Wednesday, April 23, 2014

தமிழ் பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு பெண்களும் ஆண்களும்.

தமிழ் பாடல்களில் மோகம் கொண்ட வெளிநாட்டு பெண்கள்




















உயிருக்காக ஓட்டம் கிராமத்திற்குள் புலி

இந்திய கிரமாத்திற்குள் நுழைந்த புலியால் பரபரப்பு மக்கள் அலரல்

திருக்குறள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
* அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
* தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
* மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
* விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
* இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
* மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
* ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
* அந்தணர் என்பதற்குப் பொருள் 'சான்றோர்' என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
* உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
* வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

Sunday, October 27, 2013

ஆழமாய்


ஆழமாய்


மறக்க முடியாத அந்த நாட்களில்
என் இதயம் வேகமாக துடித்துக்கொண்டேஇருந்தது..
அன்பு வைத்த என் உறவுகளை இழந்து விடுவேனோ என்று.....
உடம்பு சிலிர்க்கும் தினங்கள்.....
என் உயிரை மறந்த தினங்கள்....
அன்றைய பொழுதுகளில் ஓர் நாள் இரவு வானத்தைப் பார்க்கிறேன்
அழுகை வருகிறது... சிந்தினேன் கண்ணீர்....
அங்கே தெரியவில்லை நட்சத்திரங்கள்.....தெரிந்ததெல்லாம் 
இழந்துவிட்ட என் உறவுகள் என்பதால்.....................அன்புடன்

உணவு................

 உணவு................



என் தசைகள் துடித்தன என்னையும் மீறி
இதயம் படபடத்தது எல்லையை தாண்டி
கைகள் உணவைத் தொட மறுத்தன பசியையும் மீறி
கண்கள் மூட மறுத்தன நித்திரையை தாண்டி
எங்கோ உணவின்றி இறந்துபோன, 
மூன்று வயதுக்குழந்தையின் படத்தை
பத்திரிகையில் பார்த்தபோது....
உலகில் யார் யார்க்கு எது எது கிடைக்காவிடினும்,
உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.........அன்புடன் 

Sunday, October 13, 2013

குழந்தை உலகம்



              குழந்தை உலகம் 




குழந்தை உலகம் கள்ளம் கபடமற்றது. அதனால் அழகானது. அதற்குள் நீங்கள் நுழைய வாய்ப்புக் கிடைத்தால், ஈகோ பார்க்காமல் சென்று வாருங்கள். அதற்கு ஒரே தகுதி - நீங்களும் குழந்தை ஆக வேண்டும்; உடலால் அல்ல.. மனத்தால்..! 

உள் சென்று மழலை மொழியில் பேசுங்கள்... வாழ்க்கை இலக்கணம் தெரிந்துக் கொள்வீர். 
எதுவும் தெரியாததுபோல் இருங்கள்.. பல புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வீர். 
பலவீனமாக இருங்கள் .. மனம் பலம் பெரும். குழந்தையை உயர்வாக மதியுங்கள்..உங்கள் வாழ்வு உயரும்.

இன்றைய சமூக நெருக்கடியால் இறுகிப்போன மனத்தை நெகிழ்ச்சி ஆக்குவதற்குக் குழந்தை போல் சிறந்த மருந்து உலகில் என்றும் / எங்கும் இல்லை. குழந்தை என்பது மனித இனத்தின் தந்தை என ஃப்ராய்ட் வருணிப்பார். மனித மன இறுக்கத்துக்கான உளவியல் மருத்துவரே இந்தக் குழந்தை என்பேன் நான்.

எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?


எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?




எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?
மனத்துள் உள்ள எதிரிகளை உங்களால் எதிர்க்கொள்ள முடிகிறதா?

அச்சம், கோபம், கவலை, அவநம்பிக்கை, பேராசைகள், காம வேட்கைகள், புலனின்ப அடிமை பழக்கம், தகுதி மீறிய எதிர்ப்பார்ப்பு முதலிய எதிரிகளை எதிர்கொண்டு வெல்பவரானால் வெளி உலக எதிரிகளை எளிதில் எதிர்க் கொள்ள முடியும்.

நமது மனோசக்தி மேற்சொன்ன அக எதிர் எண்ணங்களுக்கு அதிகமாகச் செலவிட்டால் புற எதிரிகளைச் சமாளிப்பதற்கு தேவையான மனோசக்தி போதாமல் போய்விடும். அதனால்தான் எதிரிகளை எதிர்க் கொள்ள முடியாமல் நம்மில் பலர் தோற்றுப் போகின்றனர்.

தன்னை வென்றோர் தரணியை வெல்வார் ..
சான்று :காந்தி. இந்திய சுதந்திரம் வீரத்தால் பெற்றதல்ல. காந்தியின் மனோசக்தியால் பெற்றது.

மனோசக்தி விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை..