Saturday, August 30, 2014

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்று மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் நன்மையைகாட்டிலும் தீமையே அதிகம். இதனால் இன்று பலர் தனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ள பெரிதும் ஆசைப்படுகின்றனர். நாவிற்கு சுவை தரும் உணவைகாட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே சிறந்தது. அதிலும் எண்ணெய், நெய் நிறைந்த உணவுபொருட்களை குறைவாக உட்கொண்டால் நமது உடல் சீராக செயல்படும்.

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது. இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

மாங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது. மாங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு
கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும். இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

நல்ல எண்ணெய் வகைகளை நிறைந்துள்ளது
கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணைகளை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது. இந்த நல்ல எண்ணைகளில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து நமது உடலின் இரத்தகொழுப்பை இயல்பாக்கி கட்டுப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது
கைக்குத்தல் அரிசியின் பதபடுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூற்றிசியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது. பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது
கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

குழந்தைகளின் உணவு
கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Thursday, July 31, 2014

படுகொலை பயம்.. சோனியா பிரதமராவதை தடுக்க "கெடு" வைத்த ராகுல்..: நட்வர் சிங்கின் "குண்டுவீச்சு"

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து போராட்டம் நடத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். நட்வர்சிங்.. தீவிர அரசியலில் இருந்த காலத்திலும் சர்ச்சைதான்.. இப்போதும் சர்ச்சைதான்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2005ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நட்வர்சிங், ஈராக்குக்கான மருந்துகள், உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால் ராஜினாமா செய்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைவிட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒரு சுயசரிதை (ஒன் லைப் இஸ் நாட் எனப்) எழுதி இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட சோனியா உள்ளிட்டோரின் தூக்கம் தொலைந்தது.

கைதிகளின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எதிர்ப்பு... அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம்

வாஷிங்டன்: உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்காக சீனக் கைதிகள் மரண தண்டனை என்ற பெயரில் சீனக் கைதிகள் கொல்லப் படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மரணதண்டனை விதிக்கப்படும் கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தும் வழக்கம் உண்டு. இதற்கு நீண்ட காலமாக மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. 
அதனைத் தொடர்ந்து இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் இந்த வழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடுவதாக கடந்த 2012-ம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. விவாதம்.... இந்நிலையில், நேற்று அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழுவில் இது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீனாவில் இன்னமும் இத்தகைய உடல் உறுப்பு நீக்க செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான மற்றும் நிலையான அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறப்பட்டது. ஃபலுன் கோங் பிரிவு... குறிப்பாக கடந்த 1999-ம் ஆண்டு சீனாவில் தீய வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகத் தடை செய்யப்பட்ட ஃபலுன் கோங் பிரிவின் பெரும்பான்மையோரும், மற்ற சிறுபான்மை மதத்தினரும் இத்தகைய வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டு... மேலும், இவர்களை இலக்காகக் கொண்டு வன்முறைகளைப் பிரயோகிக்கும் அரசு, உடல் உறுப்புகளுக்காக இவர்களை மரண தண்டனை என்ற பெயரில் கொல்வதாக அமெரிக்க அரசின் தீர்மானத்திற்கான தலைமை ஆதரவாளரான இல்லியானா ரோஸ் லெஹ்டினென் குற்றம்சாட்டினார். தீர்மானம்.... இதனைத் தொடர்ந்து சீனா உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், சீன அரசுத்துறை இதுகுறித்து ஒரு விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிருப்தி... இந்தத் தீர்மானம் குறித்துக் கேள்விப்பட்ட அமெரிக்காவிற்கான சீனத் தூதரகத்தின் தகவல் தொடர்பாளரான கெங் ஷுவாங், இதற்கு சீன அரசின் வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம்... மேலும், சீன அரசின் கட்டுப்பாடுகளின்படி ஒவ்வொரு உறுப்புதானத்தின்போதும் கொடையாளரின் விருப்பம் எழுத்து மூலம் பெறப்படுகின்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

லிபியா: பெங்காஸி நகரை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

லிபியாவின் 2வது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கம் அறிவித்துள்ளது. லிபியா அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து கிளர்ச்சியாளர்கள் கை மேலோங்கி வருகிறது. இதனால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மூடியது. 
ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன. லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பான அன்சர் அல் ஷரியா கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை வன்முறைக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிர் பயத்தில் நாட்டை விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறும் மக்கள் அண்டை நாடான துனிசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அன்சர் அல் ஷரியா கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அறிவித்து தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய அன்சர் அல் ஷரியா என்ற இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது. பெங்காஸியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.


இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு பொலிவியா பிரகடனம்

காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பொலிவியா என்பது குறிப்பிடத்தக்கது.

