடி நகர்கின்றது
எதையும் நினைத்தழுதல்
இப்போது சாத்தியமில்லை
மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டு
உயிர்த்தெழுதலே வாழ்வு
பெண் குடும்பத்தை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவள் என்று சொல்லுபவர்கள் தான் படுக்கையறையை மட்டுமே எழுதுவதை இன்று ஊக்கப் படுத்தி கொண்டிருக்கின்றார்கள். அது வீட்டை விட்டுபெண் வெளிவந்து விடக் கூடாது எனும் நல்லண்னமே அன்றி வேறல்ல
தையல் சொல் கேளேல்
என்கின்ற ஒளவை வார்த்தைகளுக்கான உண்மையான பொருள் என்ன வாக இருந்திருக்கக் கூடும் என்பதும் கூட நமது சிந்தனைகள் தான்.
பெண்ணே சொல்லியிருக்கின்றார். பெண் சொல்லை கேட்கக் கூடாதென்று சொல்லுபவர்கள் இருக்கக் கூடும். தையல் சொல் கேள் ஏல் .கேட்டு நட என்றும் பொருள் கொள்ள சாத்தியம் இருக்கின்றது .
பா. விசாலம் அவர்கள் எழுதிய மெல்லப் கனவாய் பழங்கதையாய் எனும் நாவல் நான் விரும்பி வாசித்த நாவல்.
ஆனால் அந்த நாவல் சரியாக பேசப் படவில்லை. எது சிறந்த எழுத்து என தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். அத நாவல் சலிப்பு தரும் வகையில் பேசுகின்றது என ஒரு விமரிசனமுண்டு பெண்ணின் வாழ்க்கையே சலிப்புத் தரும் வகையில் ஓயாமல் பேசிப் புரிய வைக்க வேண்டிய வகையில் இருக்க, அதை எழுதப் போகும் நாவல் அப்படி இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால் மிகச் சரியாக அது உணர வைத்திருக்கிறது என்றே சொல்வேன்
ஒரு கூட்டத்தில் பெண்களுக்காய் பேசும் தொணியில் பேச்சு தொடங்கியது. பெண் கவிதாயினிகள் ஆபாசமாக எழுதுகின்றார்கள் என்று குற்றம் சொல்லி அவர்களை முடக்குகின்றார்கள் என்று.
பெண்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற நண்பரின் பேச்சின் இன்னுமொரு மறை பொருள் பெண்கள் ஆபாசமாக எழுதுகின்றார்கள் என்பது. இல்லை காலம் காலமாக உறவுகளை உணர்வுகளை கொச்சைப் படுத்தும் எழுத்தை எழுதிக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்துகொண்டிருக்கின்றாகள் . எப்பவும் இருக்கத்தான் போகின்றார்கள். பெண்கள் எழுதுகின்றார்கள் என்று ஒரு கட்டம் கட்டி பேச்சை துவங்குவது , பெண் எழுத்தின் வழி வெளியே வருபவர்களை அடிக்க காத்திருப்பவர்களை தூண்டி விடும் மறை முகமான வேலையோ அல்லது பெண்ணுக்காக குரல் கொடுத்தவன் எனும் பெருமை தட்டிக் கொள்ளக் காத்திருந்த சுயனலமுமே அன்றி வேறல்ல
படைப்பாளியைக் காட்டிலும் அது பிறக்க காரணமாயிருந்த அடியூற்றாக இருக்கிற காலத்தை சூழலை முதன்மையாக மூலமாக நோக்க வேண்டும்.பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனிமனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறி விடக் கூடாது.
கலை கலைக்காக என்று சொல்லி வருகின்ற சிற்றிதழ் போக்குகளும் வணிக நோக்கிற்கு தடம் மாறியுள்ளன.இன்றைய போக்கு எனும் பெயரில் இயல்பாக இல்லாத- 09; மேற்கத்திய இலக்கிய வடிவங்களில் வென்று விட்ட வடிவமிது உத்தி இது என்று எண்ணிக் கொண்டு நமது மண் சார்ந்த வாழ்வியல் சூழலை மறந்து கவிதை இலக்கியமும் சில நேரங்களில் செய்யப்பட்ட பொருளாக மாறிவிடுகின்றது. வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் தமது பத்திரிக்கைகளுக்கு அப்படியாக செய்யப் படு பொருள் தேவை என ஒரு போலித் தேவையை காலச் சுவடு உருவாக்கி வருகின்றது. காலச் சுவடி ?ன் தடத்தில் அதற்கு போட்டியாக நடத்தப் படும் பத்திரிக்கைகளும் அதையே செய்து வருகி ? ?ன்றன அதில் நடக்கும் விளம்பர உத்திகளில் முதல் பலி இளைஞர்கள் தான். இலக்கியம் மக்களுக்காக என்ரு சொன்ன இடது சாரிக் கட்சிகளும் ? எந்த மக்களுக்காக எனும் குழப்பத்தில் இப்போது. ஆக போக்குகள் வணிக நோக்குள்ள , அல்லது அரசியல் சார்புள்ள வர்களால் தீர்மானிக்கப் படுகின்ற போது அது பெண்ணுக்கு சாதகமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை
மொழி என்பது சொற்கூட்டத்தின் அதிகரிப்பு மட்டுமன்று சிந்தனையின் அதிகரிப்பாலும் தான் மொழி வளம் பெற வேண்டும். இன்றைக்கு சில வார்த்தைகள் அர்த்தமிழந்து போயிருக்க ின்றன அவற்றில் பெண்ணியமும், ஆணாதிக்கமும் ஒன்றாகும். அந்த் அவ்வார்த்தைகளை நாங்கள் மாற்றி யோசிக்க வேண்டியிருக்கின்றது. எளியவர்களை வலுத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது இன மொழி பால் வர்க்க என எல்லா விடமும் நடந்து கொண்டேயிருக்க, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆதிக்க மனோபாவங்களை உடைத்தெறிவதும் நேசம் ஒன்றே எல்லாவற்றுக்கான தீர்வாகவும் இருக்க முடியும் .பெண்ணின் இருப்பு, மனித இருப்பாக உணரப் படுவதும் உணரப் படுவதற்கான வழி வகையை செய்து தருவதும் அதற்கான சிந்தனையை தருவதுமே இன்றைய இலக்கியத்தின் பெண்களுக்காற்றவேண்டிய முக்கிய பணியாக கருதுகின்றேன்
சிந்தனை வழியிலான மாற்றங்கள் மனிதத்தை காப்பாற்றும் விதத்தில் வாழ்வியலிலும் இலக்கியத்திலும் ஒரே நேரத்திலும் நிகழ்வதே இலக்கியத்திற்கும் வாழ்வுக்கும் நல்ல தீர்வாக இருக்க முடியும்

