Friday, September 21, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) பகுதி


வறுமை ஒரு பக்கம் என்றால், வீட்டிக்ல் அண்ணன்களின் அடாவடித்தனம் இன்னொரு பக்கம், தலைவலி ஏற்படுத்திற்று. சாதாரணமாய் மூத்தவர்கள் பொறுப்பாய் நடந்து குடும்பத்தையும் இளையவர்களையும் காப்பாற்றுவதுண்டு. இங்கே அவர் விஷயத்தில் எதிர்மறை அப்படி ஒரு `அதிர்ஷ்டம்’ இவருக்கு!

   இருவரும் கஷ்டநஷ்டத்தை உணர்வதில்லை, உழைப்பதில்லை,உழைக்கத் தயாராகவும் இல்லை. வேண்டாத சிநேகத்தில் –வேண்டாத பழக்கவழக்கங்கள்! எதுவும் எளிதாய்க் கிடைக்க வேண்டும் சொகுசு வேண்டும் –ஊதாரித்தனம்!

   உழைக்காமல், சம்பாதிக்காமல் சொகுசு எப்படி வரும்? ஊரில் சோம்பேறிகளாய் எப்போதும் ஒரு கோஷ்டி இருப்பதுண்டு, முச்சந்தியிலும், டீக்கடையிலும் அமர்ந்து அரட்டை, எகத்தாளம், ஊர்வம்பு!

   இந்தக் கும்பலில் அண்ணன்களும் சேர்ந்து கெட்டுப்போக ஆரம்பித்தனர். பாட்டியின் பேச்சு அவர்களிடம் எடுபடவில்லை. கண்டித்தால் எகிறுவர்.

   வயலில் வந்து வேலை செய்வதில்லை. உதவுவதில்லை.ஆனால் அறுவடை சமயத்தில் வரும் வருமானத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப்போய் அது தீர்ந்த பின்பு திரும்பி வருவர். அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது, திருத்த முடியாது. சீனிவாசனுக்கு வெறுத்தப் போகும் எதிர்த்துப் பேசினால் அடிவிழும்.

   சின்ன வயதில் அவற்றை எதிர்கொள்ளும் –தாங்கும் உடல்வலிமையும் மனோதிடமும் சீனிவாசனிடம் இருந்ததில்லை. பயம், தயக்கம், ஒரு சமயம் வீட்டிலிருந்து எதுவும் கிடைக்காமல் போகவே, அண்ணன்கள், பாட்டி வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு ஓடிப் போயினர்.

   எல்லாக் கஷ்டத்தையும் இளமையிலேயே சீனிவாசன் தாங்க வேண்டிய கட்டாயம். பாட்டியை நினைத்து அவரும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். அவரது மனதில் எப்போதும் நாம் வளரணும், முன்னேறணும் –என்கிற தீ! பாட்டி கொடுத்த உற்சாகம் –நிச்சயம் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திற்று.

    வீடு –காடு –மாடுகள் எனப்பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சீனிவாசனால் பள்ளிக்கும் சரியாய்ப் போக முடியவில்லை. நாலாம் வகுப்புக்குப் பிறகு பார்க்க முடியாத நிலைமை.

   அந்த நாட்களில் பள்ளிக் கட்டணமாக நெல் அல்லது வரகு –என்றால் இரு மடங்கு தர வேண்டும். வாத்தியார்களுக்குக் காய்கறி பால்! இப்படி எல்லாம் தரணும். இவற்றைத் தர முடியாமல் போனதும் கூட படிப்பை நிறுத்துவதற்குக் காரணமாயிற்று.

   படிப்பு இல்லாவிட்டால் என்ன –வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களெல்லாம் நிரம்பப் படித்துவிட்டா வந்தார்கள்? நாமும் அவர்களைப் போல முன்னுக்கு வருவோம் எனக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.

   இவருக்கு ஊக்கம் தந்தது ஒரு பக்கம் பாட்டி –மறுபக்கத்தில் எம்.ஜி.ஆரின் படங்கள். அவரது படப்பாடல்கள்! அவரது படத்தில் போதிக்கும் விஷயங்கள் எல்லாம் இவரை வளப்படுத்தின. தன்னம்பிக்கையை ஏற்படுத்தி நேர்மை –நியாயம் –கடமை –கண்ணியம் –கட்டுப்பாடுப் பாதையில் வழிகாட்டின.

   சில வருடங்கள் கஷ்டப்பட்டு ஓரளவிற்கு வயல் வரப்புகளைப் பாதுகாத்து வைத்திருந்த போது ஓடிப்போன அண்ணன்கள் திரும்பி வந்தனர். திருடின நகைகள் விற்று –தீர்ந்திருக்க வேண்டும்.

   மறுபடியும் பிரச்சனை. பொறுப்பில்லாமல் நடந்து கொண்டோம் –வீட்டில் திருடினோம் –  ஓடிப்போனோம் என்கிற வருத்தமோ –கூச்ச நாச்சமோ கொஞ்சமும் அவர்களிடமில்லை, தங்களின் தவறுகளை மறைக்க வேண்டித் தகராறு பண்ணக் கிளம்பினர்.

   இந்த முறை அடித்துக் கொண்டு போக பணமோ, தானியமோ, நகைகளோ கிடைக்காத போது தங்களின் பங்கைப் பிரித்துத் தரும்படி சண்டைபிடித்தனர். மறுபடியும் மண்டைக் காய்ச்சல்! சம்மதிக்கா விட்டால் வெளியே அசிங்கமாகும். பசி –பட்டினி பரவாயில்லை –தாங்கிக் கொள்ளலாம். மானம் போகும்,ஊர் கேலி பேசும்.