லினோவா P780 மொபைல் ஒரு சிறப்பு பார்வை

இன்றுள்ள மொபைல் சந்தை போட்டியில் தினந்தோறும் பல மொபைல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன அதுவும் பல புதிய புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துகொண்டே இருக்கின்றது. அந்தவகையில் சென்ற மாதம் வெளிவந்து தற்போது சந்தையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது லினோவா P780 அப்படி என்னதான் இந்த மொபைலில் இருக்கிறது என்று இந்த மொபைலை கம்பெனியில் இருந்து வாங்கி 7 நாட்கள் பயன்படுத்தி பார்த்தோம். அதில் இந்த மொபைலில் பல வியக்கும் ஆப்ஷன்கள் இருப்பது நமக்கு தெரியவந்தது அப்படி மத்த மொபைல்ல இல்லாத ஆப்ஷன் அதுல மட்டும் அப்படி என்ன இருக்குதுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்க இதோ அந்த ஆப்ஷன்களை பார்போமா. இந்த மொபைலின் தனித்துவம் என்று சொன்னால் அதில் இருக்கும் பேட்டரி தான் முதலில் நமக்கு தெரிகிறது, மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரி திறன் 2000mAh தான் ஆனால் இதில் இருப்பதோ 4000mAh உள்ளது இது உங்களது பேட்டரி பேக் அப்பை இருமடங்கு தருகிறது. மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது மேலும் கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய சைட் கிரிப்புடன் கிரிப்புடன் இருக்கிறது இந்த மொபைல். இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் இந்த எடை சற்று அதிகம் தான் ஆனால் மற்ற மொபைகளை ஒப்பிடுகையில் இதன் எடை சற்று குறைவே என்று கூறலாம். இதில் பென்டிரைவ் போட்டு கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களை செக் மற்றும் காப்பி செய்தும் கொள்ளலாம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம் உண்மையிலேயே இது புதுமையான ஆப்ஷனாக நமக்கு இருந்தது. அத்தோடு இந்ச மொபைல் ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும் இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான படங்களை நாம் எடுக்கலாம்.

மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்

தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி பார்க்கலாமாங்க.



5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB க்கு ரேமும் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது. இதன் பேட்டரி திறன் 2350mAh ஆகும் மேலும் இந்த மொபைலின் விலை ரூ.10,499 ஆகும்.

ட்விட்டரில் சிரிப்பாய் சிரிக்கும் துருக்கி பெண்கள்








அங்காரா: பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று துருக்கியின் துணை பிரதமர் கூறியதை அடுத்து பெண்கள் ட்விட்டரில் சிரித்துத் தள்ளுகிறார்கள். துருக்கியின் துணை பிரதமரான புலென்ட் அரின்க் பெண்கள் பொது இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அரின்கின் அறிவுரையை கேட்ட துருக்கிப் பெண்கள் ட்விட்டரில் தாங்கள் சிரித்தவாறு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


காகஹா(#kahkaha) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்யவிடுகிறார்கள். காகஹா என்றால் துருக்கிய மொழியில் சிரிப்பு என்று பொருள்.


அரின்க் திங்கட்கிழமை அறிவுரை செய்ததில் இருந்து கடந்த 3 நாட்களில் ஆயிரக் கணக்கான பெண்கள் தாங்கள் சிரித்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அரின்க் சீரியஸாக கூறிய விஷயத்தை துருக்கிய பெண்கள் காமெடியாக்கிவிட்டனர்.

ஒபாமாவுக்கு எதிராக வழக்கு அதிர்கின்றது அமெரிக்கா


வாஷிங்டன்: காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரிதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக திரளும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்கள்


"தம்பி மாதிரி என்னைய செயின்ட் ஜான்ஸ் பள்ளியிலா படிக்க வைத்தீர்கள்?. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள். அதனால் ஆங்கிலம் சரளமாக என்னால் பேசமுடியவில்லை. எனக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை" என்று தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி படத்தில் வசனம் பேசியிருப்பார். இந்த வசனத்துக்கு ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்கள். தண்டச்சோறு என்று திட்டும் தந்தையிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டும் தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த காரணத்தால்தான் தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்று தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதாக வசனம் பேசியிருப்பார்.

Wednesday, July 30, 2014

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிப்பு..........................



விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப் புபரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள்:

டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது

Tuesday, July 29, 2014

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள்

                                           
        
          இந்த உலகில் மிக மிக முக்கியமான மந்திர வார்த்தை முடியும் என்றால் 
முடியும் என்ற வார்த்தைதான்.
          இந்த உலகில் தனி மனிதர்களால் சாதிக்கப்பட்ட சாதனைகள் 

அனைத்திற்கும் அடித்தளமாக இருந்து எலுச்சி ஊட்டி, செயற்பட வைத்தும் 

இந்த ‘முடியும் என்றால் முடியும்’ என்ற வார்த்தைதான். 
          தனிமனிதர்கள் நம்பிக்கயுடன் சாதித்தால் அந்த நாடே பெறுமை 

பெறுகிறது. இதற்கு உதாரனமாக,
          கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுன்கள். 1999 ம் ஆண்டு 

உலகக்கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் 

சாதிப்பார். அவரால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று இதியாவே 

எதிர்பார்த்தது. 
          ஏன் எப்படி? 1996 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு உலகக்கோப்பைகளிலும் 

ரன் குவித்தலில் இவரே முதலிடம் பெற்றிருந்தார். அதாவது ஓர் 

உல்லகக்கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் 

டெண்டுல்கர்தான். 
          1996 ம் ஆண்டு உலகக்கோப்பையில் டெண்டுல்கர் ஏலு இன்னிங்ஸ்களில் 

விளையாடி மொத்தம் 523 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்களும் 

அடங்கும்.
          ஆனால் 1999 ம் ஆண்டு உலகக்கோபையில் சூழ் நிலை மாறிவிட்டது. முதல் 

இரு ஆட்டங்களில் டெண்டுல்கர் விளையாடவில்லை. அவர் தந்தை 

இறந்த்தால்  இரண்டாவது லீக் போட்டியில் விளையாடாமல் மும்பைய்க்குத் 

திரும்பினார்.இறுதிச்சடங்கு முடிந்த மறு நாளே இங்கிலாந்து வந்து ஒரு நாள் 

பயிற்சியிலும் ஈடுபட்டார். பிறகு
          கென்யாவுடன் நடந்த போட்டியில் 140 ரன்கள் எடுத்தார். 

