நீங்கள் நேரே லட்சியத்தை நோக்கி செல்வது என்று தீர்மானித்தால் அதனால் என்ன நஷ்ட்டமானலும், என்ன கஷ்டம் வந்தாலும், எத்தனை கசப்பான விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் நேரே செல்ல உறுதி கொண்டால் எவ்வளவோ தொல்லைகள் குறையும். அச்சமின்றி உறுதியோடு நில்லுங்கள். தடைகளெல்லாம் மறைந்துவிடும்!.
ஸ்ரீ அரவிந்த அன்னை
எப்போதும் நேர்வழியில் ’நன்மையே நல்லதே நடக்கும்’ என்று சிந்தித்து நேர் வழியிலேயே லட்சியத்தை அடைய முயற்சி செய்வது தான் வெற்றியையும், வாழ்க்கைக்குப் பாதுகாப்பையும் தரும்.
’முடியும் என்றால் முடியும்’ என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? நாம் நினைக்கும் நல்ல சிந்தனைகளையும், லட்சியங்களையும் எவ்வளவு தடைகள் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டு செயல்படுவது தான்.
நேர் வழி ஏன்?
மனிதன் எதைத் தீவிரமாக நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். எனவே, வெற்றி பெற எப்போதும் நேர்வழியிலேயே சிந்தித்து, நேர்வழியிலே தான் செல்ல வேண்டும். லச்சியத்தை அடைய குறுக்கு வழியிலே செல்ல நினைத்து அதன்படி சென்றால் அதற்கான பலன்களும் கெட்டதாகவே வந்து சேரும்.
‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து நேர் வழியிலேயேதுணிச்சலுடன் முயற்சி செய்து சென்றால் வாழ்க்கை தொடர்ந்து பிரகாசமாக இருக்கும். நாம் நல்ல எண்ணங்களையே நினைத்து அதையே அடைய முயற்சி செய்யும் போது நம்மிடமிருந்து வெளியே செல்லும் நல்ல எண்ணங்கள் அதைப் போல 100 மடங்கு நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் நமக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தந்து விடுகிறது. கெட்ட எண்ணங்களையே சிந்திதால் அந்தக் கெட்ட எண்ணங்கள் 100 மடங்காகப் பெருகி நம்மை வந்தடையும் நமக்கு?.
ஏனவே, எச்சரிக்கையுடன் இருந்து நல்லதையே சிந்தித்து அதை நேர்வழியில் அடையும் விதத்திலேயே எப்போதும்தொடர்ந்து வாழுங்கள்.
நேர்வழியின் மகத்தான நன்மை!
நிமிடத்துக்கு நிமிடம் வாழ்வியல் சூழ்நிலைகள் மாறுகின்றன. இந்த நிலையில் நாம் எப்போதும் நேர்வழியிழ் வாழ்ந்திருந்தால் தான் எதையும் சமாளித்து வெற்றி பெறும் மன உறுதி, திறமை முதலியன நம்மிடமிருந்து உற்சாகமாகப் பீறிட்டுக் கிளம்பும். ‘நேற்றுவரை நடந்தேல்லாம் இன்று மாறலாம். நாம் நேர்வழியில் நடந்திருந்தால் நன்மை அடையலாம்’ என்று கவியரசு கண்ணதாசனும் கூறுகிறார்.
எனவே, எப்போதும் சிறந்த நல்ல எண்ணங்களையே சிந்திது வாழப் பழகிக் கொள்ளுங்கள். நேர் வழியிலேயே வாழ வேண்டும் என்று தொடர்ந்து சிந்திக்கும் போது நிஜத்திலும் நேர் வழியிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்முடைய வெற்றியையும், தோல்வியையும், ஒழுக்கத் திணையும் உருவாக்குன்றன. எனவே, நல்லதையே நேர்வழியில் அடைய சிந்திதால் அதன்படியே நேர்வழியில் வெற்றி பெற்று விடுகின்றோம். வாழ்க்கையில் வெற்றியையும், ஒழுக்கத்தையும் நாம் எண்ணுகின்ற எண்ணங்களே உருவாக்குகின்றன. இதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
உறுதியுடன் கட்டுப்படுத்துங்கள்!
உங்கள் வாழ்க்கையில் திடீரென்று வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறினாலும் மனதின் சக்க்தியால் அவற்றைக் கட்டுப்படுத்தி நல்லதையே தொடர்ந்து சிந்தித்து அதன்படி முயற்டி செய்து வாழ ஆரம்பியுங்கள். நம் ஆழ் மனதிற்கு நல்ல எது? கெட்டது எது? என்று தெரியாது . தொடர்ந்து எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதை ந்ன்கு பெற்று கொண்டு வளர்த்து பெரிதாக்கித் நேர்வழியில் சிந்திததைப்பெற்றுதர அழைத்து செல்லுங்கள் இது மாபெரும் அரிய இரகசியம்.