Tuesday, November 6, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 2


              குறிக்கோளும் முடிவெடுத்தலும் பகுதி  2

 மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்று நம்புவது நம்பிக்கையை செயல்படுத்தி திட்டமிடுவதும் அதை நிறை வேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேருவதும்தான் நம்பிக்கை ஆகும். 
     மனிதன் தான் மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை வைக்கதிருந்ததால் அவனால் எதுவும் செய்து முடிக்க இயலாது. ‘முயற்சி திருவினை ஆக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ எனும் வாசகங்களில் எல்லாம் தன்னம்பிக்கையில் இருந்து தோன்றியவையாகும். ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற அழுத்தமான சிந்தனைதான் தன்னம்பிக்கையின் அடித்தளமாகும். 
     நம்பிக்கை எனும் வலைப்பின்னல் சூழவே மனிதன் வாழ்ந்து விடுகிறான். 
     பெற்ற தாய் மீதும், கல்வி கற்பிக்கும் அசிரியர் மீதும் நண்பர்கள் மீதும் நம்மை சுற்றியுள்ளவர் மீதும் தம்மால் முடியாதஇயற்கையின் மீதும் நம்பிக்கை வைக்கும் நாம், தொடர்ந்து வாழ் நாள் எல்லாம் பலவிதமான நம்பிக்கை மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே,ஒருவர் தான் மீதும் நம்பிக்கை வைப்பதும் அதை வளர்ப்பதும் முடியாத ஒன்இல்ல. 
     தன்னம்பிக்கை என்பது ஒரு மனநிலை. இதனை எந்த வயதிலும் வளர்த்துக்கொள்ள முடியும். இது பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏன் குழந்தைக்களிடமும் காணப்படுகிறது. ஆம், தன்னம்பிக்கை மனோபாவம்  குழந்தைப்பருவத்திலேயே தோன்றி விடுகிறது. 
     ஒரு பசு மாடு கன்றை ஈன்றவுடன், பிறந்த கன்றுக்குட்டி தட்டி தடுமாறி எழுந்து நின்று நடக்கத்தொடங்குகிறது. முட்டயில் இருந்து வெளி வந்த கோளிக்குங்சு, பிறந்தவுடன் நடக்கிறது. 
     ஆனால், 
     மனிதன் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை. குழந்தைப்பருவத்தில் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறான். உட்காரவும்,தவழ்ந்து செல்ல கற்றுக்கொண்ட குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. பல முறை எழுந்தும் விழுந்தும் பின்னர் உறுதியாக நிக்கவும் கருக்கொள்கிறது. 
     அந்தக்குழந்தை தனது முதலாவது காலடியை எடுத்து வைக்கும் போதே, விழுந்து விடுவோம் என்ற பய உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் கொடுப்பவர் தாய். தான் குழந்தையை ஓரடி, ஈரடியாகக் காலடி எடுத்து வைக்கச்சொல்லி அக் குழந்தையின் மனதில் ‘உன்னால் நடக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துபவர் தாய்! குழந்தையின் ஒவ்வரு வளர்ச்சி பருவத்திலும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தாய் ஊட்டி வளர்க்கும் தன்னம்பிக்கையே!
    இத்தகைய தன்னம்பிக்கை ஊட்டம் பெறாத குழந்தைகளின் வளர்ச்சியில் கால தாமதமும் முன்னேறுவதில் சிறு தடுமாற்றமும் இருக்கும். இதனை, அக் குழந்தை நடை பயிலுவதிலும், பேசப்பழகுவதிலும் நாக்கு காண முடியும். 
    ஒரு குழந்தை சிறு வயதிலிருந்தே ஒரு கோழையாக வளர்வதற்கும் பெற்றோர் காரணமாகி விடுக்கின்றார்கள். இந்தக் கோழைத்தனம் தன்னம்பிக்கைக்கு தடையாக முன் நிற்கும். 
    குழந்தைப்பருவத்தில் தாயின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றவுடன் அதன் தன்னம்பிக்கையை வளர்ப்பார்கள் ஆசியியர்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறுகின்ற நம்பிக்கை ஒளி மிகுந்த சொற்கள், மாவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில்முக்கிய பங்காற்றுகின்றனர். மாணவப்பருவத்தில் மாணவர்கள் படிக்கும் பல நூல்கள், மாமனிதர்களின் வரலாறுகள், அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பள்ளியில் தங்கள் அறிவாற்றல் திறனை அறிந்தும் வளர்த்தும் தன்னம்பிக்கை பெறுவது போலவே, மாணவர்கள் தங்கள் பலத்தை தாங்களே உணர்ந்து கொள்ளச் செயும்படியான செயல்கள் மூலமாகவும் அவர்களது தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது.  
     விளையாட்டு ஆசிரியர் தரும் மாணவர்களின் விளையாட்டுத்திறனை வளர்க்கிறது. ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத்திறனை வளர்க்கிறது. இலக்கிய ஆசிரியரின் தன்னம்பிக்கை ஊட்டம் பெற்ற மாணவர்கள் பிற் காலத்தில் எழுத்தாளர்களாக, பீச்சலனாக சிறந்து விளங்க முடியும். 
     மாணவர்களிடம் காணப்படும் உடல் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை உணரச்செய்து, அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைக்களில் திறமை சளிகளை விளங்குவதற்கு பள்ளி பருவத்தில் தன்னம்பிக்கை டானிக்குகள் தருபவர்கள் ஆசிரியர்களே!
     ஆசிரியர்கள் எவ்வளவுதான் தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்த போதிலும், அந்த தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கிற அளவுக்கு வலித்தன பிரச்சனைகள், மாணவப்பருவம் கடந்த பிற காலத்தில், சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும்  ஏற்படும் போது, மழையில் கரையும் மண்மலை போல  அப்படியே சரிந்து போகிறார்கள் இளம் தலை முறையினர்! 
