Thursday, July 31, 2014

கைதிகளின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எதிர்ப்பு... அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம்

வாஷிங்டன்: உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்காக சீனக் கைதிகள் மரண தண்டனை என்ற பெயரில் சீனக் கைதிகள் கொல்லப் படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மரணதண்டனை விதிக்கப்படும் கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தும் வழக்கம் உண்டு. இதற்கு நீண்ட காலமாக மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. 
அதனைத் தொடர்ந்து இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் இந்த வழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடுவதாக கடந்த 2012-ம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. விவாதம்.... இந்நிலையில், நேற்று அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழுவில் இது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீனாவில் இன்னமும் இத்தகைய உடல் உறுப்பு நீக்க செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான மற்றும் நிலையான அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறப்பட்டது. ஃபலுன் கோங் பிரிவு... குறிப்பாக கடந்த 1999-ம் ஆண்டு சீனாவில் தீய வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகத் தடை செய்யப்பட்ட ஃபலுன் கோங் பிரிவின் பெரும்பான்மையோரும், மற்ற சிறுபான்மை மதத்தினரும் இத்தகைய வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டு... மேலும், இவர்களை இலக்காகக் கொண்டு வன்முறைகளைப் பிரயோகிக்கும் அரசு, உடல் உறுப்புகளுக்காக இவர்களை மரண தண்டனை என்ற பெயரில் கொல்வதாக அமெரிக்க அரசின் தீர்மானத்திற்கான தலைமை ஆதரவாளரான இல்லியானா ரோஸ் லெஹ்டினென் குற்றம்சாட்டினார். தீர்மானம்.... இதனைத் தொடர்ந்து சீனா உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், சீன அரசுத்துறை இதுகுறித்து ஒரு விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிருப்தி... இந்தத் தீர்மானம் குறித்துக் கேள்விப்பட்ட அமெரிக்காவிற்கான சீனத் தூதரகத்தின் தகவல் தொடர்பாளரான கெங் ஷுவாங், இதற்கு சீன அரசின் வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம்... மேலும், சீன அரசின் கட்டுப்பாடுகளின்படி ஒவ்வொரு உறுப்புதானத்தின்போதும் கொடையாளரின் விருப்பம் எழுத்து மூலம் பெறப்படுகின்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.