Saturday, July 20, 2013

வாழ்வில் வெற்றி பெறுவதற்காண 13 வழிகள்...

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம்.

  1.   பட்டினி கிடக்காதீர்கள்.
  2.  மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.
  3.  சோம்பலை துரத்தி அடியுங்கள்.
  4.  சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள்.
  5.  அதிக நேரம் உறங்காதீர்கள்.
  6.  மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.
  7.  பொறாமை அறவே இருக்கக் கூடாது.
  8.  உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள்.
  9.  பேராசை படாதீர்கள்.
  10. * மகிழ்ச்சியாக இருங்கள்.
  11.  நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.
  12.  தைரியமாக இருங்கள்.
  13.  பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

ஆழ்மனத்தின் ஆற்றல் ~ விஞ்ஞானதில் நிரூபணம்

எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன. அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.
முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.
1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.
முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.
புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில்.
பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.
அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.
முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.
ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.
முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள்.
இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.
சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள்.
நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.
மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான்.
சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.
தொடரும்....

Wednesday, July 17, 2013

புதுயுகம் படைக்கப் புறப்பட்டு .....................


                  புதுயுகம் படைக்கப்
                                                புறப்பட்டு .....................


புதுயுகம் உனக்காய் 
வாசல் திறக்கிறது 
சாதனைகள் களங்களாய்
தளங்கள் விரிகின்றன

அடுப்படிப் பதவிகள் 
மூடத்தின் வெளிப்பாடு 
நிமிர்ந்து நீ தடை வெல்ல 
புறப்பட்டு விரைவாக

தேடிவந்து சாதனைகள் 
மகுடம் சூடப் போவதில்லை 
நாடியதனைச் சென்றுநாம் 
வென்றுடனும்  தோழியரே

இமயம் வரை கால்பதிக்க 
வலிமையுண்டு எங்களிடம் 
மூலைக்குள்  முடங்கி நாம் 
மழுங்கடிக்கும் திறமைகளை 
உலகமே வியந்து பார்க்கும் 
சாதனையாய் மாற்றிடுவோம் 

மண் தந்த பெருமைகளை 
கண்முன்னே நினைத்து 
பெண் என்ற பேதமின்றி 
படைத்திடுவோம் சாதனைகள் 

தம் தேவைகளுக்காக மட்டும் 
உன்னைப் பயன்படுத்துவோரை 
துக்கி ஏறி 
துர்ருவோர தூற்றட்டும் 

நீ செல்லும் வழி 
நல்வழியாயின்
தொடர்ந்து கொண்டே இரு 
பணமும் பகட்டும் 
இறைவனிடம் செல்லாது .

Monday, July 15, 2013

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம். இனி பாலைவனத்திலும் பயிரிடலாம்.




      புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம். இனி               பாலைவனத்திலும் பயிரிடலாம்.




நீரில்லாத வறட்சியான பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பொன்றினை மெக்சிகோவைச் சேர்ந்த இரசாயனவியலாளராருவர் மேற்கொண்டுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பு என்னவெனில் நீரை உறிஞ்சி சேமித்து வைப்பதன் மூலம் அதனை எதிர்காலத்தேவைக்கு உபயோகப்படுத்தலாகும். நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும் பொருட்டு 'சொலிட் ரெய்ன்' எனும் சீனியைப் போன்ற தூள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பொட்டாசியம் பொலியகிரைலேட் எனும் மூலப் பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த தூளானது அதன் உருவத்தைப் போல 500 மடங்கு அளவு நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளக்கூடியது. மேலும் 10 கிராம் 'சொலிட் ரெய்ன்' தூள்கள் 1 லீட்டர் நீரினை ஜெல்லாக மாற்றி தம்முள் சேமித்துவைக்கும் திறன் படைத்தன. சுமார் 1 வருட காலத்திற்கு ஆவியாகாமல் அந்நீரை 'சொலிட் ரெய்ன்' தூள்கள் சேமித்து தனக்குள் வைக்கக்கூடியது.  

பின்னர் இதனை மண்ணுக்குள் போடுவதன் மூலம் தாவரங்களின் வேர்களால் அந்நீர் உறிஞ்சப்படும். இது தாவரங்கள் செழிப்பாக வளர வழிசெய்கின்றது.

இப்புதிய கண்டுபிடிப்பானது வறட்சியால்  விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைவதை பெரிதும் குறைக்குமென இதனை உருவாக்கிய மெக்சிகோ இரசாயனவியலாளரான சேர்ஜியோ ஜீசஸ் ரிகோ வெலஸ்கோ தெரிவிக்கின்றார்.

