Wednesday, July 23, 2014

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ?

கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள் எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு ..
1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்http://www.google.com/inputtools/windows/
2.பிறகு தமிழ் என்ற வார்த்தையை கிளிக் செய்து விட்டு , "Google Terms of Service" Apply செய்து விட்டு டவுன்லோட் கொடுங்கள் .
3.டவுன்லோட் முடிந்து இன்ஸ்டால் ஆனவுடன் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம் .

எப்படி தட்டச்சு செய்வது

இதில் தட்டச்சு செய்வது ரொம்ப எளிதுதான் ..உதாரணத்துக்கு Raja என்ற பெயரை தமிழில் தட்டச்சு செய்ய அப்படியே ஆங்கிலத்தில் Raja என்று டைப் செய்தால் போதும் ..
குறிப்பு : Win + Space கீகளை அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு தட்டச்சு செய்ய மாற்றிகொள்ளலாம் .
பயன்படுத்தி பார்த்து விட்டு , இடுகையில் சொல்லுங்கள் .
இந்த தளத்தில்
http://transliteration.yahoo.com/tamil/ இந்த வசதியை yahoo மூலமாக பயன்படுத்தலாம் .


Saturday, July 19, 2014

நேர்வழில் செல்லுங்கள்



நீங்கள் நேரே லட்சியத்தை நோக்கி செல்வது என்று தீர்மானித்தால் அதனால் என்ன நஷ்ட்டமானலும், என்ன கஷ்டம் வந்தாலும், எத்தனை கசப்பான விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் நேரே செல்ல உறுதி கொண்டால் எவ்வளவோ தொல்லைகள் குறையும். அச்சமின்றி உறுதியோடு நில்லுங்கள். தடைகளெல்லாம் மறைந்துவிடும்!. 
ஸ்ரீ அரவிந்த அன்னை

எப்போதும் நேர்வழியில் ’நன்மையே நல்லதே நடக்கும்’ என்று சிந்தித்து நேர் வழியிலேயே லட்சியத்தை அடைய முயற்சி செய்வது தான் வெற்றியையும், வாழ்க்கைக்குப் பாதுகாப்பையும் தரும்.
’முடியும் என்றால் முடியும்’ என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? நாம் நினைக்கும் நல்ல சிந்தனைகளையும், லட்சியங்களையும் எவ்வளவு தடைகள் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டு செயல்படுவது தான். 

நேர் வழி ஏன்?

மனிதன் எதைத் தீவிரமாக நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். எனவே, வெற்றி பெற எப்போதும் நேர்வழியிலேயே சிந்தித்து, நேர்வழியிலே தான் செல்ல வேண்டும். லச்சியத்தை அடைய குறுக்கு வழியிலே செல்ல நினைத்து அதன்படி சென்றால் அதற்கான பலன்களும் கெட்டதாகவே வந்து சேரும்.

‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து நேர் வழியிலேயேதுணிச்சலுடன் முயற்சி  செய்து சென்றால் வாழ்க்கை தொடர்ந்து பிரகாசமாக இருக்கும். நாம் நல்ல எண்ணங்களையே நினைத்து அதையே அடைய முயற்சி செய்யும் போது நம்மிடமிருந்து வெளியே செல்லும் நல்ல எண்ணங்கள் அதைப் போல 100 மடங்கு நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் நமக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தந்து விடுகிறது. கெட்ட எண்ணங்களையே சிந்திதால் அந்தக் கெட்ட எண்ணங்கள் 100 மடங்காகப் பெருகி நம்மை வந்தடையும் நமக்கு?.

ஏனவே, எச்சரிக்கையுடன் இருந்து நல்லதையே சிந்தித்து அதை நேர்வழியில் அடையும் விதத்திலேயே எப்போதும்தொடர்ந்து வாழுங்கள்.

  நேர்வழியின் மகத்தான நன்மை!

நிமிடத்துக்கு நிமிடம் வாழ்வியல் சூழ்நிலைகள் மாறுகின்றன. இந்த நிலையில் நாம் எப்போதும் நேர்வழியிழ் வாழ்ந்திருந்தால் தான் எதையும் சமாளித்து வெற்றி பெறும் மன உறுதி, திறமை முதலியன நம்மிடமிருந்து உற்சாகமாகப் பீறிட்டுக் கிளம்பும். ‘நேற்றுவரை நடந்தேல்லாம் இன்று மாறலாம். நாம் நேர்வழியில் நடந்திருந்தால் நன்மை அடையலாம்’ என்று கவியரசு கண்ணதாசனும் கூறுகிறார்.

எனவே, எப்போதும் சிறந்த நல்ல எண்ணங்களையே சிந்திது வாழப் பழகிக் கொள்ளுங்கள். நேர் வழியிலேயே வாழ வேண்டும் என்று தொடர்ந்து சிந்திக்கும் போது நிஜத்திலும் நேர் வழியிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்முடைய வெற்றியையும், தோல்வியையும், ஒழுக்கத் திணையும் உருவாக்குன்றன. எனவே, நல்லதையே நேர்வழியில் அடைய சிந்திதால் அதன்படியே நேர்வழியில் வெற்றி பெற்று விடுகின்றோம். வாழ்க்கையில் வெற்றியையும், ஒழுக்கத்தையும் நாம் எண்ணுகின்ற எண்ணங்களே உருவாக்குகின்றன. இதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

உறுதியுடன் கட்டுப்படுத்துங்கள்!