‘அவுட்டாக்வில்லை. இந்தியாவும் ஜெய்த்தது’. ‘என் தந்தைக்கு நான் செய்த 

உன்னமயான மரியாதை இதுதான்’.அவரது ஆன்மா இபோது சாந்தியடையும் 

என்றார். இவரால் எப்படி முடிந்தது?
         தந்தை இறந்த சோகத்தை  ஏற்றுக்கொண்டு மனதை 

வலிமையக்கிகிக்கொண்டு விளையாடினார்.இந்திய நாடே தன்மீது  

வைதிருக்கும் நம்பிக்கயைக் காப்பாற்ற வேண்டும். நமது சொந்த சோகம் 

நாட்டின் பஙளிப்புக்கு கேடு வரும் வகையில் இருக்கக்கூடாது என்ற 

அக்கறையால்தன் சாதிட்ததார். பிறகு மற்ற ஆட்டங்களில் சரியாக ஆடாத 

போதிலும் இந்த ஏழாவது உலகக் கோப்பையில்தான் மிக வேகமாக 1000 

ரன்கள் எடுத்த  முதல் வீரர் என்ற பெறுமையை டெண்டுல்கர் எடுத்தார்.
         டெண்டுல்கர் கொடுத்த உற்சாகத்தால் திராவிட் அடுத்தடுத்து இரண்டு 

சதங்கள் எடுத்தார். 1999ம் வருட உலகக்கோப்பையில் அதிக ர்ன்கள் எடுத்த 

வீரர் என்ற சிறப்பையும் ராகுல் திராவிட் பெற்றார்.இவர் எடுத்த மொத்த 

ர்ன்கள் 461.
          இலங்கயுடன் ராகுல் திராவிட்டும், கங்குலியும் ஜோடி சேர்ந்து 

விளையடினார்கள். திராவிட் 4ம் 6ம் ஆக ரன்கள் எடுத்தை பார்த்த கங்குலியும் 

தொடர்ந்து உற்சாகத்துடன் விளையாடி உலகக் கோப்பையில் 182 ரன்கள் 

எடுத்த முதல் வீரர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.
          கிரிக்கெட் வ்ளையாட்டிலேயே ஒருவரை பார்த்து ஒருவர் உற்சாகம் 

அடைந்தும் நானும் சாதிப்பேன் என்ற தீவிர நம்பிக்கயுடன் விளையடும்போது 

எவ்வளவு நல்ல பலன்கள் ஏற்படுகின்றன் என்று பாருங்கள். வெளி நாட்டில் 

சர்வதேச மேட்ச் விளையாடும் போது அந்த திடலின் பிட்ச் நமக்கு நன்றாக 

இருக்கவேண்டும். அந்த நாட்டின் பருவ சூழ் நிலை, பந்து வீசுபவரின் திறமை 

இவற்றை எல்லாம் சமாளித்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 

முடிவெடுத்து பந்தை அடிக்க வேண்டும். 
          நம் மனதில் ‘ நன்றாக ஆடுவேன்’, ‘ஜெய்ப்பேன்’ என்ற உறுதி தீவிரமாக 

இருந்தால்தான் பதற்றமின்றி, அமைதியாக,மிகுந்த ஆற்றலுடன் ஆடி அதிக 

ரன்கள் எடுக்க முடியும்.
          உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற துடிப்பு, மனவலிமை,அனியின் ஒற்றுமை ஆஸ்ரேலிய அணியிடம் அதிகம் இருந்தது. அதனால்தான் தென்னாபிரிக்காவுடன் அரை இறுதியில் மோதும்போது கடைசி வினாடி வரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நம்பிக்கை இழக்கமல் விளையாடி வென்றார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றப்பற்றி மட்டும் இவ்வலவு தூரம் விரிவாக எழுதியதற்கு என்ன காரண்ம்? 
           உலகம் முழுவதும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் என்றார்கள்.
           அரை இறுதியின் போது பாக்கிஸ்தான் வெல்லும் என்று காப்டன் வாஸிஅக்ரம் கூறினார்.உலகமே இதை எதிர்பார்த்தது.
           ஆஸ்திரியாஅணியே ‘சிறப்பாக விளையடுவோம்.கோப்பையை வெல்லுவோம்’ அன்று கூறினார்கள்.
          முடிவில், பாகிஸ்தான் போல் திமிருடன் பேசாமல், வெற்றியைய் பற்றிய முழுமையான 
         
                                                                                                                            தெடரும்.......
          

Friday, July 25, 2014

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்


மூலவர் :          உச்சி பிள்ளையார்

தீர்த்தம் :          காவிரி
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை :                 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திரிசிராப்பள்ளி
ஊர் :                 திருச்சி
மாவட்டம் :        திருச்சி
மாநிலம் :        தமிழ்நாடு

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல்.

 தல சிறப்பு:

மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.

பொது தகவல்:

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோயிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

பிரார்த்தனை

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர் என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்,  தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.

தல வரலாறு:

மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.

Wednesday, July 23, 2014

கணினிக் கலைச்சொற்கள் தமிழ்

ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. ஆனால் அவற்றின் ஆங்கிலப் பதங்களை அறிந்திருத்தல் புதிதாக கணினி பயில் விரும்புவோருக்கு காட்டாயமாகின்றது.


இதில் கணினித் தமிழ் ஆர்வலர்கள், இணையத் தமிழ் சமூக குழுமங்கள், ஊடகத் துறையினர், எழுத்தாளர்கள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி பயனர்கள் என பலரதும் பங்கு உள்ளது.


அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் காணலாம்..