   வேறு வழியில்லாமல் இருந்த பவுன்களைச் சகோதரர்களுக்குப் பிரித்து கொடுத்து நிலங்களைப் பிரித்து எழுதினர். ஆனால் அவர்கள், தங்கள் பங்கில் பாடுபடாமல் வெளி நபருக்கு விற்றுவிட்டுக் கிளம்பினர்.

   அது சீனிவாசனுக்கு மேலும் வருத்தம் தந்தது. என்ன உடன் பிறப்புகள் இவர்கள்! நம்மை வாழவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே என நோகடித்தது. ஆனாலும்கூட இவர் மனம் தளரவில்லை.

   அப்போது அவருக்கு 14 வயது,

   கொஞ்சம் வெளி அனுபவத்தில் துணிவு கொஞ்சம் வந்திருந்தது. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை! தொடர்ந்து செயல்படு எனும் உந்துதல்!

    நாம் தப்புச் செய்யாத போது –நேர்மையாய் நடக்கும்போது எதற்காகக் கலங்கணும்? எதற்காகப் பயப்படணும் என்று சமயோகிதம் அறிந்து பயிரிட ஆரம்பித்தார். வெங்காயம், மிளகாய்,நிலக்கடலை என நன்றாகச் சாகுபடியாயிறு. மெல்ல மெல்லப் பணம் சேர்த்து அண்ணன்கள் விற்ற –தங்கள் பூர்வீக நிலங்களைத் திரும்ப வாங்கினார்.

   அது இவரது வாழ்வின் முதல் சாதனை. அது –முயன்றால் முடியாததில்லை –இங்கு எதையும் பெறலாம் –என்கிற மனபலத்தைத் தந்தது. மனம் பலப்படும்போது இயல்பாகவே உடலும் பலப்படுகிறது.

   என்னதான் நிலங்கள் இருந்தாலும், விவசாயம் செய்தாலும் கூட மழை  -காற்று –வெள்ளம் –வறட்சி –என இயற்கையின் முரண்பாடுகளால் போதுமான அளவில் பலன் கிடைக்காமல் போகும் நிலைமை.

   உடன்,மனது வேறு வழிகளிலும் சிந்திக்க ஆரம்பித்தது.

                       (3)

  அந்த நாட்களில் அதாவது 1958 வாக்கில் –கிராமங்களில் மின்சாரம் கிடையாது. பாசனத்திற்குப் பம்பு செட்டுகள் இல்லை. அப்போது நீர்ப் பாசனத்திற்கு  -மாடு கட்டி –தாம்புக் கயிறு –சாலில் தும்பி கட்டித்தான் இறைப்பார்கள்.

   தினமும் இரவு பகலாய்த் தண்ணீர் இறைக்க வேண்டி இருக்கும், இல்லாவிட்டால் பயிர் காய்ந்து விடும். அந்த மாதிரி இறைக்கும் போது ஒரு சமயம் தும்பி கிழிந்துவிட –அண்ணனுக்கு மகாகோபம்.

   ``பொறுப்பிருக்கா உனக்கு ....? ஏன் தும்பியைக் கிழித்தாய்...? என்று சீனிவாசனைப் போட்டு அடித்துவிட்டார். அது இவரை ரொம்பவே நோகடித்தது.

   ``எனக்கா பொறுப்பில்லை! ராத்திரி பகலாய் உழைக்கிறேன் வெயிலும் மழையிலும் அவஸ்தைப்படுகிறேன். உணவு –உடை –பொழுதுபோக்கு –சொகுசு என்று எல்லாம் துறந்து –மறந்து பாடுபடுகிறேன்.

   தும்பி பழசாகிக் கிழிந்துவிட்டால் அதுக்கு நானா பொறுப்பு! ஊர் சுற்றியான அண்ணன் எப்படி என்னை அடிக்கலாம்? உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைக்கும் பரிசு இதுதானா?

   என்னை அடிக்க அல்லது தண்டிக்க அண்ணனுக்கு என்ன தகுதியிருக்கிறது? கட்டபொம்மன் பாணியில் ...! உழுதாயா... நாற்று நட்டாயா –களை பறித்தாயா –நீர் இறைத்தாயா ..வியர்வை சிந்தினாயா ..அடிக்க மட்டும் வந்து விட்டாயே .. நீ யார் என்னைத் தண்டிக்க..’ என்று மனது ஆவேசப்பட்டது.

   வயதில் மூத்தவன் என்கிறதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா?

   ஆனாலும் கூட அண்ணன் எதிர்க்கும்  -சண்டை பிடிக்கும் தைர்யம் வரவில்லை. முடியவில்லை.  விரக்தி, வெறுப்பு, போதும்டா சாமி, இங்கே ஊரில் என்ன செய்தாலும் முன்னுக்கு வர முடியாது என்று தீர்மானித்தார்.

   ஊரில் ஒப்பேற்ற முடியாதவர்கள்! பட்டணத்திற்கு ஓடிப் போவது அந்த நாளில் வாடிக்கை! அந்த மாதிரி ஓடிப் போன சிநேகிதர்களின் யோசனைப்படி சீனிவாசனும் ஓட்டம்!

    வேறு எது பற்றியும் சிந்திக்கவில்லை.எங்கு –எத்தனை கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. இவர்களுக்கு முன்னில் வளர்ந்து காட்டணும் என்கிற வைராக்கியம். கஷ்டம் தனக்குப் புதிதல்ல.கல் –முள் –வெயில் –மழை ஒரு பொருட்டல்ல. எல்லாம் பார்த்தாயிற்று. பாரம் சுமந்தாயிற்று. இதற்கு மேல் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?.
                                                                                      முன்னேறும் ...