     வேலையின்மை,வறுமை, குடும்பச்சூழல் எனப் பல சூல்நிலைக்களில் துவண்டு போகும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தேவை படுக்கிறது. மனம் தளர்ந்து, சலிப்பு மிகுந்து, கடைசியில் விரக்தியடைந்து தற்கொலை பாதையை தேடும் இளையர்களும் இருக்கிறார்கள்.  இத்தகைய இளைஞர்கள் சொந்த வாழ்க்கையிலும், சமூக வல்ல்க்கயிலும் செயலூக்கக்கமாக பங்கு பெற அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டம் அவசியம். இச் சமயத்தில், அவர்கள் தங்களுடைய சிறந்த நண்பர்களிடமிருந்தும், அவர்களின் மரியாதையை  பெற்ற மூத்தவர்களிடமிருந்தும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள். 
          ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
          வாசல் தோறும் வேதனை இருக்கும்,
          வந்த துன்பம் எதுவென்றாலும், 
         வாடி நின்றால் ஓடுவதில்லை’
    என்று கவியரசன் கண்ணதாசன் சுட்டிக்கட்டுவார். வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை கற்று தருவதில் இலக்கியம் சிறந்த பங்காற்றுக்கின்றது. 
 ‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்! 
 ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்! வாழத்தேரியமலேயே       கொளைத்தனமகவே  
வாலிபத்தை விட்டு விடக்கூடாது!’
        என்று வலியுறுத்தும் கவிஞர் அ. மருதகாசி, ‘உள்ளத்தில் உரம் வீனுமடா’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
                    எண்ணெய் தீர்ந்து அணையப்போகும் அகல்விழக்கென எல்லா நம்பிக்கைகளும் வறண்டு போய் தற்கொலை பாதையைத் தேர்ந்து எடுத்துக்கொண்ட ஒருவரை, அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, நம்பிக்கையோடும்,செயல் துடிப்போடும் வாழ்க்கையை எதிர்கொள்ளச்செய்ய ஒரு புதினத்துக்கு ஆற்றல் உண்டா? 
        உண்டு! 
       என்னால் அடையாளம் காட்டமுடியும்! நச்சுக்கோப்பையை ஒரு கையிலும் அந்த நாவலை மறு கையிலும் எடுத்துக்கொள்ளட்டும்!
      இதக்கதையை படித்து முடித்ததும் ‘தாராளமாய் செத்துப்போ’ என்று சொல்லிவிட்டு கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்!
     அந்தப் புதினத்தை படித்து முடித்ததும் விஷக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை தேடும் ஆன்ம பலம் கொண்ட மானிடனாய் அவன் மாறி விடுவான்!
     ‘சாவுக்கே சவால்’ என்பது அந்த நாவலின் பெயர். இந்த நாவலை எழுதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை. பரர்களை பேனாவால் பிடித்து இந்த நாவலை எழுதிஉள்ளார். கால்விரலால் பேனாவைப்பிடித்து எழுதுவதை விட கடினமானது, உதடுகளில் பேனாவை பற்றி எழுதுவது! உலகில் எண்ணற்ற மொழிகளில் அச் செறிய அந்த நாவலைப் படித்தவர் ஒரு நாளும் அந்த நாவலை மறந்திட முடியாது. 
     ‘நீங்கள் பலவீனமானவர் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் நீங்கள் பலமர்ரவர்களாகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர் என்று எண்ணினால், பலமுடையவர்களாக ஆகிவிடுவீர்கள்’ என்று கூறும் விவேகனந்தர், உனது பலம் உனக்குள்ளே என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். 
     ஒருவன் தன பலத்தை தானே உணர்ந்து கொள்ளாது இருந்தால் அவன் பலவீனமனவனாகவவே இருப்பான். தன்னம்பிக்கை உள்ளவன்தான் தன பலத்தை உணர்ந்து இருப்பன்.
     தன்னம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு கருத்துதான். ஆனால் அந்தக்கருத்து ஒருவர் மனதைப்பற்றிக்கொண்டதுடன்அதற்கு பொருள் வகை சக்தி வந்துவிடுகிறது. இந்த சக்திதான் தடைகளைத்தாண்டி ஒருவர்க்கு வெற்றிபாதை நோக்கி நடை போடவைக்கிறது. ஒருவர்க்கு மன வலிமை ஊட்டுவதும் இதே நம்பிக்கைதான். ஒருவர் தன வால்க்கசில் ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி,வெற்றி’ என எக்க்கலாமிடத்தன்னம்பிக்கை தேவை! 
     வாழ்க்கை என்பது நீர் தேங்கிக்கிடக்கும் குளம். குட்டையாக இல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் இருக்க தன்னம்பிக்கை தேவை!
     கணம்தோன்றி கணம் மறையும் புழுக்களின் வாழ்க்கையாக மனித வாழ்க்கை இருந்து விடக்கூடாது. அதில் சாதனைகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி சாதனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தேவை!இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வலிக்கட்டும் ஒழி விளக்கு! அதன் வெளிச்ச மழையில் நனைபவர்க்கு முன்னேற்றம் கை தொடும் தூரமே! 
     உங்கள் மீது அதிக அக்கறையை உங்கள் பெற்றோரை விட யார் காட்ட முடியும்! அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கை முன்னேற வைக்கும் உங்களை! தன்னம்பிக்கை உங்களிடம் குறைவாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்.
#உங்கள் நல்ல நண்பரிடம் பேச்சு கொடுங்கள்! உள்ளத்தில் ஊரும் தன்னம்பிக்கை.
#உங்கள் மீது அக்கறை காட்டும் ஆசிரியர் ஒருவர் இருந்தால் போதுமே, தன்னம்பிக்கை உறமேர்ருவர் உங்களுக்கு. 
      _இது என்னால் முடியும்.
      _எனது முயற்சி வெல்லும்.
      _என்னால் சாதிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
                         