English Terms    கலைச்சொல்லாக்கம்
Access    அணுக்கம்          
Accuracy    துல்லியம்          
Action    செயல்          
Activate    இயக்கு          
Active cell    இயங்கு கலன்          
Active file    நடப்புக் கோப்பு          
Activity    செயல்பாடு          
Adapter card    பொருத்து அட்டை          
Adaptor    பொருத்தி          
Address    முகவரி          
Address bus    முகவரி பாட்டை          
Address modification    முகவரி மாற்றம்          
Addressing    முகவரியிடல்          
Administrator    நிர்வாகி          
Album    தொகுப்பு          
Algorithm language    நெறிப்பாட்டு மொழி          
Algorithm    நெறிமுறை          
Alignment    இசைவு          
Allocation    ஒதுக்கீடு          
Alpha testing    முதற்கட்ட சோதனை          
Alphabet    அகரவரிசை/நெடுங்கணக்கு          
Alphabetical    அகர வரிசைப்படி          
Alphanumeric    எண்ணெழுத்து          
Ambiguation    கவர்படுநிலை          
Amplified    பெருக்கப்பட்ட          
Analog representation    ஒப்புமை மீள்வடிவாக்கம்          
Analog    ஒப்புமை          
Analytical Engine    பகுப்பாய்வு பொறி          
Animation    அசைவூட்டம்          
Anonymous    அநாமதேய          
Anti-virus    நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்          
Appearance    தோற்றம்          
Append    பின்சேர்          
Applet    குறுநிரல்          
Application level    பயன்பாட்டு நிலை          
Application programmer    பயன்பாட்டு நிரலாளர்          
Application programming    பயன்பாட்டு நிரலாக்கம்          
Application programs    பயன்பாட்டு நிரல்கள்          
Application service provider    பயன்பாட்டுச் சேவை வழங்குனர்          
Application software    பயன்பாட்டு மென்பொருள்          
Application    செயலி          
Architecture    கட்டமைப்பு          
Archive file    காப்பகக் கோப்பு          
Archive gateway    காப்பக நுழைவாயில்          
Archive    காப்பகம்          
Archiving    காப்பகப்படுத்தல்          
Area search    பரப்பில் தேடல்          
Arithmetic    எண் கணிதம்          
Array processor    அணிச் செயலி          
Array    அணி          
Arrow key    திசை விசை/திசை குறி          
Artificial intelligence    செயற்கை நுண்ணறிவு          
Assembler    பொறிமொழியாக்கி          
Assembly Language    பொறி மொழி          
Audio blog    ஒலிதப்பதிவு          
Audio    ஒலிதம்          
Auto block    தானியங்கித் தடை          
Auto restart    தானியக்க மீள்தொடக்கம்          
Automated data processing    தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்          
Automatic    தன்னியக்க          
Auxiliary equipments    துணைக்கருவிகள்          
Auxiliary function    துணைச்செயற்கூறு          
Auxiliary memory    துணை நினைவகம்          
Auxiliary operation    துணை செயல்பாடு          
Auxiliary storage    துணை தேக்கம்          
Availability    கிடைத்தல்          
Axes    அச்சுகள்          
Back up    காப்புநகல்/காப்புநகலெடு          
Background    பின்னணி          
Backspace    பின்நகர்வு          
Bar chart    பட்டை வரைப்படம்          
Bar code    பட்டைக்குறிமுறை          
Bar code scanner    பட்டைக்குறிமுறை வருடி          
Bar printer    பட்டை அச்சுப்பொறி          
Basic    அடிப்படை          
Batch processing    தொகுதிச்செயலாக்கம்          
Beta    அறிமுகப் பதிப்பு          
Binary Code    இரும குறிமுறை          
Binary device    இருமக் கருவி          
Binary digit    இரும இலக்கம்          
Binary number    இரும எண்          
Binary operation    இரும செயற்பாடு          
Binary system     இரும கட்டகம்          
Bit map display    நுண் படக் காட்சி          
Bit map scanning    நுண் பட வருடி          
Bit mapped screen    நுண் பட திரை          
Bit values    நுண்மியின் மதிப்புகள்          
Bit    நுண்மி          
Bitmap    நுண் படம்          
Bit-mapped font    நுண் பட எழுத்துரு          
Blank character    வெற்றுரு          
Blank page    வெற்றுப்பக்கம்          
Blanking    வெறுமைப்படுத்தல்          
Block    தடை          
Blog    வலைப்பதிவு          
Blog info    வலைப்பதிவு தகவல்கள்          
Blog tools    வலைப்பதிவுக் கருவிகள்          
Blogger    வலைப்பதிவர்          
Blogger circle    வலைப்பதிவர் வட்டம்          
Blogging    வலைப்பதிதல்          
Bookmark    புத்தகக் குறி          
Boot    தொடக்கு          
Border    கரைகள்          
Branching    கிளைப்பிரிதல்          
Bridge    இணைவி          
Broadband    அகலப்பட்டை          
Browser    உலாவி          
Browsing    உலாவுதல்          
Buddy    நண்பர்          
Bug    வழு          
Bug report    வழு அறிக்கை          
Bus    பாட்டை          
Cache    தேக்கம்          
Calculating    கணக்கிடல்          
Calculation    கணக்கீடு          
Calculator mode    கணிப்பான் நிலை          
Calculator    கணிப்பான்          
Cancel    தவிர்          
Capacity    கொள்திறன்          
Carriage return    ஏந்தி மீளல்          
Catalog    விவரப்பட்டியல்          
Category    பக்கவகை          
CD burning    குறுவட்டு எரித்தல்          
CD player    இறுவட்டு இயக்கி          
Center    மையம்/நடுவம்          
Central processing unit (CPU)    மையச் செயலகம்          
Central processor    மையச் செயலி          
Chain printer    தொடர்ப்பதிப்பான்          
Change    மாற்றல்/மாற்று          
Channel    தடம்          
Character    வரியுரு          
