Thursday, July 31, 2014

ட்விட்டரில் சிரிப்பாய் சிரிக்கும் துருக்கி பெண்கள்








அங்காரா: பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று துருக்கியின் துணை பிரதமர் கூறியதை அடுத்து பெண்கள் ட்விட்டரில் சிரித்துத் தள்ளுகிறார்கள். துருக்கியின் துணை பிரதமரான புலென்ட் அரின்க் பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அரின்கின் அறிவுரையை கேட்ட துருக்கிப் பெண்கள் ட்விட்டரில் தாங்கள் சிரித்தவாறு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


காகஹா(#kahkaha) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்யவிடுகிறார்கள். காகஹா என்றால் துருக்கிய மொழியில் சிரிப்பு என்று பொருள்.


அரின்க் திங்கட்கிழமை அறிவுரை செய்ததில் இருந்து கடந்த 3 நாட்களில் ஆயிரக் கணக்கான பெண்கள் தாங்கள் சிரித்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அரின்க் சீரியஸாக கூறிய விஷயத்தை துருக்கிய பெண்கள் காமெடியாக்கிவிட்டனர்.

ஒபாமாவுக்கு எதிராக வழக்கு அதிர்கின்றது அமெரிக்கா


வாஷிங்டன்: காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரிதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக திரளும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்கள்


"தம்பி மாதிரி என்னைய செயின்ட் ஜான்ஸ் பள்ளியிலா படிக்க வைத்தீர்கள்?. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள். அதனால் ஆங்கிலம் சரளமாக என்னால் பேசமுடியவில்லை. எனக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை" என்று தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி படத்தில் வசனம் பேசியிருப்பார். இந்த வசனத்துக்கு ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்கள். தண்டச்சோறு என்று திட்டும் தந்தையிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டும் தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த காரணத்தால்தான் தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்று தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதாக வசனம் பேசியிருப்பார்.

Wednesday, July 30, 2014

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிப்பு..........................



விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப் புபரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள்:

டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது

Tuesday, July 29, 2014

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள்

                                           
        
          இந்த உலகில் மிக மிக முக்கியமான மந்திர வார்த்தை முடியும் என்றால் 
முடியும் என்ற வார்த்தைதான்.
          இந்த உலகில் தனி மனிதர்களால் சாதிக்கப்பட்ட சாதனைகள் 

அனைத்திற்கும் அடித்தளமாக இருந்து எலுச்சி ஊட்டி, செயற்பட வைத்தும் 

இந்த ‘முடியும் என்றால் முடியும்’ என்ற வார்த்தைதான். 
          தனிமனிதர்கள் நம்பிக்கயுடன் சாதித்தால் அந்த நாடே பெறுமை 

பெறுகிறது. இதற்கு உதாரனமாக,
          கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுன்கள். 1999 ம் ஆண்டு 

உலகக்கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் 

சாதிப்பார். அவரால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று இதியாவே 

எதிர்பார்த்தது. 
          ஏன் எப்படி? 1996 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு உலகக்கோப்பைகளிலும் 

ரன் குவித்தலில் இவரே முதலிடம் பெற்றிருந்தார். அதாவது ஓர் 

உல்லகக்கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் 

டெண்டுல்கர்தான். 
          1996 ம் ஆண்டு உலகக்கோப்பையில் டெண்டுல்கர் ஏலு இன்னிங்ஸ்களில் 

விளையாடி மொத்தம் 523 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்களும் 

அடங்கும்.
          ஆனால் 1999 ம் ஆண்டு உலகக்கோபையில் சூழ் நிலை மாறிவிட்டது. முதல் 

இரு ஆட்டங்களில் டெண்டுல்கர் விளையாடவில்லை. அவர் தந்தை 

இறந்த்தால்  இரண்டாவது லீக் போட்டியில் விளையாடாமல் மும்பைய்க்குத் 

திரும்பினார்.இறுதிச்சடங்கு முடிந்த மறு நாளே இங்கிலாந்து வந்து ஒரு நாள் 

பயிற்சியிலும் ஈடுபட்டார். பிறகு
          கென்யாவுடன் நடந்த போட்டியில் 140 ரன்கள் எடுத்தார். 