உங்கள் வாழ்க்கையில் திடீரென்று வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறினாலும் மனதின் சக்க்தியால் அவற்றைக் கட்டுப்படுத்தி நல்லதையே   தொடர்ந்து சிந்தித்து அதன்படி முயற்டி செய்து வாழ ஆரம்பியுங்கள். நம் ஆழ் மனதிற்கு நல்ல எது? கெட்டது எது? என்று தெரியாது . தொடர்ந்து எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதை  ந்ன்கு பெற்று கொண்டு வளர்த்து பெரிதாக்கித் நேர்வழியில் சிந்திததைப்பெற்றுதர அழைத்து செல்லுங்கள் இது மாபெரும் அரிய இரகசியம்.

நெஞ்சம் கொதிக்கின்றது

என் தசைகள் துடித்தன என்னையும் மீறி
இதயம் படபடத்தது எல்லையை தாண்டி
கைகள் உணவைத் தொட மறுத்தன பசியையும் மீறி
கண்கள் மூட மறுத்தன நித்திரையை தாண்டி
எங்கோ உணவின்றி இறந்துபோன, 
மூன்று வயதுக்குழந்தையின் படத்தை
பத்திரிகையில் பார்த்தபோது....
உலகில் யார் யார்க்கு எது எது கிடைக்காவிடினும்,
உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.....

மனிதன் மனிதனாகா

இறைவன் (அல்லது ஏதோ ஒரு சக்தி) கொடுத்த வாழ்க்கையை வீனாக வாழும் மனிதன் இவ் வாழ்க்கை சரியா தவறா எனப் புறியாத பல மனிதர்கள் தம் வாழ்க்கையை கொண்டு நாடத்த முடியாமால் பலர் தம் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளும் நிலை வந்து இருக்கிறது.

இவற்றை எவ்வாறு மனிதன் தாண்டனும் என்பது அனைவரின் மனதிலும் ஓடும் ஓர் ஆச்சரியமாய் காணப்படுகிறது. இதனை சரியாக புறிந்த மனிதன் யார் மீதும் கோபம், வெறுப்பு அகிய இரண்டுமே இதற்கு காரணம் என்பதே சரியான அதை கட்டுப்படுதுவதே மருந்து ஆகும். 

ஆகவே மனிதன் மானிடன் ஆவதும் , மிருகம் ஆவதும் அவன் கையிலே.

Thursday, April 24, 2014

ஆண்களின் மச்ச பலன்கள்

  1. · இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
  2. · நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
  3. · வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
  4. · வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
  5. · வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
  6. · வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
  7. · இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
  8. · இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
  9. · இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
  10. · இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
  11. · இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
  12. · இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
  13. · மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
  14. · மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
  15. · மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
  16. · மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
  17. · மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
  18. · நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
  19. · மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
  20. · மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
  21. · மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
  22. · மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
  23. · வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
  24. · இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
  25. · வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
  26. · இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
  27. · இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
  28. · தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
  29. · கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
  30. · கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
  31. · இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
  32. · வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
  33. · மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
  34. · வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
  35. · வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  36. · வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
  37. · தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
  38. · வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
  39. · வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
  40. · இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
  41. · முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
  42. · முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
  43. · முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.


திருமணம்



'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.

பொன்னுருக்கல்
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.
பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத் தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்ய வேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)

கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக் கால் அல்லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும். அதற்கு இப்போது கலியாண முள் முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளர வேண்டும் என்று நினைத்து கும்பத் தண்ணீரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)

முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத் தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.

நவதானியம் ஆவன:
நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.

பந்தல் அமைத்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக் கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன் படக்கூடியதாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும். சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.

மணமகன் அழைப்பு
திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறை வைக்க வேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண் வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.

கடுக்கண் பூணல்
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகி விட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப் பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்க வேண்டும். உத்தரியம் அணிய வேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்ட வேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப் பக்கமாக நிற்பார்.

மணமகன் புறப்படுதல்
வீட்டை விட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்த வேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும் போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.

பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.

தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.

கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டை மாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.

பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மணப் பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்

மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேள தாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவி விடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.
கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.
பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.

அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.

அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)

இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.

மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.

கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.

தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்

“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக
என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.
தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்ய வேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.

மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.

பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.

கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.

பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவ்ம் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் செர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.

ஏழடி நடத்தல்
பெண்ணின் வல காலை மணமகள் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
1. உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்
3. விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்
5. பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.
6. சகல் சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.
7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரனேம். இருவரும் சேர்த்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும் இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.

அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.

கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கேயாகும்.
அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத் தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப் போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும்.

பொரியிடல்
அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.
மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.
அக்கினி பகவானிடம் சேர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.
அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.

ஆசிர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.

அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்.

நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.

ஆரத்தி
இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப் படுகின்றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.

பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
* தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
* மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.
* மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
o முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
o இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு.
o மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.

அட்சதை
அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.
ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).
மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும்முறை
இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச்சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.

Wednesday, April 23, 2014