Friday, July 12, 2013

சுயபிம்பம், சுய அறிவாற்றல், சுய ஏற்பு


எனக்கு பிடித்த புத்தகத்தில் இருந்து நீங்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன்  அந்த புத்தகத்தில் உள்ளதை உள்ள படியே தருகிகிறேன் இந்த புத்தகம் எது என்றால்  ”எது உன் குறிக்கோள்” என்பதே புத்தகத்தின் பெயர் ஆகும்.. இதை எழுதியவர் “பசுமைக்குமார்” இப்படியே சொல்லிக்கொண்டே போகளாம் நான் தலையங்கத்துக்குள் வருகிறேன்…
நூல்களைப் படிப்பது, தொலைக்காட்சி, திரைப்படங்கள், இலக்கியங்கள், இணைய தளங்கள் எனப் பல சாதனங்கள் நமது அறிவற்றல் பெருக்கத்திற்குத் துணையாக இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஞானம் வளர வளர மனதில் பக்குவம் வளரும். அது ஒரு செயலை நிறைவேற்றுவதில் வெளிப்படும். அவரது செயல்போக்கு அவரது மதிப்பை உயர்த்துவதாக இருக்கும்..
சுயமதிப்பு ஒரு மாணவன் படிப்பதில் ‘திறமைசாலி’ என்ற பிம்பம் (IMAGE) பெற்றிருக்கலாம் . இன்னொரு மாணவன் விளையாட்டுப் போட்டிகளில் திறமைசாலி என்ற பிம்பம் எற்பட்டிருக்கலாம் . இப்படி மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், உழைக்கும் மக்கள் எனப் பல தரப்பினரும் தங்களுக்கென ஒரு சுய பிம்மபம்பத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
1.      சிறந்த் படிப்பாளி
2.      விளையாட்டில் சூரப்புலி
3.      பேச்சில் கெட்டிக்காரன்
4.      தையிரியசாலி
5.      இரக்க குணம் கொண்டவன்
6.      விட்டுக்கொடுப்பவன்
7.      உதவக்கூடியவன்
8.      கடும் உழைப்பாளி
9.      புத்திசாலி
10.  மரியதையானவன்
11.  தந்திரசாலி
12.  நல்லவன்
13.  வல்லவன்
14.  சகிப்புத் தன்மை கொண்டவன்
15.  சுறுசுறுப்பானவன்
இம்மாதிரி பிம்பங்கள் நல்ல பிம்பங்கள் (Good images) எனில் அவை வளர்ச்சிக்கு உதவும். மேலும் ஒருவரின் சுய மதிப்பை உயர்த்தும். ஆனால் இந்த சுய பிம்பம் (Self-images) எதிர்மறையாக இருந்துவிடுமானால் முன்னேற்றம் தடைப்படும்.
உதாரணமாக…..

  1.         சிடுமூஞ்சி
  2.         அழுமூஞ்சி
  3.         சோம்போறி
  4.         கஞ்சன்
  5.         கோபாக்காரன்
  6.         தூங்குமூஞ்சி
  7.        இளிச்சவாயன்
  8.         அரக்கத்தனமானவன்
  9.         கோழை
  10.  முட்டாள்
  11.      கெட்டவன்
  12.      மோசக்காரன்
  13.      சூழ்ச்சிக்காரன்
  14.      உதவாக்கரை
  15.       புளுகன்



    போன்று சுய பிம்பங்க: ஒருவரது வளர்ச்சிக்கு உதவாது அவை தீய பிம்பங்கள் (BAD IAMAGE).
     நாம் எப்படிப்பட்டவர் என்ற பிம்பத்தை பிறர் மனதில் தோன்றாத வரையில் நம்மைப் பற்றிய பிறரது மதிப்பீடு சரியாக அமையாது. அதனால் நம்மை பற்றிய தெளிவான சுய பிம்பத்தை ஆக்கப்பூர்வ மானதாக (நல்லதாக) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    Monday, July 8, 2013

    40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமனான வெடிப்பினால் உருவான சந்திரன்!



    40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமனான வெடிப்பினால் உருவான சந்திரன்!





    சந்திரன் எவ்வாறு உருவாகியது என்பது தொடர்பில் நீண்டகாலமாக விவாதம் இடம்பெற்று வருகின்றது.

    இந்நிலையில் பூமியிலிருந்து தான் அது தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    பூமியின் கருவிலிருந்து சுமார் 4 1/2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெடிப்பு இடம்பெற்றதாகவும் இதன்காரணமாகவே சந்திரன் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிப்பானது சுமார் 40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமனானதெனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    எம்ஸ்டர்டேர்லுள்ள வி.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் துறைசார் விஞ்ஞானியான விம் வேன் வெஸ்ட்ரெனன் என்பவரே இப் புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். சந்திரன் எவ்வாறு உருவாகியது தொடர்பாக பல வருடங்களாக  பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது விம் வேன் வெஸ்ட்ரெனனின் கருத்துப்படி சந்திரன் ஆனது பூமியின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் ஆனால் 4 1/2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெடிப்பின் போது அது பிரிந்து விண்வெளிக்குச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார்.

    இவ்வாறு ஒரு வெடிப்பு இடம்பெறுவதற்கு ஹிரோஷீமாவில் போடப்பட்டதை விட 40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமமான சக்தியுடன் கூடிய வெடிப்பொன்று இடம்பெற்றிருக்க வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

    பூமியை இரண்டு சந்திரன்கள் சுற்றி வந்தன: ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்!




    பூமியை இரண்டு சந்திரன்கள் சுற்றி வந்தன: ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்!




    முன்னைய காலங்களில் வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    சூரியக் குடும்பத்தில் சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று துணைக்கோள்கள் இருக்கும். ஆனால் நாம் வாழும் கிரகமான பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உண்டு. இந்நிலையில் முன்னைய காலங்களில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், அவை ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த முதல் நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற உயர் நிலங்கள் உருவாகி உள்ளதாகவும், ஈர்ப்பு சக்தி அலைகளால் நிலாவின் கூட்டுப் பகுதி ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுவதாகவும் அவர்களது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.