                   நன்றி
                                    இளவரசி

Monday, October 29, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 1


குறிக்கோளும் முடிவெடுத்தலும் 
இப் கட்டுரை பசுமைக்குமார் எழுதிய புத்தகத்தில் இருந்து படித்து அப்படியே உங்களுக்கு தருகிறேன் ... 

இளையவர்களை சமூக முன்னேற்றதுக்கு 
பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய
நோக்கம் கொண்ட வல்லவர்களாகவும் 
உருவாக்கிடவேண்டும். அப்படி அவர்கள் 
உருவாகிவிட அவர்களுக்கு குரிக்கொல்குறிக்கோள் 
பற்றிய தெளிவும், எந்த ஒரு பிரச்சனையிலும் 
தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
       இளமைப்பருவம் ஆக்கபுர்வமான சக்திகள் கொண்டது. வளமைமிக்கது. அபரிமிதமான ஆற்றல் கொண்ட இந்த இளம் பருவத்தினரைச் சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்க நோக்கத்திற்கும் இது பயன்படும். அழிவு நோக்கதிற்கும் பயன்படும். காட்டாற்று வெள்ளத்தை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது போல இளையதலைமுறையினரின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் தீயவர்களின் பிடிக்குள் சிக்கினால் அவர்களின் சக்தி யாவும் வீணாவதுடன் சமுதாயத்திற்கும் கேடாகமாறிவிடும்.
      இளையவர்களை சமூக முன்னேற்றதுக்குப் பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய நோக்கம் கொண்டவல்லவர்களாகவும் உருவாக்கிடவேண்டும்.அப்படி அவர்கள் உருவாகிட அவர்களுக்குக் குறிக்கோள் பற்றிய தெளிவும் எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
      அவரது குறிக்கோளை அடையலாம் கண்டு கொள்ளும் திறன் மிகவும் இன்றியமையாதது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை திசை தெரியப் பயணம் போன்றது. எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற தெளிவு வேண்டும்.
      இதுதான் பாதை, இதுதான் பயணம் என்ற புரிதலுணர்வு தேவை. வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல, அது இருந்த இடத்திற்கே சுற்றிச்சுற்றி ஒருநாளும் வருவதில்லை.
      வாழ்க்கை என்பது சூலலேணி வளர்சியைக்கொண்டது. ஆனாலும் அதில் தொடர்ச்சியான முன்னேட்டம் இருக்கும். இந்த சூலேணி படியில் எவ்வளவு படிகளைதொட வேண்டும் என்ற இலக்கு நிர்னயிக்காமல் தொடர்ந்து மேலேறுவது சோர்வெனும் பாறாங்கல்லைத் தலைக்குள் முளைக்க வைத்து விடும்.
     லட்சியதிற்குத்தான் சென்றடைய வேண்டிய இலக்கு, இலக்கை அடைவதற்கான திட்டம், திட்டத்தை நிறைவேடற்டறுவதற்கான மனபலம், விடமுயட்சி, துணிச்சல் போன்றன வேண்டும். தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
     வெற்றியாளர்கள் பல துறைக்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டாலே, அவை வெற்றியை நோக்கி வீர நடை போட உத் வேகம் ஊட்டும். 
     வெற்றியை விட ஒருபடி மேல் சாதனை. ஒரு இலக்கைத்தொட்டு, வெற்றியை ஆரத் தழுவிக்கொண்டவகள், அடுத்து நிர்ணயிக்க வேண்டிய இலக்கு என்பது சாதனை புரிவது. பல துறைகளிலும் நாமறிந்த, தெரிந்து கொண்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், நமது சாதனை மனோ பாவத்தை உரமூட்டி வளர்க்கும்.
     குறிக்கோளை அடைய நினைப்பவர்கள், வேர்ரியலர்களைத் திகழ விரும்புகிறவர்கள், சாதனையாளர்களை மாறத் துடிப்பவர்கள்ஆகிய இவர்களுக்கெல்லாம் வலிமை மிக்க அறிவாற்றல் தேவை. பலவீனமான எண்ணம் தோல்வியைத்தான் தழுவும். 
     எதிர் மறையான எண்ணம் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். ஒருவர் தன்னுடைய குறிக்கோளை கண்டு கொள்வது அவசியம். அது போலவே முடிவெடுக்கும் திறனும், பிரச்சனைகளை சந்திக்கும் துணிவும் அவசியம்.
     குழந்தைப்பருவம் முதல் இதற்கான பயிற்சி பெற்றால், இளமைப்பருவ வளர்ச்சியில் அவர்களிடம் ஆக்கபூர்வமான முன்னேர்ரதைக்கொண்டுவரும்.
     கால்களில் சிக்கியிருப்பது, உதறினால் கீழே விழும் கயிறு என்பதனை அறியாமல், பாம்பு ஒன்று காலைச் சுற்றியிருப்ப்பதாய் கருதிவிடக்கூடாது. சிக்கல் எதுவாயினும், சிக்கலி இருந்து விடுபட சிக்கல் முடிப்பபதை அவிழ்ப்பதா அறுத்து விடுவதா என்று முடிவெடுக்கத் தெரிய வேண்டும். 
     ஆதிரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள், ஆத்திரம் அறிவுக்ககன்களை மறைத்துவிடும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு பயணத்திற்கு தடையாக முடியலாம். முஇவு தவறாகும் போது, வெற்றி வெகுதுரம் பொய் விடும்.
     முடிவெடுக்கும் போது அறிவு பூர்வமா முடிவெடுத்தல் சாலச்சிறந்தது. உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்கக்கூடாது. “எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர். அதே சமயம் நிதானமாக எடுக்கும் முடிவு அல்லது தாமதமாக எடுக்கும் முடிவும் தொல்வியைத் தளுவலாம். காலம் கருதி செயற்பட்டால் ஞாலத்தையும் வெல்ல முடியும். 
     முவேடுக்கும்போது, தன் வலிமை, பிறரது  வலிமை, இடம், பொருள், இவள யாவும் நமது கவனத்திற்கு வர வேண்டும். மனித வாழ்க்கைக்கு பலவகையான திறமைகளை பெற வேண்டியுள்ளது. அதில் முடிவெடுக்கும் திறனும் ஒன்று. 
     குறிக்கோள் பற்றிய தெளிவும், முடிவெடுக்கும் திறனும் உங்களை வெற்றிபடிகளில் வீர நடை போட வைக்கும்! அந்த வீர நடைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
     சரியாகக் குறிக்கோளைக் நிர்ணயித்துக்கொல்வதும் சரியான முடி வெடுக்கும் திறன் பெறுவதும் தன்னம்பிக்கை தரும். தன்னம்பிக்கை இல்லாதவர்களால் தங்களுக்கான குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ள முடியாது. குறிக்கோளை அவர்கள் இனங்கண்டு கொள்ள  முடியாமலும் போய் விடும்.