Friday, August 10, 2012

தன்னம்பிக்கை தமிழர்கள் - "என்.சி.மோகன்தாஸ்"






சமுதாய நோக்கோடு-நேர்மையாகவும்-அதே சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு ஆட்சியாளர் மூலம் தீர்வு காணும் வகையில் வெற்றிகரமாகவும் பத்திரிகை நடத்தி வருவதற்கிடையில்-

   வெறும் பொழுதுபோக்கு அல்லது  ஃபேஷன் என்கிற அளவில் இல்லாமல் தமிழ்மேல் பற்றுக் கொண்டு ஆத்மார்த்தமாய் சங்க நாணயங்களின் ஆராய்ச்சியை செய்து விருதுகள் பல பெற்று தமிழக சரித்திரத்திலும் இடம் பிடித்திருக்கிறார் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

   தமிழ் செம்மொழியாவதற்கு இலக்கியப் பூர்வமான ஆதாரங்கள் மட்டும் போதாது என்று கருதப்பட்டது. அதன் காரணமாக இவர் ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்துள்ள இந்த நாணய விஷயங்கள், தொல்பொருள் சான்றாகவும் அமைந்திருப்பது உண்மை. நமக்கும் பெருமை.

   எளிமை- வயதை மீறிய இளம்தோற்றம்- தமிழ்ப்பற்று- விஷய ஞானம்- சமூக அக்கறை- தளரா உழைப்பு-வேகம்- விவேகம் என இவரிடம் ஏராளமான சிறப்புகள்.

   அந்த நாட்களில் வடிவீஸ்வரம் கிராமத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் இவரது படிப்பு ஆரம்பமாயிற்று.ஆசிரியர் மணலில் எழுதித்தான் சொல்லித் தருவார்!

   ஒருவருடம் கான்வென்ட்! பிறகு எஸ்.எல்.பி. இங்கிலீஷ் பள்ளி! எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பில் ஆர்வமில்லாமல் சுமாரான மாணவராக இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இண்டர்மீடியெட்  சேர்ந்ததும் வியக்கத்தக்க மாற்றம்!

   இயல்பிலேயே கணக்கின்மேல் பிணக்கு என்பதால் இரண்டாம் குரூப் எடுத்து மெடிக்கல் சேரும் லட்சியத்தில் இவரது படிப்பு ஆர்வம் அதிகமாயிற்று.

    அதன் பலன் - முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருவரில் ஒருவர் எனும் பெருமை இவருக்கு! இருந்தும் கூட மெடிக்கல் சீட்  கிடைக்காமல் அழகப்பா கல்லூரியில் பி.எஸ்.ஸி (ஜியாலஜி) சேர்ந்து தமிழ் மாநிலத்திலேயே முதல் மாணவராக வெளியே வந்தார். 

    இதற்கிடையில் இளம் வயதிலேயே  1953ல் இவருக்கு திருமணம்! திருமணத்தை தன் படிப்புக்கு  தடைக்கல்லாக ஆக்கிவிடாமல் கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ.(ஜியாலஜி) பிரசிடென்ஸி கல்லூரியில் முடித்தார். அப்போது மெரிட் அடிப்படையில் அவருக்கு அரசாங்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

   ஆனால் அதை மேல்படிப்புக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை. வேகமாய் வளர்ந்து வந்த தினமலர் பத்திரிகையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு!

   ``ஜியலாஜி பட்டதாரியாக அரசாங்க வேலை பார்த்து சாதிப்பதை விட பத்திரிகை துறையில் நிறைய சாதிக்கலாம். நம் மக்களுக்கும் தொண்டு செய்யலாம்’’ என்று தந்தை திரு. இராமசுப்பைய்யர் சொன்ன வாக்குகளில் இருந்த உண்மை இவரை பத்திரிகை துறை பக்கம் திருப்பிற்று.

   உப்பு உற்பத்தி தொழில் செய்து வந்த மறைந்த திரு.ராமசுப்பைய்யர் 1951ல் தினமலர் நாளிதழை ஆரம்பித்தார். முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அச்சான பத்திரிகை தமிழ்நாடு தனி மாநிலமான பிறகு 1957 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.

   தச்சாநல்லூரில் இயங்கிய அந்த நாட்களில் இன்றுபோல வசதிகள் இல்லை. கையால் அச்சு கோர்ப்பு - சிலிண்டர் மெஷின்! மின்சார தட்டுப்பாடு! ஜெனரேட்டர்களும் கிடையாது!

   திருநெல்வேலியில் வேறு தமிழ் நாளிதழ்கள் இல்லாததாலும் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாலும் 3 ஆயிரம் பிரதிகளில் ஆரம்பித்த பத்திரிகை வேகமாய் உயர ஆரம்பித்தது.

   டெலிபோன், ரேடியோ மூலம் செய்திகள் சேகரித்த அந்தக் காலத்தில் நெல்லையில் முதன் முதலில் டெலிபிரிண்டரை பயன்படுத்தியது இவர்கள் தான்.

    1962 ல் மேல்நாட்டு மிஷின்கள் வரவழைத்து அலுவலகம் சென்னையில் உள்ள வண்ணாரபேட்டைக்கு மாறி- மதுரை வரை விற்பனையாயிற்று.

     இன்று என்றில்லை - கட்சிக்காரர்களின் மிரட்டல் அந்த நாட்களிலும் இருக்கவே செய்தது. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களை வெளிப்படுத்தும் போது ரெளடிகளை அனுப்பி `பதம்’ பார்க்கிற கலாச்சாரத்தையும் எதிர்கொண்டு- தினமலர் வளர்ந்திருக்கிறது. எதிர்நீச்சல் தினமலருக்கு புதிய விஷயமல்ல!

திருச்சி பதிப்பு 1966ல்!

