Saturday, August 3, 2013

சுய ஏற்பு , சுயமரியாதை பகுதி 2

சுய ஏற்பு (self acceptence)
ஒருவரிடம் உள்ள அறிவாற்றல் பலம் என்ன? தொழில் தகுதி திறன் என்னென்ன? செயல்படும்போது எப்படி நடந்து கொள்கிறார், முடிவுகளை எடுப்பதில் எவ்வாறு நடந்து கொள்கிறார். ஒவ்வொறு விஷயத்திலும் அவரது பலம் என்ன ? பலவீனம் என்ன என்பதை யெல்லாம் தெரிந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.
தான் ஒரு அறிவாளி என்று ஆற்றில் குதித்தால் கரை சேர முடியாது.  நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குளத்திலும் சாதாரண ஆற்றிலும் நீந்திப்பழகியவர்கள் கடலில் மூழ்கி கரையேறுவது கடினம்.
                ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியரின் பலம் அவரது அறிவாற்றல் என்றால் நீச்சல் தெரியாதது ஒரு பலவீனம். நீச்சல் தெரியாது என்ற குறைபாட்டை ஒப்புக்கொள்ளாமல் நீரில் குதித்தால் உயிருக்கு ஆபத்தாய் முடிந்துவிடும். தெரியாது விஷயத்தைத் தெரிந்த மாதிரிபாசாங்கு செய்யக்கூடாது.
                குறையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொண்டவர் தான் குறையை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வார். மற்றவர் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலம் வரை தெரிந்தபோல் பாசாங்கு செய்து கொண்டிருப்பார். பாசாங்குத் தனம் சுய மதிப்பின் வளர்ச்சிக்கு உதவாது. அதே சமயம் சுய ஏற்பு (பலம், பலவீனம்) சுயமதிப்பின் வளர்ச்சிக்கு உதவும்.

சுயமரியாதை (Self-respect)
சுயமரியாதை என்றதுமே தமிழகத்தில் பகுத்தறிவுச் சுடர் பரப்பிய, சமூக நீதிக்காகப் பாடுபட்ட த்ந்தை பெரியாரின் ஞாபகம் எற்படுவது இயல்பு,
                மானத்தோடு வாழ்வதுதான்  “சுயமரியாதை – நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனிமரியாதை” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இந்தச் சுயமரியாதை உணர்வு எல்லோருக்கும் தேவையானது. சுயமரியாதை உணர்வு எல்லோருக்கும் தேவையானது. சுயமரியாதை இல்லாதவர் தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பார்கல். மனிதன் பல்வேறு சாதி, மத, இனப் பாகுபாடுகளால் தலைகுனிந்து வாழாமல், கம்பீரமாகத் தான் ஒரு மனிதன் என்று தலை நிமிர்ந்து வாழ மனிதனுக்குச் சுயமரியாதை அவசியம்.
இந்த சுயமரியாதை சு மதிப்போடு தொடர்புடையது.
                எனவே, சுயபிம்பம், சுய அறிவாற்றல் சுய ஏற்ற்பு, சுய மர்யாதை ஆகியவற்றைச் சுயமதிப்போடும் தன்னம்பிக்கையொடும் இணைத்துப்பார்த்து வள்ர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்