    நாம் ஏன் குறிக்கோளை நிர்ணயிக்கத் தயங்குகிறோம்                   *நாம் வாழ்க்கையை பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. நம்மில் பலர் வாய் சொல்லில் வீரர்தான். அதை செயலில் காட்ட தயங்குகிறோம். 
*நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்வதில்லை. பிறர் நம்மை புரிந்து கொள்வது இல்லை என்போம். என் விதி என்போம். அனால், நம் செய்கைகளே நம் வாழ்க்கை தரத்தை நினஇக்கிறது என்று மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். வாயில் வந்ததைப்பேசி, வேந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம் என்றே பலர் எண்ணி வாழ்கின்றனர். 
*நம்மில் பலருக்கு தம்மை பட்டிய தால்வேன்னம் இருக்கிறது. ஒரு விதமான குற்ற உணர்வு அவர்களை அலைக்கழிக்கிறது. சிறு வயது முதலிலே, நாம் விரும்பத்தகதவர்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தால் இலக்குகளை நோக்கி வெற்றி நடை போட இயலுமா?
*பலர் இலக்கு நர்ணயம் செய்வது முக்கியம் என்று நினைப்பது இல்லை. வாழ்க்கையின் அன்றாட அலைச்சல்களில் சிக்கித்தவிக்கும் பலருக்கு குறிக்கோள் பற்றி தெரிந்திருக்க வழியில்லை. எப்படி குறிக்கோளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவது இல்லை.
*பலருக்கு பிறர் என்ன சொல்வார்களோ என்று பயம். நம்மைச்சுட்டி இருப்பவர்களால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு ஆவல். இதனால் பல நேரம் நாம் உண்மையாக விரும்புவதை செய்ய தயங்குகிறோம். சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களே செய்ய விழைகிறோம். நம்மை கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தில் குறிக்கோளை நிர்ணயிக்க மறந்து விடுகிறோம். நமது குறிக்கோள் நம்மை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது. யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறமோ அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டால் போதுமானது. 
*கடைசியாக தோல்வி அடைந்து விடுவமோ என்ற பயத்தின் காரணமாகவும் குக்கொல்களைதவித்து விடுகிறோம். தோல்வியே வெற்றியின் ஆரம்பம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். தோல்விக்கு பயந்தால் நம்மால் எந்த வேலைதான் செய்ய இயலும்?
          வெற்றியடைய வேண்டு என்ற தாகம் உடையவர்கள். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் நிரும் அகற்ற வேண்டும். 
          குறிக்கோளை அடைய தன்னம்பிக்கை தேவை. திட்டவட்டமான முடிவெடுக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் தன்னம்பிக்கை தேவை. 
          குறிக்கோளும் தன்னம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இவற்றை புஎஇந்து கொண்டு செயற்படும் போது, இளைய தலைமுறையின் ஒவ்வருவரின் ஆற்றலும் பயனுள்ள வழியில் பாய்ந்தோடும். பலன் பெருகும்!
          சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எவ்வாறு உதவுக்கிறது, தன்னம்பிக்கைகளுக்கு தடைகள் யாவை?