Character code    வரியுருக் குறி          
Character map    வரியுரு வரைப்படம்          
Character recognition    வரியுரு அறிதல்          
Character set    வரியுருக்கணம்          
Character string    வரியுருச்சரம்          
Chart    வரைப்படம்          
chat    அரட்டை          
Checkbox    தேர்வுப்பெட்டி          
Chips    சில்லுகள்          
Clear    துடை          
Click    சொடுக்கு          
Clipboard    மறைப்பலகை          
Close    மூடு          
Closed file    மூடப்பட்ட கோப்பு          
Cloud computing    முகிலக் கணிப்பு          
Collection    திரட்டல்          
Color coding    வண்ணக் குறிமுறை          
Color graphics    வண்ன வரைகலை          
Color    வண்ணம்/நிறம்          
Column split    நெடுவரிசைப் பிரிப்பு          
Column    நெடுவரிசை          
Command key    கட்டளை விசை          
Command    கட்டளை/ஆணை          
Comment    கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை          
Comments moderation    கருத்துரை மட்டுறுத்தல்          
Common storage    பொதுத்தேக்கம்          
Common    பொது          
Communication link    தொடர்பு இணைப்பு          
Communication processor    தொடர்பு செயலகம்          
Communication satellite    தொடர்பு செயற்கைக்கோள்          
Communication software    தொடர்பு மென்பொருள்          
Communication protocols    தொடர்பு நெறிமுறைகள்          
Community portal    சமுதாய வலைவாசல்          
Compact disc (CD)    குறுவட்டு/இறுவட்டு          
Comparative operator    ஒப்பீட்டு இயக்கி          
Compare    ஒப்பிடு          
Comparison    ஒப்பிடுதல்          
Compilation    தொகுப்பு          
Compiler    தொகுப்பி          
Complier language    தொகுப்பு மொழி          
Component    உறுப்புக்கூறு          
Compress    அழுத்து/அமுக்கு          
Computer engineer    கணிப் பொறியாளர்          
Computer game    கணினி விளையாட்டு          
Computer graphic    கணினி வரைகலை          
Computer language    கணினி (நிரல்) மொழி          
Computer motherboard    கணினி தாய்பலகை          
Computer network    கணினி வலையமைப்பு          
Computer operation    கணினிச் செயல்பாடுகள்          
Computer program    கணனி நிரல்          
Computer resources    கணினி வளங்கள்          
Computer user    கணினி பயனர்          
Computer utility    கணனி பயனமைப்பு          
Computer    கணினி          
Computerization    கணினிமயமாக்கல்          
Computerized data base    கணினிமய தரவு தளம்          
Computerized data processing    கணினிமய தரவு செயலாக்கம்          
Computing    கணினிப்பணி          
Condition    நிபந்தனை/நிலை          
Configuration    அமைவடிமம்          
Connectors    இணைப்பான்கள்          
Console    முனையம்          
Constants    மாறிலிகள்          
Content policy    உள்ளடக்கக் கொள்கை          
Contributions    பங்களிப்புகள்          
Contributor    பங்களிப்பாளர்/பங்களிப்போர்          
Control key    கட்டுப்பாட்டு விசை          
Control panel    கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்          
Control program    கட்டுப்பாட்டு நிரல்          
Control statement    கட்டுப்பாட்டுக்கூற்று          
Control structure    கட்டுப்பாட்டு உருவம்          
Control system    கட்டுப்பாட்டு கட்டகம்          
Control unit    கட்டுப்பாட்டு பிரிவு          
Conversion    மாற்றம்          
Convert    மாற்று          
Cookie    நினைவி          
Copy protection    நகல் காப்பு          
Copy    பிரதி/நகல்          
Copyright status    பதிப்புரிமை நிலை          
Copyright    பதிப்புரிமை          
Core storage    வளையத் தேக்கம்          
Cost analysis    விலைப் பகுப்பாய்வு          
Cost benefit analysis    விலை பயன் பகுப்பாய்வு          
Cost effectiveness    விலை பயன் திறன்          
Create    உருவாக்கு          
Crop    செதுக்கு          
Current events    நடப்பு நிகழ்வுகள்          
Cursor    சுட்டி          
Curve fitting    வளைக்கோட்டுப் பொருத்தம்          
Custom software    தனிப்பயன் மென்பொருள்          
Customize    விருப்பமை/தனிப்பயனாக்கு          
Cut    வெட்டு          
Cyber    மின்வெளி          
Dashboard    கட்டுப்பாட்டகம்          
Data    தரவு          
Data catalog    தரவு விவரப்பட்டியல்          
Data flow    தரவுப் பொழிவு          
Data processing    தரவுச் செயலாக்கம்          
Database    தரவுத்தளம்          
Decimal digit    பதின்ம இலக்கம்          
Decimal number    பதின்ம எண்          
Decimal point    பதின்ம புள்ளி          
Decimal    பதின்மம்          
Decode    குறிமுறை நீக்கு/நீக்கி          
Decompress    விரிவாக்கு          
Default    முன்னிருப்பு/இயல்பிருப்பு          
Definite    திட்டமிட்ட/தெளிவான          
Delete    அழி          
Deletion    அழித்தல்          
Description    விவரணம்/விளக்கம்          
Design    வடிவமைப்பு          
Desktop computer    மேசை கணினி          
Desktop    முகத்திரை          
Destination    அடையுமிடம்          
Developer    மேம்படுத்துனர்          
Device    கருவி          
Diagram    விளக்கப்படம்          
Digital    எண்மின்          
Disambiguated    தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய          
Disambiguation    தெளிவாக்கம்/தெளிவாக்கல்          
Discovery    கண்டறி/கண்டறிதல்          
Discuss    கலந்தாலோசி          
Disk drive    வட்டு இயக்கி          
Display name    தோற்றப்பெயர்          