     தினமலர் தி.மு.கவுக்கு எதிரானது என கலைஞரிடம் ஒரு தவறான தகவல் தந்து - 1969 அவரது ஆட்சியில் அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.

     ஏகப்பட்ட நிதி நெருக்கடிக்கிடையில் சின்னச் சின்ன கோர்ட் விளம்பரங்களை போட்டு சமாளித்ததை கிருஷ்ணமூர்த்தி இன்றும் நினைவு கூர்கிறார்.

     1972ல் எம்.ஜி.ஆர் தனியாய் கட்சி ஆரம்பித்த போது தினமலருக்கும் ஒரு  திருப்புமுனை! பரபரப்பாய் விற்பனை! அது வளர்ந்து வளர்ந்து சென்னை, மதுரை, ஈரோடு... என பரவி இன்று 10 பதிப்புகள்!

   படித்தது ஜியாலஜி என்றாலும் கூட கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ்மேல் ஆர்வம் அதிகம். தமிழ் எழுத்துகளை கம்போஸ் செய்வதில் ஏன் இத்தனை சிரமம் என இவர் ஆராய்ச்சியில் இறங்கினார். அதற்கு தமிழாசிரியர் ராமமூர்த்தி இவருக்கு உதவி செய்தார்.

    கல்வெட்டு, வட்டெழுத்து பற்றி இவர் படித்து, நேரில் போய் பார்த்து ஆராய்ச்சி செய்து வட்டெழுத்து பற்றி மூன்று புத்தகங்களுக்கு எழுதியிருக்கிறார்.

    இந்த ஆர்வமே இவர் பின்னாளில் நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க காரணமாய் அமைந்தது.

     கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் எழுத்து சீர்திருத்த இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டு 1978ல் ஏகப்பட்ட எதிரிப்புக்கிடையே பெரியாரின் எழுத்தை தினமலரில் புகுத்தினார்.

     1987ல் கம்ப்யூட்டர் வந்த பின்பு- தமிழ் எழுத்து கம்போஸிங்கிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமை.

      கிருஷ்ணமூர்த்தி பூனா கம்பெனியுடன் சேர்ந்து சாஃப்ட்வேர் உருவாக்கி, அவர்களுக்கு இலவசமாய் ஐந்து  ஃபான்ட்கள் தயார் செய்து கொடுத்தார். பூனா கம்பெனி அவற்றை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்திருக்கிறது.

      ஆர்.கே.தயாரித்துத் தந்த பிரபலமான ஸ்ரீலிபி எழுத்தும், இவரது தயாரிப்பான கீபோர்டும்தான் இன்னமும் தினமலர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

       ``அப்பா ராமசுப்பைய்யர் போட்ட அஸ்திவாரம் எங்களுக்கு பலமாய் இருக்கிறது. அப்பா, தமிழ் அபிமானி, மனிதாபிமானியும் கூட அடித்தள மக்களின் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

        இப்போது என்றில்லை, அந்த நாட்களிலும், தினமலர் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் பிரச்னைகளைப் படித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது- சந்தோஷமான வெற்றி.

நன்றி   தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி                
                     
                                                                     தொடரும்....................
                                                                     

                            

முன்னேறு!முன்னேற்று! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) தொடர் 2


 அது அப்படியே மனதிலும் இரத்தத்திலும் ஊறிப்போச்சு, உழைக்கணும், முயற்சிக்கணும். வளரணும், ஏதாவது செய்து முன்னுக்கு வரணும்.உயரணும். மத்தவங்களையும் உயர்த்தணும்னு ஆரம்பித்த ஓட்டம் இன்னும் தொடர்கிறது!’’

  உதவியாளர் தேநீர் கொண்டு வர ``எடுத்துக்கங்க’’ என்கிறார். அது ஏலம் –எலுமிச்சை-கிம்பு –இஞ்சி கலந்த தே(ன்)நீர்!

   கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களிடம் இரண்டு விதமான மனோபாவங்களைப் பார்க்கலாம். ``நாம் கஷ்டப்பட்டு வளர்ந்தோமே –இவர்கள் எளிதாய் மேலே வந்துவிடுவதா –இவர்களும் கஷ்டப்படட்டுமே’ என ஒரு ரகம்.

   சந்தர்ப்ப –சூழ்நிலையில் நாம் கஷ்டப்பட வேண்டி வந்தது. அந்தக் கஷ்டம் பிறருக்கு வந்துவிடக் கூடாது –இவர்கள் வளர எல்லா உதவியும் செய்து தர வேண்டும் என்று நினைப்பது அடுத்த ரகம்.   சீனிவாசன் ஐயா நிச்சயமாய் இரண்டாம் ரகம்தான்.

   உலகத்தில் ஜனங்களுக்கு மிகமிக அவசியமாய்த் தேவைப்படுவது கல்வி அறிவுதான் அது இல்லாமல் –கிடைக்காமல்தான் நம் நாட்டில் பெரும்பாலும் கீழ் மட்டத்திலேயே அல்லாடுகிறார்கள். அதுவும் குறிப்பாய்ப் பெண்கள். இந்த பகுதியில் சரியான கல்வி நிறுவனங்கள் இல்லாததால் பெண்களைப் படிக்க வைப்பதென்பதே குறைவாயிருந்தது. டவுனுக்கு அனுப்ப வசதிப் பிரச்சனை! அடுத்தது –வெளியே படிக்க வைப்பது பாதுகாப்பில்லாதது என்கிற  எண்ணம்.

  இவற்றிற்கு வழிவகுப்பதுதான் இவர்களின் நோக்கம் அந்த நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் வறண்ட பகுதியில் இத்தனை கல்வி நிறுவனங்கள் சாத்தியமாகுமா?

   ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ மாணவியர்! எட்டாயிரத்திற்கும் மேல் விடுதியில்! 150 பஸ்கள்! இவற்றில் பெரும்பாலும் இலவசம்! பஸ்ஸிற்கும், கல்விக்கும் பெரிய அளவில் கட்டணங்கள் கிடையாது! ஏழை மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள்!

   இவற்றுடன் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை. அங்கு இலவச சிகிச்சை! பெரம்பலூர் மற்றும் அக்கம் பக்கமிருந்து நோயாளிகல் பயணிக்க வாகனங்கள். அவையும் இலவசம்!.

                                                         (2)

  சீனிவாசனின் சொந்த ஊர்,  புகுந்த ஊர் எல்லாமே பெரம்பலூர் அருகேதான். இவரது தந்தை அருணாசல ரெட்டியாரின் ஊர் பெரகம்பி எனும் கிராமம். அப்பாவுக்கு மூன்று உடன் பிறப்புகள். அங்குச் சாதாரண விவசாயக் குடும்பம்.

  சொந்த ஊரில் பிழைக்க முடியாமல், அப்பா, அருகில் புது நடுவலூர் எனும் கிராமத்திற்குக் குடி பெயர்ந்திருந்தார். அங்கும் விவசாயம் தான்! அங்கும் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை!

  சீனிவாசனுடன் பிறந்தவர்கள் 5 பேர்கள். இவர் 6வது கடைசி, மூன்று உடன்பிறப்புகல் சின்ன வயதிலேயே காலரா நோய் தாக்கி இறந்து போனார்கள்.

   இங்கே அவசியம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

   சீனிவாசனின் இன்றைய வளர்ச்சி –எதைத் தொட்டாலும் சிறக்கும் –சிறப்பிக்கும் –வெற்றி பெறச் செய்யும் பாங்கு இவற்றை வைத்து இவர் `அதிர்ஷ்டசாலி’ என்று பேசுபவர்கள் உண்டு.

  அதிர்ஷ்டம் –துரதிர்ஷ்டம் இவற்றில் இவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவரது மூலதனம் –உழைப்பு –முயற்சி –போராட்டம் – தன்னம்பிக்கை!

  ஊரோடு ஒத்துக் கும்பலாய்ச் செயல்படுதல் –காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுதல் –அவையோடு அடித்துச் செல்லப்படுதல் –ஆற்று நீரோட்டத்தில் கலத்தல் இப்படி எந்தவித `சாமர்த்திய’மும் இவரிடம் இருந்ததில்லை.

  வாழ்க்கை முழுக்கவே இவருக்கு எதிர் நீச்சல்தான்! வெள்ளம், கடற்சுழற்சி, சுனாமி என்று எப்படி வர்ணித்தாலும், அவற்றிற்கு எதிராய்ப் போராடி –சோதனைகள் வர வர அவற்றை எதிர்த்து முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம்!

   அந்தந்தக் காலகட்டத்தில் தோல்விகளும், பிரச்சனைகளும் மனச் சங்கடத்தை  ஏற்படுத்தினாலும் கூட அதற்காக இவர் தளர்ந்து போவதில்லை.

   எதிர்ப்பு இவருக்கு எழுச்சி தரும். வெகுண்டெழ வைக்கும் உந்து சக்தி! எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அவற்றை மீறி வெல்ல வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்கிற ஊக்க மருந்தாகவே இவர் தடைகளையும், எதிர்ப்புகளையும் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

   கவனத்தை எந்த நேரத்திலும் வேறு எதிலும் கசிய விடுவதில்லை. ஒரே சிந்தை! ஒரே செயல்! அதனால் இவருக்கு எதிரிகளே கிடையாது. எதிரிகளாக –போட்டியாளராக யாரையும் நினைப்பதுமில்லை. தொழில் போட்டியாக ஆரம்பிப்பவருக்குக் கூட கை கொடுத்துத் தூக்கிவிடுவதுதான் இவரது சுபாவம்.

   இங்கே யாரும் யாருக்கும் எதிரியில்லை. போட்டியாளர்கள் இல்லை. அவரவர்களுக்கு உள்ளது அவரவர்க்கு! முதலில் தன்னை உணரனும். தன் பலம் அறியணும். அதற்குக் களம் அமைத்து அதற்கு ஏற்றபடி செயல்படணும். எந்தத் தருணத்திலும் நாணயம் தவறக்கூடாது நன்றி மறத்தல் கூடாது.

   வாழ்க்கையில் பணம் –காசு –சொத்து சுகம் இல்லாமல் இருக்கலாம். நம்பிக்கை –நாணயம் தவறக் கூடாது. அதில் உறுதி காப்பவர்.

   இவர் தப்பான வழிக்குச் செல்வதில்லை. கூட இருப்பவர்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அறிவுறுத்துவார். அதே போல பொய் பித்தலாட்டம் கூடாது. வாக்குக் காப்பாற்ற வேண்டும்.

   ஓரிடத்தில் ஒரு உதவியோ, பணமோ பெற்றால் அதைத் திருப்பிச் செலுத்துகிற மனப்பக்குவம் வேண்டும். அந்த உத்தரவாதமும் பொறுப்பும் இல்லாதபோது பிறரிடம் கைநீட்டவே கூடாது!

   இந்த மாதிரி இளம் பருவத்திலேயே இவருக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடுவதுண்டு. ரத்தத்தில் கீதையும், புத்தரும், விவேகானந்தரும் கலந்திருந்தனர்.

   எந்த அளவிற்கு அதிர்ஷ்டக்காரர் –எப்படியெல்லாம் அதிர்ஷ்டமும், ராசியும் அவருக்கு உறுதுணையாயிருந்திருக்கிறது?

