Friday, April 20, 2012

பெண் சாதனையாளர் "ஜோன் ஆப் ஆர்க்"


விவசாயக் குடும்பத்தில் பிற்ந்த பெண்ணான ஜோன் ஆப் ஆர்க் படைத் தலைமையேற்று தன் தய்னாட்டிற்கு வெற்றி தேடித் தந்தது ஒரு வியப்பான செய்தி ஆனால் அவரது நாட்டைச் சேர்ந்த சிலரே, எதிரிகளுடன் சேர்ந்த ஜோனை கூண்டில் ஏற்றியது ஒரு வேதனைச் சம்பவம். 
இங்கிலாந்து மன்னன் ஜந்தாம் ஹென்றி பிரான்ஸ் நாட்டை வென்றன் அது மட்டுமல்ல அப்போதைய பிரின்ஸ் மன்னன் ஜந்தாம் சார்லஸின் மகளை மணந்து ஒரு மகனுக்கு தந்தையும் ஆனான் வருங்காலத்தில் தன் மகனே இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் அரசன் என்று கூறிவிட்டு இறந்தான்.


 இந்த காலகட்டத்தில் நலிவடைந்திருந்த பிரான்ஸை இங்கிலாந்தின் பிடியிருந்து மீட்க போரிட்டவர்களில் ஜோன் முக்கியமானவர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு சாகச கதாநாயகியாக மதிக்கப்பட்டார். இங்கிலாந்திற்கு பெரும் கோபம்  "பிரான்ஸின் மிதுதான் பிடிமானம் , ஜோனால் நழுவுகிறதே!" பிரான்ஸில் "பர்கண்டி" என்ற ஆண்டவர்களுக்கும் எரிச்சல் நேற்றுப் பிறந்த ஒறு பெண் தங்களைவிட புகழ் பெறுகிறாளே!" எனவே இவர்கள் ஜோனை சிறைப்பிடித்து ஆங்கிலேயர்களிடம் பத்தாயிரம் ப்பிராங் தொகைக்கு விற்று விட்டனர். ஆங்கிலேய அரசு ஜோனின் மீது வழ்க்கு தொடுத்தது நாட்டுப்பற்றுக்காக வழக்கு தொடுக்க முடியுமா? எனவே, குள்ளநரித்தனமாக வேறொரு க்ள்த்தை தேர்ந்தெடுத்தது. தனக்கு பலவித் தெய்வீகக் குரல்கள் கேட்பதாகவும் பிரான்ஸை, இங்கிலாந்தின் பிடியிலிருந்து நீ விடுவிக்க வேண்டும் என்று அவை தனக்கு கட்டளையிடுவதாகவும்.
 ஜோன் கூறியதுண்டு கத்தோலிக்க மதப்படி தீயசக்தியான சாத்தாந்தான் அப்படிப் பேசும். எனவே தீயசக்தி கொண்ட சூனியக்காரி கொல்லப்பட வேண்டுமென்று கூறி மதச் சபையின் கருத்தையும் கோரியது ஆன்கிலேய அரசு அதுவும் தூய மைக்கேல், தூய மார்கரெட் போன்றவர்களின் குரலைக் கேட்பதாக ஜோன் கூறியது பாதகமான செயல் என்ற முழக்கமிட்டது.
 வழக்கு பெப்ரவரி 21, 1431இல் நீதிமன்றத்திற்கு வந்தது ஜோன் மீது முதலில் குற்றம் சட்டியவர் பிவைஸ் பகுதியின் பிஷப் அவரது எல்லைக்குள் தன் ஜோனைக் கைது செய்திருந்தனர் அநாகரிகமான கேள்விகளைக் கேட்ட போதும் ஜோன் அவற்றிற்குத் திறமையாகாபதிளித்தார் ஒரு கட்டத்தில் மட்டும் பொறுமையிழந்து "ஜாக்கிரதையாக இருங்கள் நான் கடவுளால் அனுப்பப்பட்டவள் வீணாகங்கள் உங்களை அபாயத்தில் சிக்க வைத்துக் கொள்ள வேண்டாம் " என்று கத்தினாள். அணிந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 'இறைவனின் கட்டளைப்படியே அனைத்தையும் செய்கிறேன்!" என்றாள் ஜோன். வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அது எடுத்துக்கொள்ளப்பட்ட போது "நான் கடவுக்கும், ரோமில் உள்ள தெய்வீகத் தந்தைக்கும் மட்டுமே பதில் அளிப்பேன்" என்ராள். 
ஜோனின் மீது 110 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன வழக்க முடியத நிலையி சீறைக்கொடுமை தாங்க முடியமல் சிறையில் மேல் தளத்திலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் ஜோன் குதிக்க அவள் மீது தற்கொலைக் குற்றச்சாட்டும் சேர்ந்து கொண்டது. கத்தோலிக்க மதத்தின் விதிகளின்படி தற்கொலை மாபெரும் பாவம்.
மே23 அன்று "தெய்வீகக் குரல் என்றெல்லாம் கூறுவதை வாபஸ் பெற்வில்லை என்றால் உன்னைத் தீயில் கொளுத்த நேரிடும்" என்றது நீதிமன்றம் "தீயின் நடுவில் நின்றாலும், நான் கூறியதைத்தான் தொடர்ந்து கூறுவேன் " என்றாள் ஜோன்.
அவளது தலை மொட்டையடிக்கப்பட்டது ஏப்ரல் 30,1443-இல் அவளைத் தீக்கிறையாக்கினர். அவளை தெய்வீகப் பெண் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவ்ள்து கருகிய உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

பத்தொம்பது வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸின் ஏழாம் சார்ல்ஸ் மன்னன் ஆங்கிலேயரை வெளியேற்றியதும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே "நூறு வருடப் போர்" நடைபெற்றது. பின்னர் பிரான்ஸ் அரசு "ஜோன் மீது சரியான முறையில் விசாரணை நடக்கவில்லை " என்று கூறி ஜோனை தெய்வீக நிலைக்கு உயர்த்தியது..

(முற்றும்..)