Distribute    வினியோகி/வினியோகப்படுத்து          
DNS    கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]          
Document    ஆவணம்          
Documentation    ஆவணமாக்கம்          
Domain    கொற்றம்/ஆள்களமையம்          
Domain Name System    கொற்றப் பெயர்க் கட்டகம்          
Double click    இரட்டைச் சொடுக்கு          
Download    பதிவிறக்கம்          
Drag    இழு          
Driver    இயக்கி          
Drum plotter    உருளை வரைவு          
Drum printer    உருளை அச்சுப்பொறி          
Drum scanner    உருளை வருடி          
E-book    மென்நூல்          
Edit    தொகு/மாற்று          
Edit profile    சுயவிபரத்தை மாற்று          
Editor    தொகுப்பாளர்          
Educational software    அறிவியல் மென்பொருள்          
Effective    பயன்விளையத்தக்க          
Effects    விளைவுகள்          
E-governance    மின்-அரசாண்மை          
Electrical signal    மின் சமிக்ஞை          
Electronic    மின்னணு          
E-mail    மின்னஞ்சல்          
Embedded    பொதிந்துள்ள          
Emulation    போலச்செய்தல்          
Encoding    குறியாக்கம்          
Encyclopedia    கலைக்களஞ்சியம்          
End    முடிவு          
Equation    சமன்பாடு          
Erase    அழி          
Eraser    அழிப்பான்          
Expansion slots    விரிவாக்க செருகுவாய்கள்          
Expiry    கெடுமுடிவு/காலாவதி          
Extended info    விரிவாக்கப்பட்ட தகவல்          
External links    வெளி இணைப்புகள்          
External search engine    வெளித்தேடுபொறி          
FAQ     அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்          
Features    அம்சங்கள்          
Field    புலம்          
File    கோப்பு          
File management    கோப்பு மேலாண்மை          
File share    கோப்பு பகிர்வான்          
File sharing    கோப்பு பகிர்தல்          
Find    கண்டறி/தேடு          
Firewall    தீயரண்          
Firmware    நிலைப்பொருள்          
Flat monitor    தட்டை திரையகம்          
Floppy drive    நெகிழ் வட்டு          
Flow chart    நெறிமுறை விளக்கப்படம்          
Folder    கோப்புறை          
Font    எழுத்துரு          
Font and word processor    எழுத்துருவும் சொல் செயலாக்கியும்          
Font name    எழுத்துரு பெயர்          
Footer    அடிப்பாகம்          
Formal language    வடிவ மொழி          
Format    வடிவம்/வடிவூட்டம்          
Formatting    வடிவமைத்தல்          
Formula    சூத்திரம்          
Free software    இலவச மென்பொருள்          
Function    செயற்கூறு/செயற்பாடு          
Gallery    காட்சியகம்          
Gateway    நுழைவாயில்          
Global dashboard    கோளக் கட்டுப்பாட்டகம்          
Global Positioning system    கோள இருப்பிடக் கட்டகம்          
Grammar checker    இலக்கணத் திருத்தி          
Graphic    வரையியல்/வரைகலை          
Group    குழுமம்          
Guest    விருந்தினர்          
Hand held devices    கையடக்கக் கருவிகள்          
Hand held Scanner    கையடக்க வருடுபொறி          
Handwriting recognition    கையெழுத்து அறிதல்          
Hard disc    வன்வட்டு          
Hardware    வன்பொருள்          
Header    தலைப்பு          
Help center    உதவி மையம்          
Help group    உதவி குழுமம்          
High speed computer    அதிவேகக் கணினி          
Higher level language    உயர்நிலை மொழி          
Home    முகப்பு          
Homepage    முகப்புப்பக்கம்          
Horizontal line    கிடைக்கோடு          
Host computer    புரவலர் கணினி          
Hyphenation    சொல் பிரித்தல்          
Icon    உருச்சின்னம்/படவுரு          
Identity    அடையாளம்          
iDNS    வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்          
iDomain    வலைக்கொற்றம்          
Ignore    புறக்கணி          
Image    படிமம்          
Import    இறக்கம்          
Incompatible    முரண்பாடு          
Indefinite    திட்டமிடாத          
Index    சுட்டெண்          
Index variable    சுட்டுமாறி          
Information    தகவல்          
Information data    தகவல் தரவு          
Information super highways    தகவல் மீப் பெருவழிகள்          
Information technology    தகவல் தொழில்நுட்பம்          
Input unit    உள்ளீட்டுப் பகுதி          
Insert    உள்ளிடு/செருகு          
Install    நிறுவு          
Installation    நிறுவுதல்          
Integrated chips    சுற்றமைப்புச் சில்லுகள்          
Integrated circuit chips    ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்          
Inter language    மொழியிடை          
Interactive sites    ஊடாட்ட தளங்கள்          
Interests    ஆர்வங்கள்          
Interface    இடைமுகம்/இடைமுகப்பு          
Internal    உள்ளக          
Internal error    உள்ளகத் தவறு          
International    பன்னாட்டு          
International (DNS)    பன்னாட்டுக் (கொப்பெகம்)          
Internet    இணையம்          
Internet protocol address    இணைய நெறிமுறை முகவரி          
Internet protocol (IP)    இணைய நெறிமுறை          
Internet service provider (ISP)    இணையச் சேவை வழங்குனர்          
Interpreter    வரிமொழிமாற்றி/இடைமாற்று          
Invalid    செல்லாத/செல்லுபடியாகாத          
Invention    கண்டுப்பிடிப்பு          
Italic text    சாய்வெழுத்து          
Iteration    பன்முறைச் செய்தல்          
Java script    ஜாவா ஆணைத்தொகுதி          
Key    விசை          
Keyboard    விசைப்பலகை/தட்டச்சுப்பலகை          
Keypad    விசைத்தளம்          
Keyword    குறிப்புச்சொல்          