   சீனிவாசன், பத்து மாத குழந்தையாயிருக்கும்போதே தாய் பெரியம்மாள் இறந்து போனார், அம்மாவிற்கு என்ன நோய் –என்னாயிற்று என்று தெரியாது –திடீரென வயிறு வீங்கி –அக்கம்பக்கம் போதுமான மருத்துவமனையில்லாமல் –டவுனுக்குக் கொண்டு போய்ச் சிகிச்சை கொடுக்க முடியாமல் இறந்து போனார். அம்மா இறந்த அதிர்ச்சி –துக்கத்தில் உழன்று அதிலிருந்து மீள முடியாமலேயே அடுத்த இரண்டு மாதத்தில் அப்பாவும் இறப்பு.

   வீட்டில் கடைசிப் பிள்ளையாய்ப் பிறந்து –பெற்றோர்களின் அடையாளமே தெரியாமல் அவர்களின் முகங்களைக் கூட ஞாபகப் படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு `அதிர்ஷ்டசாலி’ இவர்.

   அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா  ஒருவரும்கூட இறப்பு!

   எந்தவித ஆதரவுமின்றி கைக்குழந்தையாயிருந்த இவரை எடுத்து வளர்த்தது பாட்டி! தாய்வழிப் பாட்டி! அவர் கண்ணாப்பாடி எனும் கிராமத்திலிருந்தார். அவரும் தாத்தாவை இழந்து தனி மரமாசு!

   அங்கே சமாளிக்கக்கூடிய அளவிற்குக் கொஞ்சம் வசதி இருந்தது. அதன்பிறகு இவரது குடும்பத்திற்கு எல்லாமே பாட்டிதான்! அன்பு –ஆதரவு –நல்லொழுக்கம் –நற்சிந்தனைகளை போதித்தல் – ஊக்கம் –உற்சாகம் தந்து வளர்த்த்தெல்லாம் அவர்தான்.

   பாட்டி, தன் பேரப்பசங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி சீராட்டி, பாராட்டித்தான் வளர்த்தார். ஆனால் இவரது அண்ணன்கள் இருவர் பொறுப்பாய் இல்லை. வீட்டைப் பகைத்துக் கொண்டு எதிர்மறையாய்ச் செயல்பட ஆரம்பித்தனர். வேண்டாத கூட்டுச் சேர்ந்து ஊதாரித்தனம்!

Monday, July 23, 2012

ஞான முத்திரை : அறிவு முத்திரை




ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். 
முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 
இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது.
நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.
பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன. ஆகவே இந்த முத்திரை,
  • ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
  • கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
  • ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

யோக முத்திரைகள்: முன்னுரை


பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர், மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும். 
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.
கட்டை விரல் - நெருப்பையும் 
சுட்டுவிரல் - காற்றையும் 
நடுவிரல் - ஆகாயத்தையும் 
மோதிர விரல் - நிலத்தையும் 
சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.
இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.
                                          
 நன்றி:- சாந்தன்.கோம்

Sunday, July 22, 2012

Java Programming Tutorial - 2 - Running a Java Program

Java Programming Tutorial - 1

சிந்து சமவெளி நாகரீகமும் சரஸ்வதி நதியும்


சிந்துசமவெளி நாகரீகம் என அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் "சரஸ்வதி நதி" பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட "புதிய ஆய்வில்" இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"ஹரப்பா நாகரீகத்தின் நீர் வழி கட்டமைப்பு", என்னும் புதியஆய்வு சமீபத்தில் ஒருமுடிவுக்கு வந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆறுகள்தான் காப்பாற்றி வந்தன. அந்த ஆறுகளை வளப்படுத்தி வந்த "பருவ மழைகள் "கிழக்குத் திசை" நோக்கி இடம் பெயர்ந்ததால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துவிட்டது. இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆறுகள் வற்றிப்போனதால் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துபோனது. 2003 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ருமானியா ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தஆய்வை மேற் கொண்டனர். சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு "விதிவசத்தால் நேர்ந்த கொடுமையான "அயல் நாட்டுப் படையெடுப்புதான்" காரணம் என்று இதுவரை பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பொய் என நிரூபிக்கின்றன. ஆறுகள் தங்கள்போக்கை மாற்றி கொண்டதால் தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது என்னும் வாதத்தையும் இந்தகண்டுபிடிப்பு பொய் ஆக்குகிறது. இப்போது சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் அழைக்கும் நாகரீகம் சரஸ்வதி நதியின் கரையில் அமைந்து இருந்தது என்னும் கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.

சரஸ்வதி நதி புராணத்திலும், வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களாக இதுவரை பல தொல்பொருள் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவீதத்திற்கும் மேலானவை இந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சரஸ்வதி நதிவறண்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 அகழ்வாராய்ச்சி படிமங்களில் 2000 கும் மேற்பட்டவை சிந்துவெளி எல்லைக்கு அப்பால் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளில் இருந்துதான் சிந்து வெளிநாகரீகம் என்ற பெயரே வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறு வார்தைகளில் சொல்வது என்றால் சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பெரும்பகுதியில் சரஸ்வதிநதி நாகரீகம்தான். இருந்தும் நமக்கு சொல்லப்பட்டது போல், இந்த நாகரீகத்தை சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி நாம் பேசுகிறோம். அப்படித்தானே பள்ளிக் கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறோம்? பல வருடங்களாக இடதுசாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நமது அரசாங்கம், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்ததைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது உலகின் மிகப்பண்டைய நாகரீகத்தை சரஸ்வதி நதிக்கரை உருவாக்கியது என்னும் உண்மையை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் எச்சூரி சமீப வருடங்களில் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை "தொலைந்து போன சரஸ்வதி நதியை" ஆராய்வதில் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றார். 2006 ஆம் ஆண்டில் சீதாராம் எச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் பின்வருமாறு கூறி உள்ளார்.

"இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனக்கு இடப்பட்ட பணியில் இருந்து மாறிப்போகிறது. தொல்பொருள் விஷயமாக 'விஞ்ஞான பூர்வ ஆராய்சிகளை மேலேடுத்து செல்வதில் அது தவறி விட்டது. விஞ்ஞான பூர்வ இலாகாவான தொல்பொருள் ஆராய்ச்சி துறை இந்த விஷயத்தில் சரியாக செல்லவில்லை".

இப்படி திரிக்கப்பட்டாலும் கூட, விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் "சரஸ்வதி" ஒரு மாபெரும் நதியாக இருந்ததை சந்தர்பங்கள் நிரூபித்துள்ளன. நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நீர்வழிகளைக் குறித்து "பல வரைபடங்கள்" இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்துள்ள நிபுணர்கள் சரஸ்வதி நதி 1500 கிலோமீட்டர் நீளமும், 3 இல் இருந்து 15 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டு இருந்தது என்று கண்டு பிடித்துள்ளனர்.

நேஷனல் அகடமி ஆப் சயின்ஸ் நிகழ்வுகள் என்பதில் சரஸ்வதி நதி குறித்த மிக சமீபத்திய கண்டு பிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நதி இருந்தது, இந்த பண்டைய நாகரீகம் செழிக்க சரஸ்வதி நதி காரணமாக இருந்தது என்பது அந்த கண்டு பிடிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இமயமலையில் இருந்து பருவமழை காரணமாக எப்போதும் பெருக்கடுத்து வரும் தண்ணீரை சார்ந்து இருக்கவில்லை என்று அந்த கண்டுபிடுப்புப் பிரசுரம் கூறுகிறது. சரஸ்வதி நதி உள்பட அந்த நாகரீகப் பிரதேசத்தில் இருந்த நதிகள் அனைத்தும் மிகப் பெரியதாக, மிகவும் ஜீவ நதிகளாகவும் இருந்தன என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புது கண்டு பிடிப்பால் அரசாங்கத்திற்கு "புதிய சிந்தனை உருவாகுமா"? சிந்து சமவெளி நாகரீகம் என்று இப்போது அழைக்கப்படும் நாகரீகத்தை சரஸ்வதி – சிந்து – நாகரீகம் என்று அதிகாரபூர்வமாக "புதுப் பெயரிட்டு அழைக்கும் வேளை வந்து விட்டதை அரசு ஒப்புக் கொள்ளுமா? ஆனால் இடதுசாரிகள் காலம் காலமாக இதை மறுத்து வந்துள்ளது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இந்த உண்மையை பல வருடங்களாக எற்றுக் கொள்ளமல்தான் இருந்து வருகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் கலாச்சார துறை மந்திரியாக் இருந்த ஜெயபால் ரெட்டி, "இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், மண்மூடிப்போன எந்த நதி பற்றியும் கண்டு பிடிக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் சொன்னார். அவருக்கும், அவரது அரசுக்கும், சரஸ்வதி நதி என்பது கற்பனை மனங்களில் உருவானது; அந்த நதி பற்றி புராணங்கள்தான் இன்னும் அதிக கற்பனையோடு பேசுகின்றன என்ற எண்ணம் உள்ளதை ஜெயபால் ரெட்டியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. சரஸ்வதி நதி பாரம்பரிய திட்டம் என்னும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கி இருந்தது. அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைத்துவிட்டது. செப்டம்பர் 2003 இல் இந்த திட்டத்திற்கு 32 கோடிகள் செலவாகும் என்று தோரயமாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித இரக்கமும் காட்டாமல் கைவிட்டது. இன்று 5 கோடிகளாக குறைத்து. அதாவது சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடரவிடாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்து அந்த திட்டத்தையே குழி தோண்டிப் விட்டது புதைத்து.

சரஸ்வதி நதி என்பதே இல்லை என்று கூறிட காங்கிரஸ் கூட்டணி அரசு முழு முயற்சி செய்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் உள்ளன. சரஸ்வதி நதி இருந்தது என்பதற்கும், சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகம் தழைக்க சரஸ்வதி நதி ஆற்றிய இன்றியமையாத பங்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒதுக்கித்தள்ள இயலாத வகையில் இப்போது உண்மைகள் வெளி வந்துள்ளன. இப்போது கண்ணுக்கு தெரியாமல் உள்ள சரஸ்வதி நதி இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு முதல் ஐந்து வருடங்களின் மத்தியில், "விஞ்ஞானிகள் நீர் வழி பாதைகளை கண்டறிந்துள்ளனர். அவை "சந்தேகத்திற்கு இடமின்றி" (இந்த பதம் ஆராய்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டது). "வேத கால சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்கின்றது" என்று காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "சரஸ்வதி நதி பூமிக்கு கீழே ஓடுவதை" சாடிலைட் புகைப்படங்கள் நிரூபித்து உள்ளனவா"? அப்படி இருந்தால் அந்த மிகவும் இன்றியமையாத நீர் வழிப் பாதைகளை நம் நாட்டு தேவைக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது" என்பதுதான் ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியாகும். காங்கிரஸ் கூட்டணி அரசு சரஸ்வதி நதி இருந்ததை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்னும் உண்மையை அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒப்புக் கொண்டுள்ளது.