தன்னமிப்பிக்கை என்றால் என்ன?
“மனிதன் அற்புதமானவன், பல அற்புதங்களை படைக்கும் பிரம்மா” என்று உலக இலக்கிய மேதை மக்சிம்காங்கி வியர்ந்து பேசுவஅற. அத்தகைய அற்புதமான மனிதனின் வாழ்க்கை அருமையும் பெறுமையும் உடையதாக இருக்கவேண்டும்!
       ஆனால், 
       செயற்கரிய சிய நினைக்கும் மனிதன் நடந்தும் கடந்து செல்ல வேண்டிய பாதை வழுக்கம்நிலமாகவும், பாளை நிலமாகவும், காலை இடறச் செயும் பறைதளமாகவும் இருக்கிறது. சிறிது கவனம் தப்பினாலும் உடலும் உள்ளமும் ரணமாகிவிடும்! 
       அதனால், 
       “முன்னேறு மேலே மேலே” என அவன் நடை நடந்து செல்லும் போது கால்களில் ஒட்டிய துசிகளை உத்தற மறந்தால் அந்த துசிகளுக்கு இரும்பின் கணம் வந்து விடும்! ஈரம் சுமந்த பஞ்சு பொதியாய் மனம் கனத்துப் போகும், அவன் இட்ட அடி நோகும். எடுத்த அடி தளரும், நடை வேகம் குறையும். முன்னேற்றம் தோடு வனமாய் போய் விடும்! 
       பயிர் நிலதில்ன் கலைகள் மிகுந்திருந்தால் பயிரின் வளர்ச்சி தடைப்படும். மனித வாழ்வின் தளைகள் மிகுந்திருந்தால் முன்னேற்றம் தடைப்படும். ஆக, களைஎடுத்தலும், தளையறுதலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்! 
       ராபர்ட்புரூஸ் என்ற மன்னன், போரில் பல முறை தொல்விய்று, பகைவருக்கு அஞ்சி ஒளிந்து கொண்டு இருந்த போது, அவன் விழிகளுக்கு ஒழி எற்றி அவன் நெஞ்சுக்கு உரம் ஏற்றிய ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வருக்கிறதா? 
       வலை பின்னும் சிலந்தி தமக்குரிய வலையை பின்னி முடிப்பதர்கில் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை புரூஸ் மன்னன் வைத்த விழி அசைக்காமல் பார்துக்கொண்டு இருக்கிறான். அந்தச் சிலந்திக்கு சோர்வே இல்லையா? அதற்கு அலுப்பு ஏற்படவே இல்லையா? திரும்ப திரும்ப நூள் அறுபடும், வலை பின்னும் முயற்சி தடை படும். அதனால் என்ன? வலை பின்னி முடிக்கும் வரை அது ஓயவில்லை. வலை பின்னிய வெற்றி பெருமிதத்துடன் சிலந்தி?
      இவன் மட்டும் என்ன சோர்ந்து கிடக்க வேண்டும்? திரும்ப திரும்ப முயற்சி செய்தல் வெற்றி கிட்ட முடியாமலா போய்விடும்? வலை பின்னும் சிலந்தி சொல்லித்தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கை ஊற்றைத் திறந்து விட்டது. அந்தத் தன்னம்பிக்கை அவனை  வெற்றியாளனாக்கி விட்டது. 

Monday, October 22, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்)பகுதி 4


சின்ன வயதிலேயே இதற்கு முன்பும் சீனிவாசன் சென்னைக்குப் போயிருக்கிறார். நண்பர் ஒருவர் இவரை வால்டாக்ஸ் ரோடில் ஒத்தக்கடை தியேட்டரில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.

   அங்கு எடுப்பு வேலை, நாற்காலி தூக்கணும், துடைத்துச் சுத்தம் செய்யணும். காலையில் 1 பணம், இரவு 1 பணம் கூலி கிடைக்கும்.

   அதையே கை மேல் பலனாய் நினைப்பார். கையில் காசு பார்க்கும் சந்தோஷம். உழைப்பின் ஊதியம்! சின்னதோ பெரிதோ பலன் உடன் கிடைக்கிறது. வருமானம் கண்முன் தெரிகிறது.

   விவசாயத்தில் உடனே எதையும் எதிர்பார்க்க முடியாது. நிலம் சுத்தம் பண்ணி –உழுது –பயிரிட்டு –களை பறித்து –மருந்தடித்து –உரமிட்டு –மழை –இயற்கை சீற்றத்துக்குப் போராடி –ஈடு கொடுத்து –இரவு பகலாய்ப் பாடுபட்டாலும் –மூன்று மாதமோ –ஆறு மாதமோ கழித்துத்தான் பலன் தெரியும்.

   தானியம் வீட்டுக்கு வந்தாலும்கூட விற்கும்போது உரிய விலை கிடைக்காது. தூக்கிச் சுமந்து கொண்டு போய்ப் போன விலைக்குத் தள்ள வேண்டும்!

   ஆனால் –அங்கே –மதிப்பு மரியாதையில்லாவிட்டாலும் உடனே காசு கிடைக்கிறது! சொத்து சுகமில்லாவிட்டாலும் எங்கே வேண்டுமானாலும் போய்ப் பிழைக்கலாம் என்கிற தன்னம்பிக்கை அவருக்கு அப்போது வந்திருந்தது.

   அந்தத் துணிச்சல் காரணமாய் –வானமே எல்லை –பூமியில் எதுவும் இல்லாமலில்லை –ஒரே வானம் –ஒரே பூமி –எல்லாம் நமதே என்று பொள்ளாச்சிக்கு ஓட்டம்!

    ஆழியாறு டேமில் கல் தூக்கினார். அங்கு ஒருவாரம் பத்து நாட்கள் சம்பாதித்துச் சென்னைக்குப் பயணம்!

    வால்டாக்ஸ் ரோட்டில் சுந்தர் லாட்ஜில் தங்கி அங்கு இரவு கடையில் மாலை 4 முதல் 11 வரை எடுபிடி. 60 ரூபாய் சம்பளம், கூட வேலை பார்த்தவர்கள் பகலில் தூங்கி அல்லது ஊர் சுற்றிப் பொழுதைக் கழிக்க, சீனிவாசனுக்கு அப்படி வெட்டியாய்ச் சுற்றித் திரிய மனமில்லை.