Landscape    அகலவாக்கி          
Laptop computer    மடிக்கணினி          
Layout    தளவமைப்பு          
LCD Monitor (Liquid Crystal Display)    திரவ பளிங்குத் திரையகம்          
Left click    இடதுச் சொடுக்கு          
Lexing error    தொகுத்தல் தவறு          
License    உரிமம்          
Light pen    எழுதுகோல்          
Line    கோடு/வரி          
Link    இணைப்பு/தொடுப்பு          
List    பட்டியல்          
Live    நேரடி          
Log in    புகுபதி/உற்புகு          
Log out    விடுபதி/வெளியேறு          
Machine language    பொறிமொழி          
Machine translation    எந்திர மொழிபெயர்ப்பு          
Magnetic disk    காந்த வட்டு          
Magnetic tape    காந்தா நாடா          
Main Page    முகப்புப்பக்கம்/முதற்பக்கம்          
Maintenance page    மேலாண்மைப் பக்கம்          
Management    ஆளுமை/முகாமைத்துவம்          
Mechanical calculator    எந்திர கணிப்பான்          
Media    ஊடகம்          
Media player    ஊடக இயக்கி          
Memory unit    நினைவகப் பகுதி          
Memory    நினைவகம்          
Menu    பட்டியல்          
Metadata    தரவு விவரம்          
Micro processor    நுண் செயலி          
Microphone    ஒலிவாங்கி          
Modem    இணக்கி          
Moderation    மட்டுறுத்தல்          
Moderator    மட்டுறுத்துனர்          
Monetize    மதிப்புடைச்செய்          
Monitor    கணித்திரை/திரையகம்          
More features    கூடுதல் அம்சங்கள்          
Motherboard    தாய்ப்பலகை          
Mouse    சொடுக்கி          
Multimedia    பல்லூடகம்          
Multitasking    பல்பணியாக்கம்          
My account    எனது கணக்கு          
Natural language    இயற்கை மொழி          
Navigation    வழிசெலுத்தல்          
Negative    எதிர்வு          
Network    பிணையம்/வலையமைப்பு          
Networking    வலைப்பின்னல்          
Neutral point of view    நடுநிலைநோக்கு          
New post    புதிய இடுகை          
Non-terminals    முடியா முனையங்கள்          
Notation    குறிமானம்          
Note    குறிப்பு          
Number    எண்          
Numeral    எண் முறை          
Object    பொருள்          
Offline    இணைப்பறு/இணைப்பின் வெளியே          
Online    இணைப்பில்          
Operating system    இயங்குக் கட்டகம்          
Option    தேர்வு          
Orphaned pages    உறவிலிப் பக்கங்கள்          
Other languages    பிறமொழிகள்/ஏனைய மொழிகள்          
Outsourcing    அயலாக்கம்          
Package    பொதி          
Packets    பொட்டலங்கள/பொதிகள்          
Page layout    பக்க வடிவமைப்பு          
Page views    பக்கப் பார்வைகள்          
Page    பக்கம்          
Panel    பலகை          
Paperless office    தாளில்லா அலுவலகம்          
Paragraph    பந்தி          
Parallel processing computers    இணைச் செயலாக்க கணினிகள்          
Parent category    முதன்மை பக்கவகை          
Password    கடவுச்சொல்          
Paste    ஒட்டு          
Patch    பொருத்து          
Peripherals    உபகரணங்கள்          
Permission    அனுமதி          
Personal Computer    தனி கணினி          
Photograph    புகைப்படம்          
Picture    படம்          
Piracy    களவுநகலாக்கம்          
Plug in    சொருகு/சொருகி          
Pointer    சுட்டு          
Portable Printer    கையடக்க அச்சுப்பொறி          
Portal    வலைவாசல்          
Post    இடுகை          
Posting    இடுகையிடல்          
Posts    இடுகைகள்          
Preferences    விருப்புத்தேர்வுகள்          
Presentation    அளிக்கை          
Press    அமுக்கு          
Preview    முன்தோற்றம்          
Principals    கோட்பாடு          
Print    அச்சிடு          
Printer    அச்சுப்பொறி          
Privacy    தனிக்காப்பு/தனிமறைவு          
Problem    சிக்கல்/பிரச்சினை          
Processor    செயலி          
Program    நிரல்          
Programmers    நிரலர்கள்          
Programming language    நிரலாக்க மொழி          
Prompt    தூண்டி          
Protect    காப்புச்செய்          
Protection log    தடைப்பதிகை          
Protocols    நெறிமுறைகள்          
Proxy Server    பதில் சேவையகம்          
Public domain    பொதுக்கொற்றம்/பொதுக்களம்          
Publications    வெளியீடுகள்          
Publish    பதிவிடு/வெளியிடு          
Publisher    பதிப்பாளர்          
Publishing    பதிப்பிடல்          
Query    வினா/வினவல்          
RAM (Random access memory)    நினைவகம்          
Random Page    ஒழுங்கிலாப் பக்கம்          
Recent changes    அண்மைய மாற்றங்கள்          
Recovery tool    மீட்சி கருவி          
Redirects    வழிமாற்றிகள்          
Redo    செய்தது தவிர்/திரும்பச்செய்          
Reference desk    எடுகோள் மேடை          
Reference    எடுகோள்          
Refresh    புதுப்பி          
Reinstall    மீள்நிறுவு          
Release    வெளியீடு          
Remember me    என்னை நினைவில் வை          
Removal    அகற்றல்          
Remove    அகற்று          
Replace    மீள்வை          
Reprogramming    மறுநிரலாக்கம்          
Required    வேண்டப்பட்ட/தேவைப்பட்ட          
Reset    மீட்டமை          
Restore    மீள வை/ மீள்வி          
Result    விளைவு          
Review    மீளாய்வு          
Revision    புதிபித்தல்/திருத்தம்          
Right click    வலச்சொடுக்கு          
Root    மூலம்          
Root directory    மூல அடைவு          
Router    வழிச்செயலி          
Row    குறுக்கு வரிசை/நிரை          
Rule    விதி/விதிமுறை          
Save    சேமி          
Save as    என சேமி          