ஜோத்பூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. ராஜஸ்தான் அரசு நிலத்தடி நீர் துறையும், இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தின.அதன் முடிவுகள் "நுண்ணறிவுக்கான இந்திய சமூகத்தின் இதழில்" வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளை மத்திய நீர் வழி அமைச்சரகம் இப்போது "எழுத்து பூர்வமாக" வெளியிட்டுள்ளது. பிற விஷயங்களைத் தவிர பின் வருவனவற்றையும் அந்த ஆராய்சிகளை செய்தவர்கள் கூறியுள்ளனர்.

"ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய, ஹரப்பா நாகரீகத்தை – ஹரப்பா நாகரீகத்திற்குப் பிறகு, என பிரித்து விண்வெளி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் மூலம், இந்த நாகரீகத்தின் வடகிழக்குப் பகுதியில், வேதசரஸ்வதி நதியின் வலிமையான, தொடர்ச்சியான, கழிவு நீர்த் திட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அகழ்வாரய்சிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை... வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நதி பற்றிய வர்ணனைகளுடன் இந்த ஆராய்ச்சி முடிவுகளும், விண்வெளி புகைப் படங்களும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த விஷயம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தேசிய பொருட்காட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. தேசிய பொருட்காட்சி அலுவலகத்தில் "ஹரப்பா நாகரீகம்" என்று ஒரு அரங்கு உள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிதானமாக, அடுத்தடுத்து இந்த மக்கள் ஒரு நாகரீகத்தை உருவாக்கினர். இந்த நாகரீகம், ஹரப்பா நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சிந்து – சரஸ்வதி நாகரீகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சொல்லிவிட்டு சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறித்து அந்த அறிவிப்பு இவ்வாறு மேலும் குறிப்பிடுகிறது. "இப்போது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகி விட்டது. ஹரப்பா நாகரீகம் என்பது இரண்டு நதிகளின் நன்கொடை ஆகும். சிந்து, சரஸ்வதி என்னும் இரு நதிகளின் நன்கொடைதான் ஹரப்பா நாகரீகம் ஆகும். இது வரை நம்பப்பட்டது போல், ஹரப்பா நாகரீகம் சிந்து நதியின் நன்கொடை மட்டுமே அல்ல ".

சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த புது ஆராய்ச்சிக்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அந்த விரும்பத்தகுந்த விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த பண்டைய ஹரப்பா நாகரீகம் அழிந்து போக அந்நிய ஆக்ரமிப்புகள், படையெடுப்புகள் காரணமாக இருந்தன என்னும் வாதத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் முற்றிலும் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு பல காலம் முன்பாகவே நவரத்னா ராஜாராம் "சரஸ்வதி நதியும், வேத நாகரீகமும்" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டுபிடிப்பால், ஆர்யர்கள் இந்தியாவை ஆக்ராமித்தனர் என்ற ஆரிய திராவிட இனவாதம் முற்றிலும் பொய் என்று நிருபிக்கப்பட்டுள்ளது, என

நவரத்னா ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டு பிடிப்பு இந்த பொய்க்கு மரண அடி கொடுத்துவிட்டது என்று அவர் சரியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரிய திராவிட இனவாதம் கூறுவது என்ன? ஆரியர்கள் இந்தியாவை ஆக்ரமித்தபோது அங்கு ஹரப்பா நாகரீகம் இருந்தது. அந்த ஹரப்பா நாகரீகம் வேத சம்பந்தம் கொண்டது அல்ல. அந்த நாகரீகத்தை ஆரியர்கள் அழித்துவிட்டு, வேத நாகரீகத்தை ஸ்தாபித்தனர் என்பதுதான்.

ஆனால் சரஸ்வதி நதி குறித்த பல விவரங்கள் வேதத்தில் உள்ளது. வேத காலத்தில் சரஸ்வதி நதி ஓடியுள்ளது. எனவே வேத காலமும், ஹரப்பா நாகரீக காலமும் இணைந்தே இருந்திருக்க வேண்டும், எனவேதான் ராஜாராம் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சரியாக.

"ஹரப்பா நாகரீகம் என்பது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நாகரீகம்தான்" , அப்படி என்றால் பொருள் என்ன? ஹரப்பா நாகரீக மக்கள் வேத நாகரீகத்தை பின்பற்றியவர்கள்.

எனவே ஆரிய திராவிட இனவாதம் எவ்வளவு பெரிய ஹிமாலயப் பொய், பித்தலாட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. நிபுணர்கள் ஹரப்பா நாகரீகம் ஆக்ரமிப்பால் அழிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை, அது ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு சுத்தமாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுவது மிகச் சரியாகும். ஆரியர்கள் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்தனர் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஹரப்பா நாகரீகம் சிந்து மற்றும் சரஸ்வதி நதிக் கரைகளில் செழித்த நாகரீகம். அது வேத சம்பந்தம் கொண்டது. அந்த நாகரீகம் அழிந்ததற்கு "சரஸ்வதி நதி" வற்றிப்போனதே முக்கிய "காரணமே தவிர எந்த ஒரு அன்னியப் படையெடுப்பும் அல்ல. இதை ராஜாராமும் மற்ற பலரும் தெளிவாக்கி உள்ளனர்.

சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது மட்டும் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. சரஸ்வதி நதி ஹிமாலய நதி அல்ல என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் பல நிபுணர்கள் சரஸ்வதி நதி கார்வால் (ஹிமாலயாவில் உள்ளது) பகுதியில் உள்ள "ஹர – கி – துன்" வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி ஆகிப் பெருகி வந்தது என்று குறிப்பிடுகின்றனர். இது விஷயமாக இறுதி வார்த்தை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்
ஆங்கிலத்தில்: ராஜேஷ் சிங்
தமிழாக்கம்: லா.ரோஹிணி
நன்றி: tamilthamarai