   சும்மா சுற்றுவதற்குப் பதில் பகலிலும் ஏதாவது வேலை செய்யலாமே என்று வேலை தேடினார். எக்மோர் சந்திரபவனில் கிடைத்தது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரை –அங்கும் 60 ரூபாய் சம்பளம்.

   இரண்டு இடத்திலும் தொடர்ந்து வேலை. ஓய்வு கிடையாது. லீவ் எடுப்பதில்லை. எந்த  ஒரு காரியத்திலும் ஆத்மார்த்தமாய், மனம் ஒன்றி ஈடுபட்டால் உடல் சோர்வதில்லை. ஓய்வும் தேடுவதில்லை, உற்சாகமாய்ச் செயல்பட முடியும்.

   முடிந்தது!

   இதற்கிடையில் பாட்டிக்கு உடம்பு முடியாமல் போக – சீனிவாசனைத் தேடியிருக்கிறார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு எப்படியோ தகவல் பெற்று அண்ணன் இவரைத் தேடி வந்து விட்டார், கண்டுபிடித்து -``வா ஊருக்குப் போகலாம் –பாட்டி உன் நினைப்பில் வாடுகிறது ‘’என்று அழைத்தார். உடன் இவரது மனதும் கரைந்து போயிற்று, பாட்டி நினைப்பு எடுக்க -``சரி போய் ஒரு எட்டு பார்த்து வருவோம்’’ என்று கிளம்பினார்.

(4)

   விவசாயம் என்பது இன்று மட்டுமில்லை அன்றும்கூட லாபகரமானதாய் இல்லை. விவசாய நாடு என்கிறோம். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்போம். ஆனால் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவரும் கண்டுகொள்ள மாட்டோம்.

   தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை. கெளரவம் பார்த்துக் கொண்டு ஆட்கள் நகரத்திற்கு படையெடுத்தல்! பட்டணம் என்றால் சொகுசு வேலை – சொகுசாய் இருக்கலாம் என்கிற கனவு.

      கஷ்டப்பட்டுப் பயிர்களை வளர்த்தாலும் நோய்த்  தாக்குதல், பூச்சி, அரிப்பு! மருந்தடித்து மாள்வதில்லை. தேவைக்கு மழை இல்லாமல் அறுவடை சமயம் வந்து அழித்தல்!

   முன்பெல்லாம் ஆடு,   மாடுகள் கிராமங்களில் பெருத்திருக்கும். மாடுகள் –வண்டி –ஏர்- அவற்றிற்குத் தீவனம் –அவற்றின் மூலம் பால்  -எரு என இயற்கையோடு ஒன்றி –செயல்பட்ட காலத்திலும் கூட நஷ்டம்.

   என்னதான் முனைந்து பாடுபட்டாலும்,எதிர்ப்பார்க்கிற பலன் விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. எல்லாப் பிரச்சனைகளையும்  மீறி மகசூல் எடுத்தாலும் கூட உரிய விலை கிடைப்பதில்லை.

   ஆகையால் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்து பிரயோஜனமில்லை என்பது சீனிவாசனுக்குப் புரிந்தது. இளம் ரத்தம். உள்ளுக்குள் வேகம் –உடலில் தெம்பு! மனதில் மமதை! நம்மால் முடியும் –முடியாதது எதுவுமில்லை என்கிர வெறி.

   ஊரில் வானம் பார்த்த பூமி ஆறு மாதத்திற்கு மட்டுமே வேலை. மற்ற நாட்களில் வெட்டியாய்ப் பொழுது போக்குவரத்து இவருக்குப் பிடிப்பதில்லை. உருப்படியாய் எதுவும் செய்யாமல் –வாழ்வை வீண்டிக்கிறோம் என்கிற உறுத்தல்.

   வேலையில்லை –சும்மாயிருக்கிறோம் என்பதற்காக ஊரை விட்டுப் போக முடியாது! விவசாயப் பணிகள் இல்லாவிட்டாலும் கூட மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வயிலிலும் சின்னச்சின்ன வளப்படுத்தும் வேலைகளையும் செய்தாகணும்.

   நிலங்களையும் கவனித்துக் கொண்டு, அதிகப்படி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்கிற யோசனை போயிற்று.அப்போது உதித்தது  மளிகைக்கடை! அத்துடன் டீ ஸ்டால்! அப்புறம் சைக்கிள் கடை!

   கடை என்று ஆரம்பித்த பின்பு –பலருடனும் பழகும் வாய்ப்பு! செல்வாக்கு! அத்துடன் கொஞ்சம் செருக்கும் தோன்றும். எப்போதும் எதிலாவது உடலைச் செலுத்தும் போது திருப்தி. மனதும் செழிக்கும், உடலும் வளப்படும், நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையும் வளர ஆரம்பித்தது.

   புது நடுவலூரில் கடை வளர்ந்து வந்த போது சீனிவாசனின் அண்ணன் ஒருவர் இறந்து போனார், கடைக்கும், வயலுக்கும் ஆள் தேவைப்பட்டது.

    அப்போது 1959.

   இன்னொரு அண்ணன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஆதரவில்லாமல் இருக்கவே சீனிவாசன் அவரை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    அதுவரைப் பட்ட கஷ்டமெல்லாம் போய்ச் செல்வாக்குடன் அவர் முன்னுக்கு வரும்போது கண்படுகிற மாதிரி சிக்கல் ஒன்று இவரது கதவைத் தட்டிற்று.

    ஆக்கல் என்பது கடினம், அழிப்பது ரொம்ப எளிது. கிராமத்தில் அடிமட்டத்தில் கிடந்த ஒருவன் –அதுவும் சிறுவன் வேகமாய் முன்னுக்கு வருகிறான் என்பதைப் பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

   இவனை எங்கே தட்டலாம் –எப்படிக் குழி பறிக்கலாம் என்று பலரும் பார்த்திருந்தனர். சீனிவாசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த பிரச்சனைக்கும் இடம் தராமல் காரியமே கண்ணாய் இருந்தார்.