Scanner    வருடுபொறி          
Screensaver    திரைக்காப்பு          
Search    தேடு/தேடல்          
Search engine    தேடு பொறி          
Search query    தேடல் வினா          
Search    தேடல்/தேடு          
Section    பகுதி          
See also    இவற்றையும் பார்          
Select    தேர்வுசெய்          
Sensor    உணரி          
Server    வழங்கி          
Sessions    அமர்வுகள்          
Setting    அமைப்புகள்          
Share my profile    எனது சுயவிவரத்தை பகிர்          
Shared files    பகிரப்பட்ட கோப்புகள்          
Shareware    பகிர்மானம்          
Shortcut    குறுவழி/குறுக்குவழி          
Show all    எல்லாம் காண்பி          
Shutdown    அணை/மூடு          
Sign in    புகுபதிகை/புகுபதிவு          
Sign off    விடுபதிகை/விடுபதி          
Sign out    வெளியேறு          
Single click    தனிச் சொடுக்கு          
Sister Projects    பிற திட்டங்கள்          
Site feed    தள ஓடை          
Socket    பொருத்துவாய்          
Software    மென்பொருள்          
Software package    மென்பொருள் பொதி          
Sorting algorithms    தீர்வு நெறிகள்          
Sorting and searching    வரிசையாக்கமும் தேடலும்          
Sound Card    ஒலிக்கிரமி          
Source code    மூலவரைவு          
Source    மூலம்          
Space    வெளி/இடைவெளி          
Spacing    இடைவெளியிடல்          
Spam    எரிதம்          
Speaker    ஒலிப்பெருக்கி          
Special pages    சிறப்பு பக்கங்கள்          
Specification    விவர வரையறை          
Spell checker    எழுத்துப் பிழை திருத்தி          
Split    பிரிப்பு          
Spooler    சுருளி          
Spreadsheet    விரித்தாள்          
Standard    நியமம்/தரப்பாடு          
Standardisation    தரப்படுத்துதல்          
Stats    புள்ளிவிவரங்கள்          
String literals    சர மதிப்புருக்கள்          
Structured programming    கட்டுரு நிரலாக்கம்          
Stub    குறுங்கட்டுரை          
Subtitle    துணையுரை          
Suffix    பின்னொட்டு          
Super Computer    மிகுவேகக் கணினி/மீக்கணினி          
Support    உதவி          
Syntax error    தொடரமைப்புத் தவறு          
Sysop    முறைமைச் செயற்படுத்துனர்          
System operator    கட்டக இயக்குநர்          
System programmer    கட்டக நிரலாளர்          
System    கட்டகம்          
Tab    தத்தல்          
Technology    தொழில் நுட்பம்          
Template    வார்ப்புரு          
Terminal    முனையம்          
Terms of service    சேவை விதிமுறைகள்          
Text formatting    உரை வடிவம்          
Text to speech    உரையை பேச்சாக்குதல்          
Text to voice    உரையைக் குரலாக்குதல்          
Theme    தோற்றக்கரு          
Theory    தேற்றை          
Thesis    தேற்று          
Time zone    நேரவலையம்          
Title    தலைப்பு          
Toolbar    கருவிப்பட்டை          
Top level domain    உயர் மட்டக் கொற்றம்          
Transistor    திரிதடையம்          
Trash    குப்பை          
Uncategorized    வகைப்படுத்தப்படாதவை          
Undo    செய்தவிர்/செய்ததைத் தவிர்          
Unit    பிரிவு          
Update    இற்றைப்படுத்து          
Upgrade    மேம்படுத்து/மேம்படுத்தல்          
Upload    பதிவேற்று          
URL    (இணைய) முகவரி          
User    பயனர்          
User account    பயனர் கணக்கு          
User’s guide    பயனர் வழிக்காட்டி          
Utility    பயனமைப்பு          
Vandalism    நாசவேலை          
Variable    மாறி/மாறுப்படுகிற          
Version    பதிப்பு          
Video blog    ஒளிதப் பதிவு          
Video    ஒளிதம்/காணொளி          
View profile    சுயவிவரம் காண்பி          
View    பார்வை          
Viewer    பார்வையாளர்          
Virtual server    மெய்நிகர்ச் சேவையகம்          
Virus    நச்சுநிரல்          
Visitor    வருகையாளர்          
Voice mail    குரலஞ்சல்          
Voice recognition    குரலறிதல்          
Volume    ஒலியளவு          
Watch list    கவனிப்புப் பட்டியல்          
Watch    கவனி          
Website    இணையத்தளம்          
Window    சாளரம்          
Wireless    கம்பியில்லா          
Wish list    விருப்பப்பட்டியல்          
Wizard    வழிகாட்டி          
Word processor    சொற் செயலி          
Working environment    பணிச்சூழல்          
Worksheet    பணித்தாள்          
Workstation    பணிநிலையம்          
World Wide Web (WWW)    வைய விரிவு வலை        

மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.

நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:

Application = விண்ணப்பம்
architecture = கட்டடக்கலை
Home = வீடு

கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:

Application = செயலி
architecture = கட்டமைப்பு
Home = முகப்பு

நிலைக்கும் கலைச்சொற்கள்
ஏனையத் துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. அதேவேளை ஒரே பொருள் கொண்ட இரண்டு மூன்று சொற்கள் பயனரின் விருப்பிற்கமைய பயன்படுத்தப்படுபவையும் உள்ளன.

"Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு" போன்ற கலைச்சொற்களில் தற்போதும் பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் "வலைப்பதிவு" மட்டுமே ஆகும்.

"Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்" என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் "கருத்துரை, பின்னூட்டம்" போன்றவைகள் மட்டும் தான்.

இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இல்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகக் கொள்ளலாம். அது எம் தமிழின் சொல்வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும்.