‘அவுட்டாக்வில்லை. இந்தியாவும் ஜெய்த்தது’. ‘என் தந்தைக்கு நான் செய்த 

உன்னமயான மரியாதை இதுதான்’.அவரது ஆன்மா இபோது சாந்தியடையும் 

என்றார். இவரால் எப்படி முடிந்தது?
         தந்தை இறந்த சோகத்தை  ஏற்றுக்கொண்டு மனதை 

வலிமையக்கிகிக்கொண்டு விளையாடினார்.இந்திய நாடே தன்மீது  

வைதிருக்கும் நம்பிக்கயைக் காப்பாற்ற வேண்டும். நமது சொந்த சோகம் 

நாட்டின் பஙளிப்புக்கு கேடு வரும் வகையில் இருக்கக்கூடாது என்ற 

அக்கறையால்தன் சாதிட்ததார். பிறகு மற்ற ஆட்டங்களில் சரியாக ஆடாத 

போதிலும் இந்த ஏழாவது உலகக் கோப்பையில்தான் மிக வேகமாக 1000 

ரன்கள் எடுத்த  முதல் வீரர் என்ற பெறுமையை டெண்டுல்கர் எடுத்தார்.
         டெண்டுல்கர் கொடுத்த உற்சாகத்தால் திராவிட் அடுத்தடுத்து இரண்டு 

சதங்கள் எடுத்தார். 1999ம் வருட உலகக்கோப்பையில் அதிக ர்ன்கள் எடுத்த 

வீரர் என்ற சிறப்பையும் ராகுல் திராவிட் பெற்றார்.இவர் எடுத்த மொத்த 

ர்ன்கள் 461.
          இலங்கயுடன் ராகுல் திராவிட்டும், கங்குலியும் ஜோடி சேர்ந்து 

விளையடினார்கள். திராவிட் 4ம் 6ம் ஆக ரன்கள் எடுத்தை பார்த்த கங்குலியும் 

தொடர்ந்து உற்சாகத்துடன் விளையாடி உலகக் கோப்பையில் 182 ரன்கள் 

எடுத்த முதல் வீரர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.
          கிரிக்கெட் வ்ளையாட்டிலேயே ஒருவரை பார்த்து ஒருவர் உற்சாகம் 

அடைந்தும் நானும் சாதிப்பேன் என்ற தீவிர நம்பிக்கயுடன் விளையடும்போது 

எவ்வளவு நல்ல பலன்கள் ஏற்படுகின்றன் என்று பாருங்கள். வெளி நாட்டில் 

சர்வதேச மேட்ச் விளையாடும் போது அந்த திடலின் பிட்ச் நமக்கு நன்றாக 

இருக்கவேண்டும். அந்த நாட்டின் பருவ சூழ் நிலை, பந்து வீசுபவரின் திறமை 

இவற்றை எல்லாம் சமாளித்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 

முடிவெடுத்து பந்தை அடிக்க வேண்டும். 
          நம் மனதில் ‘ நன்றாக ஆடுவேன்’, ‘ஜெய்ப்பேன்’ என்ற உறுதி தீவிரமாக 

இருந்தால்தான் பதற்றமின்றி, அமைதியாக,மிகுந்த ஆற்றலுடன் ஆடி அதிக 

ரன்கள் எடுக்க முடியும்.
          உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற துடிப்பு, மனவலிமை,அனியின் ஒற்றுமை ஆஸ்ரேலிய அணியிடம் அதிகம் இருந்தது. அதனால்தான் தென்னாபிரிக்காவுடன் அரை இறுதியில் மோதும்போது கடைசி வினாடி வரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நம்பிக்கை இழக்கமல் விளையாடி வென்றார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றப்பற்றி மட்டும் இவ்வலவு தூரம் விரிவாக எழுதியதற்கு என்ன காரண்ம்? 
           உலகம் முழுவதும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் என்றார்கள்.
           அரை இறுதியின் போது பாக்கிஸ்தான் வெல்லும் என்று காப்டன் வாஸிஅக்ரம் கூறினார்.உலகமே இதை எதிர்பார்த்தது.
           ஆஸ்திரியாஅணியே ‘சிறப்பாக விளையடுவோம்.கோப்பையை வெல்லுவோம்’ அன்று கூறினார்கள்.
          முடிவில், பாகிஸ்தான் போல் திமிருடன் பேசாமல், வெற்றியைய் பற்றிய முழுமையான 
         
                                                                                                                            தெடரும்.......
          

Friday, July 25, 2014

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்


மூலவர் :          உச்சி பிள்ளையார்

தீர்த்தம் :          காவிரி
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை :                 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திரிசிராப்பள்ளி
ஊர் :                 திருச்சி
மாவட்டம் :        திருச்சி
மாநிலம் :        தமிழ்நாடு

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல்.

 தல சிறப்பு:

மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.

பொது தகவல்:

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோயிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

பிரார்த்தனை

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர் என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்,  தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.

தல வரலாறு:

மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.