  அங்கு ஊரில் அப்போது ராஜ் ரெட்டியார் என்பவர் மிகவும் செல்வாக்குடன் இருந்தார். வசதி –மிடுக்கு –செருக்கு என எல்லாமும் கொண்டவர். அவருக்கு ஒரு மகள்.

   அவள் கடைக்கு வரப்போக –சும்மா திரிவதைச் சிலர் திரித்துவிட்டனர். தீ கொளுத்திப் போட்டனர்.

சோழர்களின் பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டன


பிற்காலச் சோழர்களின் வரலாறு அடங்கிய செப்பேடுகள் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர். "இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம்," என்று மு.கருணாநிதி கூறியுள்ளார்.

கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் இரா.நாகசாமி தெரிவித்தார்.

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிருத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராசேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாம் ராசேந்திரசோழன் வெளியிட்டுள்ளான்.

இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பது போல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.

Monday, September 24, 2012

நல்லதங்காள்



தமிழ்மொழியில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இது பிரிசுரிக்கப்பட்ட ஆண்டு 1879.இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலாகும். இது வசன நடையில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
ஆதியூர் அவதானி சரிதம் என்ற ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நூல் முதன் முதலில் 1875-ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. இது பாட்டு (கவிதை) வடிவில் இருக்கிறது. இதை எழுதியவர் து.வி. சேஸய்யங்கார். கவிதை வடிவில் எழுதியுள்ளதை நாவல் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே ஆதியூர் அவதானி சரிதம், பாட்டு வடிவில் இருந்தாலும் அதுவும் நாவல்தான் என்று சாதிக்க சிலர் சில காலமாக முயற்சி செய்து வந்தார்கள். எழுத்து துறையில் பத்திரிகை தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த இதை ஒரு சாதகமாகப் பயன்படுத்த நினைப்பார்கள்.
“அமுத சுரபி” என்ற மாத இதழில் (1.9.1989) ‘கிட்டி’ என்ற எழுத்தாளர் தம்முடைய கட்டுரையில் கூரியது.
“வடிவம் ஒன்றைத்தவிர , மற்ற எல்லா அம்சங்களிலும் நாவல் என்று ஓட்டிகொள்ளக்ககூடிய, இந்த படைப்பு தமிழ் உரை நடையில் இந்த வடிவம் வருவதற்கு முன்பு, தோன்றிவிட்டதால், முதல் தமிழ் நாவல் என்றாகிவிடுகிறது”.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர், ‘சில இந்திய மொழிகளில் முதல் நாவல்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதன் முதல் பதிப்பு 2001-ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில், ஆதியூர் அவதானி சரிதம் என்ற நூல் பற்றி அவர் எழுதியது. 
(பக்கம் 143)”சேஷய்யங்கார் தன் படைப்பை அதன் வடிவம் காரனமாகச் சலசலப்புக்கு உட்பட வைத்துவிட்டார். சேஷய்யாங்க்காருடைய படைப்பை சந்தேகமற நாவல்தான் என்று கூற முடியாவிட்டால் 1875-ஆம் ஆண்டிலேயே தமிழ் நாட்டிலும் ஜாதி, ஆசாரம், திருமணம், விதைவைகள் நிலைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து எழுத்தில் வடித்து, செயலிலும் காட்டியது தமிழ் நாவல் வரலாற்றில் அவசியம் இடம் பெற வேண்டியதே”
இவர்களுடைய முயற்சியெல்லாம் கிறிஸ்தவர் எழுதிய நூல்களை முதல் நிலையிலிருந்து இறக்கி, பிராமணர் எழுதிய நூலுக்கு கெளரவம் தேடித்தந்த நம் முயற்சியாகும். 
வசன நடையில் இல்லதிருந்தளும்கூட, பாட்டு நடையில் சமூகப்பார்வை கொண்டதாக இருக்குமேயானால் அது நாவல் என்று சொல்கிறார். இவர்களும் ‘நல்லதங்காள்’ கதை தெரியுமா? 
புகழேந்தி என்றொரு தமிழ் புலவர், வாழ்ந்த காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய நூல்களில் ஒன்று ‘நல்லதங்காள்’ என்ற நூல். இது பாட்டு நடையில் எழுதப்பட்டது. இவர்களது அர்த்தத்தின்படி சமூகப்பார்வையில் சமூகப் பிரச்சினையை பாட்டாகச் சொல்லும் யதார்த்த நூல்.
 நல்லதங்காள் என்ற குடும்ப பெண்ணிற்கு ஏழு குழந்தைகள். கணவர் வெளிதேசம் சென்றவன், பல காலமாகியும் திரும்பி வீடு வரவில்லை. குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்லதங்காள் பக்கத்து நாட்டிலுள்ள அண்ணன் வீட்டிற்குப் போகிறாள். அண்ணன் அந்நிய நாட்டிற்கு திரும்பவில்லை. அண்ணியின் பெயர் அலங்காரி. அண்ணியின் கொடுமையைத் தாங்கமுடியாமல், பசியால் தவிக்கும் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி அருகாமையிலுள்ள காட்டில் உள்ள கிணற்றில் விழுந்து மடிந்தாள். நல்லதங்காளை தேடிக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு கணவன் வந்தான், வீடு திரும்பி வந்த அண்ணனும் நல்லதங்காளை தேடிச்சென்று, குழந்தைகளும் நல்லதங்காளும் மாண்டுபோனதைக் கண்டு கதறி அழுதார்கள் . 
 இது நல்லதங்காள் கதை. எனவே சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவைதனை சரிதம் தமிழில் எழுதப்பட்ட ‘முதல் நாவல்’ அல்ல. வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரிதம்” தான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்.....